கட்டுரைகள்

December, 2017

  • 8 December

    மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)

    மீலாதும் மௌலிதும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள புத்தகம். எழுதியவர் – அஷ்ஷையக் இஸ்மாயில் ஸலபி. புத்தகத்தை பார்க்க கீழுள்ள புத்தகத்தின் பெயரை க்ளிக் செய்யவும். Click here மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)

  • 8 December

    ஜமாஅத்துத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-31]

    பிக்ஹுல் இஸ்லாம் – 31 ஜமாஅத்துத் தொழுகை ஜமாஅத்துத் தொழுகை என்பது தனியான ஒரு தொழுகை கிடையாது. ஐவேளைத் தொழுகை மற்றும் இஸ்லாம் அங்கீகரித்த பெருநாள் மற்றும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளைத் தனியாகத் தொழாமல் அணியாக – கூட்டாகத் தொழுவதையே இது குறிக்கும். ஐவேளைத் தொழுகைகளை ஒரு இமாமைப் பின்பற்றி கூட்டாகத் தொழுவதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்திப் பேசியுள்ளது. ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பித்துப் பேசும் அதே வேளை அதைப் புறக்கணிப்பதைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளது. ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழுவது இஸ்லாத்தின் அடையாளச் ...

  • 8 December

    சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்.

    சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகின்றது. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே ...

  • 3 December

    சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]

    “பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.” “நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)” “சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.” “அவர்களை ஆட்சி ...

  • 3 December

    அனைத்தும் அவனுக்கு அடிபணிந்தவையே! [அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்]

    “அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததையா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. மேலும் அவனிடமே அவர்கள் மீட்டப்படுவார்கள்.” (3:83) இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப தனது வாழ்வை அமைத்துக் கொள்வதாகும். இஸ்லாத்தின் வழிகாட்டலை ஒரு மனிதன் மறுக்கலாம். ஆனால், அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி விட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ அவன் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்குள் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இந்தக் கட்டுப்பாட்டை யாரும் மீற முடியாது. ஒரு மனிதன் தனக்கு தாயாக, தந்தையாக யார் வர ...

  • 2 December

    சிறுபான்மைச் சமூகம்!!

    உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? ...

  • 2 December

    எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]

    “சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.” “ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.” “அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.” “அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை ...

November, 2017

  • 27 November

    ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]

    ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். எம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற ...

  • 21 November

    மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

    மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு வெளிச்சம் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு சென்ற போதுதான் அந்த ...

  • 21 November

    சமூக உருவாக்கத்தில் கணவன்-மனைவியின் பங்கு

    சமூகம் என்பது மக்களைத்தான் குறிக்கும். ஆனால், சமூக உருவாக்கம் என்பது வெறும் மக்கள் தொகையைப் பெருக்குவதைக் குறிப்பதாக அமையாது நல்ல மக்களின் உருவாக்கத்தைத்தான் அது குறிக்கும். நல்ல தனி மனிதர்களை உருவாக்குவதன் மூலம்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல தனி மனிதர்களை நல்ல குடும்பங்கள்தான் உருவாக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களாக இருப்பவர்கள் கணவன்-மனைவியரே! கணவன்-மனைவியரினூடாகத்தான் நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படும். நல்ல பல குடும்பங்கள் உருவாகும் போது நல்ல கிராமமும் நல்ல சமூகமும் உருவாக முடியும். எனவே, எழுச்சிமிக்க சமூக மாற்றத்தின் அத்திவாரங்களாக கணவன்-மனைவியர்கள்; ...