சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்.

சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.

இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகின்றது. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே கலகல என்றிருந்த காலம் என்றோ மலையேறி ஒவ்வொரு அறையிலும் தனித்தனித் தீவில் வசிப்பது போல் குழந்தைகள் செல்போன்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் மூழ்கியிருக்கின்றனர்.

இந்த நிலை எதிர்காலத்தில் பிள்ளைகளின் சமூக நடத்தை, மனவளர்ச்சி போன்ற விடயங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்கள் சவால்களை சந்திக்கத் தயங்கி ஒதுங்கி வாழவே முற்படுவர். சோதகைள், இழப்புக்கள் போன்றவற்றின் போது உடைந்து போன உள்ளத்துடன் தற்கொலை மனநிலை வரைக்கும் செல்லலாம். எனவே, நாம் மிக விரைவாக கடந்த காலத்திற்கு மாற வேண்டிய தேவையுள்ளது.

இந்தக் கோணத்தில் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் பெரியவர்களும் அவர்களுக்கு சரித்திர சம்பங்கள், குர்ஆன் ஹதீஸ்களின் நிகழ்வுகள், இஸ்லாமிய வரலாறுகள், நல்ல கதைகள் என்பவற்றைக் கூற வேண்டும். மாதிரிக்காக இங்கே ஓரிரு கதைகள் தொட்டுக்காட்டப்படுகின்றன.

குழந்தை இலக்கியத்தில் கதைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறான கதைகள் பெரும்பாலும் உருவகக் கதைகளாக அமைவதுண்டு. முயல்-ஆமை, காகம்-நரி, குரங்கு-முதலை…. என மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட கதைககளாகவே அவை அமைந்திருக்கும். இந்தக் கோணத்தில் விலங்குகள், உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் குர்ஆனிலிருந்து தொகுத்தால் மிகப்பெரிய சிறுவர் இலக்கியத் திரட்டாக அது அமைந்திருக்கும்.

1. காகத்தின் கதை

2. அழிக்கப்பட்ட யானைப்படை

3. மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்…

4. ஸாலிஹ் நபியும்… அதிசய ஒட்டகமும்…

5. எறும்பின் கதை

இவ்வாறே கஃபாவை உடைக்க வந்த யானைப்படை, ஸாலிஹ் நபியின் ஒட்டகம், உஸைர் நபியின் கழுதை, மூஸா நபியும் காளை மாடும், யூனுஸ் நபியும் மீனும்…. என அல் குர்ஆனில் ஏராளமான உண்மைச் சம்பவங்கள் உள்ளன.

இவற்றைத் தொகுத்து கதை வடிவில் வழங்கினால் பொய் கலக்காத, படிப்பினைகள் நிறைந்த சிறுவர் இலக்கியத் திரட்டாக அது அமையும். அதனூடாக சிறுவர்களின் நம்பிக்கை விடயத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம். அவர்களின் ஆளுமையை விருத்தி செய்யலாம்.

இதனூடாக சிறுவர்களுக்கு குர்ஆனுடன் ஒரு இறுக்கமான, நெருக்கமான பிணைப்பை உண்டு பண்ணலாம். குர்ஆன் பற்றிய அறிவை வழங்கலாம். அல்குர்ஆனில் தமக்குரிய சகல வழிகாட்டல்களும் உள்ளன என்ற உணர்வை ஊட்டலாம். குர்ஆனை அவர்கள் விரும்பிப் படிக்கும் பக்குவத்தை உண்டாக்கலாம்.

இந்த வகையில் குர்ஆன் கூறும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இது போன்ற கதைகள் மூலம் பெற்றோர்-மூதாதையர்களுக்கும் சமகால சந்ததிகளுக்கும் இடையில் நல்ல உணர்வுபு+ர்வமான ஒற்றுமையும், உளப்பு+ர்வமான பிணைப்பும் ஏற்படலாம். இதனூடாக பிஞ்சு உள்ளங்களில் நஞ்சைக் கலக்கும் நவீனகால சாத்தானிய சக்திகளிடமிருந்து எமது இளம் சந்ததிகளையும் காத்துக் கொள்வதுடன் துணிவுள்ள இஸ்லாமியப் பற்றுடன் கூடிய சந்ததிகளாகவும் உருவாக்கலாம்.

எனவே, இது குறித்த ஆய்வும் அவதானமும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடிப்படையாக அமையலாம். இதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.