‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் (தமக்குள்) முரண்பட்டுக் கொண்டனர். அதனால் அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் ...
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – 15 – ஸலாத்துல் வித்ர்
வித்ர் தொழுகையும் கியாமுல்லைல் தொழுகைக்குள் அடங்கக் கூடியதுதான். இருப்பினும் கியாமுல்லைல் இரவுத் தொழுகைக்கும் வித்ர் தொழுகைக்குமிடையில் சில வித்தியாசங்கள் உள்ளன. எனவே, ஹதீஸ்கலை, பிக்ஹ் கலை அறிஞர்கள் இரண்டையும் தனித்தனித் தலைப்பாக பேசியுள்ளனர். இந்த அடிப்படை யில்தான் இங்கு வித்ர் தொழுகை குறித்துத் தனித் தலைப்பாக நோக்கப்படுகின்றது. வித்ர் என்றால் ஒற்றைப்படை அதாவது 1, 3, 5, 7 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். இந்த அடிப்படையில்தான் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது. ‘உங்களில் ஒருவர் (சிறுநீர் கழித்துவிட்டு) கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதென்றால் ‘பல்யூதிர்’ ஒற்றைப்படையான ...
Read More »முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – 02
முஃதஸிலாக்களின் தோற்றமும் வளர்ச்சியும் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய மிகப்பெரிய வழிகெட்ட அமைப்புக்களில் முஃதஸிலாக்கள் பிரதானமானவர்கள். கப்ரு வழிபாடு, மூடநம்பிக்கைகள், செயல் சார்ந்த பித்அத்துக்கள் போன்றன இவர்களிடம் இல்லாவிட்டாலும் குர்ஆனைத் திரிபுபடுத்துவது, சுன்னாவை மறுப்பது, குர்ஆனுக்கு குதர்க்கமாக விளக்கமளிப்பது, நபித்தோழர்களைக் குறைத்து மதிப்பிடுவது போன்ற பிரதான வழிகேடுகள் இவர்களிடம் காணப்பட்டன. இவர்களிடம் காணப்பட்ட வழிகேடுகளை மையமாக வைத்து இவர்களை அஹ்லுஸ் ஸுன்னாவுடைய அறிஞர்கள் பல பெயர்களைக் குறிப்பிட்டு சமூகத்திற்கு அடையாளப்படுத்தினர். சென்ற இதழில் இது குறித்து நோக்கினோம். இங்கு முஃதஸிலாக்கள் தமக்குத் தாமே சூட்டிக் கொண்ட ...
Read More »சூனியத்தை நம்பியவன் சுவனம் செல்லமாட்டான் என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?
Audio mp3 (Download)
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணிப்படுத்தும் குர்ஆனும்
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணிப்படுத்தும் குர்ஆனும் ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா?: உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் ...
Read More »தாலூத்தும் ஜாலூத்தும்
அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் தாலூத்தும் ஜாலூத்தும் ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்” எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?” எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினர். ஆனால், அவர்கள் மீது போர் விதியாக்கப்பட்டபோது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்) ...
Read More »பெற்றோர் நலன் பேணுதல் – ஜும்ஆ உரை mp3 (8.01.2016)
Audio mp3 (Download)
Read More »போதையில்லாத உலகம் காண்போம்
போதையில்லாத உலகம் காண்போம் போதைவஸ்துப் பாவனை இன்றைய உலகை அழிவின் விளிம்பை நோக்கி அழைத்துச் செல்கின்றது. இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பாதாள உலக சாம்ராஜ்யத்தின் வருமானத்திற்கான வழியாகவும் இது அமைந்துள்ளது. உலகை அழிவிலும், இழிவிலும் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் அரச அங்கீகாரம் பெற்ற, பெறாத அனைத்துவகை போதை பாவனைகளும் முற்றாகத் தடுக்கப்பட வேண்டும். போதை பாவனை என்றதும் எவரும் எடுத்த எடுப்பிலேயே சாராயத்தையோ, ஹெரோயினையோ பாவிக்கப் போவதில்லை. சிகரட், பான்பராக் போன்ற தீய பழக்கங்கள் ஊடாகத்தான் போதையின் பக்கம் இன்றைய சமூகம் ...
Read More »நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்
நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் நேர்வழி ...
Read More »முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்
முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் ...
Read More »
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்