உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆட்சித் தலைவர் மீது அவநம்பிக்கையை ...

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிலும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே வேளை பைபிள் அவரை அசிங்கப்படுத்துகின்றது என்பதைச் சென்ற இதழில் நோக்கினோம். இயேசுவின் பரம்பரை: ...

Read More »

மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றனர்.’ ‘அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து ...

Read More »

ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) கட்டாயமானதாகும். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவை அடைவது ஒரு ஒட்டமாகவும் பின்னர் மர்வாவில் இருந்து ...

Read More »

சரிந்து வரும் சமூக மரியாதை

ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதாகவும் அழித்துக் கொள்வதாகவும் அமையலாம். கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து உயர்வான எண்ணம் இந்த நாட்டில் நிலவி வந்தது. நாணயமானவர்கள், நம்பிக்கையானவர்கள், நல்லவர்கள், ஒற்றுமையானவர்கள்….. இவ்வாறான ...

Read More »