யா அல்லாஹ்! கசக்கிப் போடுவாயாக!

சரித்திரப் புகழ் பெற்ற ஒரு சாம்ராஜ்யத்தைச் சரித்து வெறும் சருகாக மாற்றிய மகத்தான பிரார்த்தனை இது! பிரார்த்தனையின் வலிமையை உணர்ந்து கொள்ள ஆட்சி அதிகாரத்தை விட அல்லாஹ்வின் அங்கீகாரம் வலிமை மிக்கது என்பதை உணர்த்தும் அழகிய நிகழ்வொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஹுதைபியா உடன்படிக்கையின் பின்னர் நபியவர்கள் அண்டை நாட்டு மன்னர்களுக்குக் கடிதங்கள் மூலம் தஃவா செய்தார்கள். சிலர் கடிதத்தை மதித்தனர், பலர் மிதித்தனர். இவ்வாறே அன்றைய இரு பெரும் வல்லரசுகளில் ஒன்றான பாரசீகச் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திக்கு ஒரு மடலை எழுதி அதனை ...

Read More »

பெருநாள் தீர்மானத்தில் JASM இன் நடுநிலைப் பார்வை

கிண்ணியாவில் காணப்பட்ட பிறை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, மற்றும் பெரிய பள்ளி நிர்வாகிகளால் நிராகரிக்கப்பட்டு 9.8.2013 பெருநாளாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நாட்டில் பல பாகங்களிலும் 8.8.2013 ஆம் திகதியன்று பெருநாள் கொண்டாடப்பட்டது. JASM தலைமையகத்திலும், கிளைகளிலும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தீர்மானத்திற்கு மாற்றமாகப் பெருநாள் கொண்டாடப்பட்டது. இவ்வாறு பெருநாள் கொண்டாடியவர்கள் தவ்பா செய்ய வேண்டும்; விட்டவர்கள் நோ ன்பைக் கழாச் செய்ய வேண்டும் என பத்வா வழங்கப்பட்டதினாலும் மக்களுக்கு எமது நிலையைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் இருப்பதினாலும் நடந்தது என்ன என்பது ஒரு வரலாற்றுப் ...

Read More »

பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்

அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார். அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய போது ஸாலிமுக்குப் பாலூட்டுமாறும், அதன் மூலம் ...

Read More »

மாடு அறுப்பது தடுக்கப்பட்டால்…

பசுக்கள் மீது பாசம் இருப்பது போல் வேசம் போடும் நாசகாரக் கும்பல் ஒன்று மாடு அறுப்பதற்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிட்டு வருகின்றது. நாட்டில் பல இடங்களில் இறைச்சிக்கடைகள் தீ மூட்டப்பட்டும், மாடு ஏற்றி வரும் வாகனங்கள் தாக்கப்பட்டும் வருகின்றன. இதுவரை பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றும் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாத அளவுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு பேணப்படுகின்றது. இனவாத, மதவாதக் குழுக்களின் தாளத்துக்கு ஏற்ப அரசும் ஆடத் துவங்கிவிட்டதால் பெரும்பாலும் ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முன்னர் அல்லது தேர்தல் முடிந்த கையோடு பசுவதைத் தடைச்சட்டத்தின் கீழ் ...

Read More »

இறைவனிடம் கையேந்துங்கள்!

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை மளினப்படுத்தும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. தொடரான பல இன, மத நெருக்குதல் களுக்குள்ளாக்கப்;பட்ட இலங்கை முஸ்லிம்கள் உலவியல் ரீதியில் பாரிய மன உளைச்சல்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை ஒரு நல்ல நாடு. இங்கு வாழ்ந்த மக்களும் நல்ல மக்கள். இந்த நாட்டுக்கு நல்லதொரு அரசியல் சாசனம் உண்டு. இந்த அரசியல் சாசனம் இலங்கை மக்களுக்கு அளித்துள்ள நீதியான, நியாயமான உரிமைகள் விடயத்தில் அத்து மீறும் பௌத்த தீவிரவாதமும் அடிப்படை வாதமும் திட்டமிட்டு நாட்டில் வளர்க்கப்பட்டு வருகின்றது. இந்த ...

Read More »

அழைப்பாளர்களுக்கு (For propagators)

தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம். 1. இஹ்லாஸ் நாம் யாரை சத்தியத்தின் பால் அழைக்கின்றோமோ அந்த மக்கள் இவர் அல்லாஹ்வுக்காகத்தான் தஃவத் செய்கின்றார் என்று உறுதியாக நம்ப வேண்டும். இவர் புகழுக்காக அல்லது உலக ஆதாயத்திற்காக தஃவா செய்கின்றார் என நினைத்தால் சொல்லும் ...

Read More »

குர்ஆன் விளக்கக் குறிப்புகள்

“இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் உண்மையாளர் களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.” (2:31) மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என இந்த வசனம் கூறுகின்றது. ஆதம்(ர), ஹவ்வா(ர) இருவரையும் பூமிக்கு அனுப்பும் போதும் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் என்று கூறித்தான் அனுப்பப்பட்டனர். எனவே. அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்ட பின்னரும் அவர்களுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது என்பதை அறியலாம். கடவுள் நம்பிக்கையற்றவர்கள் மனித வரலாறு பற்றி எழுதும் போது ...

Read More »

குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவதில் ஸலபுகளின் வழிகாட்டல்

சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்: ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. “நபி(ச) அவர்கள் ஒரு அன்ஸாரியிடம் உங்களது மகளை ஜுலைபீப்(வ) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின் றீர்களா? எனக் கேட்டார்கள். அவர் மனைவியிடம் கேட்டுச் சொல்வதாகக் ...

Read More »

உலகை ஆளும் ஊடகம்

ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர். “தெரிவிப்பது நாங்கள்; தீர்மானிப்பது நீங்கள்” என ஊடகங்கள் கூறினாலும் மக்கள் எப்படித் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்பவே செய்திகள் தயாரிக்கப்படுகின்றன. தமது எண்ணத்துக்கு மாற்றமாக இருக்கும் ...

Read More »

மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…

அழைப்பாளர்களுக்கு!,… மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்… தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று கூடும் ஒரு அற்புதமான திட்டத்தை இஸ்லாம் அறிமுகப்படுத்தி அதை நடைமுறைப்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளது. ஏனைய சமூகங்களின் சமய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் கூடவேண்டும் என்றால் அது விடுமுறை ...

Read More »