கட்டுரைகள்

April, 2015

  • 6 April

    இஸ்லாம் அழைக்கிறது கடவுள் ஒருவனே!

    கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல தெய்வ நம்பிக்கையைப் பலமாக எதிர்க்கின்றது. அத்துடன், மனிதன் கடவுளாகவும் முடியாது. கடவுள் மனித அவதாரம் எடுப்பதும் இல்லை எனக் கூறி கடவுளின் பெயரால் அரங்கேற்றப் படும் ...

  • 6 April

    அல்குர்ஆன் விளக்கம் – மரண சாசனம்

        இந்த வசனம் மாற்றப்பட்ட வசனங்களில் ஒன்றாகும். ஒருவர் தனது சொத்தில் பெற்றோர், உறவினர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என மரண சாசனம் எழுதி வைப்பது ஆரம்பத்தில் கடமையாக இருந்தது. அதையே இந்த வசனம் கூறுகின்றது. இதன் பின்னர் ஸூறா நிஸாவின் ‘ஆயதுல் மவாரிஸ்’ எனப்படும் வாரிசுரிமைச் சட்டங்கள் தொடர்பான 4:11-12-13, 4:17 ஆகிய வசனங்கள் அருளப்பட்டன. இந்த வசனங்களில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரது பெற்றோர், மனைவி, ஆண்மக்கள், பெண் பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என்போர் அவரது சொத்தில் எத்தனை விகிதத்தைப் பெறுவார்கள் என்பது ...

  • 6 April

    நல்லுறவை வளர்ப்பதையும் சமூக சீர்கேடுகளை ஒழிப்பதையும் இலக்காகக் கொள்வோம்.

        கடந்த சில வருடங்களாக நம் நாட்டின் முஸ்லிம்கள் பல்வேறு நெருக்கடி நிலைகளைச் சந்தித்து வந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத, மதவாத கருத்துக்களாலும் செயற்பாடுகளாலும் மனம் சொந்து போயிருந்தனர். இனவாதப் பேய் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஆட்டம் போட்டதைப் பார்த்து ஆடிப்போயிருந்தனர். நாட்டில் எப்போது வேண்டுமானாலும் ஒரு வன்முறை உருவாக்கப்படலாம் என்ற அச்ச நிலை நீடித்தது. இதனால் சமூக நல்லிணக்க நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. பிற சமயத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முஸ்லிம்களின் பொறுமைக்கும், துஆவுக்கும், அமைதியான ...

  • 6 April

    அந்நிய தஃவா அந்நியமாய்ப் போனதேன்!

    இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும். இதில் முஸ்லிம்களாகிய நாம் இரண்டாம் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றோம். இலங்கையின் அரசியல் யாப்பு சிறுபான்மை சமூகங்களின் சகல உரிமைகளையும் உறுதி செய்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் அரசியல் ரீதியிலும் நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றால் அது மிகையல்ல. இலங்கை முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இஸ்லாமிய அறிவிலும், இஸ்லாமிய பண்பாடுகளைப் பேண வேண்டும் என்ற உணர்விலும், தனித்துவம் காக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உயர்ந்தே உள்ளனர். எமது ...

February, 2015

  • 19 February

    மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா?

    மிஃராஜ் நபித்துவத்திற்கு முன்னர் நடந்ததா? ஊரிய முறையில் விளங்காமல் வில்லங்கம் பன்னுவது முறையா صحيح البخاري (الطبعة الهندية) – (1 ஃ 1724)   3570 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي أَخِي عَنْ سُلَيْمَانَ عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي نَمِرٍ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ يُحَدِّثُنَا عَنْ لَيْلَةَِ أُسْرِيَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ مَسْجِدِ الْكَعْبَةِ جَاءَهُ (جَاءَ) ثَلَاثَةُ نَفَرٍ قَبْلَ أَنْ يُوحَى إِلَيْهِ ...

  • 5 February

    பல்லி ஹதீஸில் பல்லிழிக்கும் பகுத்தறிவு வாதம்

    இஸ்லாத்திற்கு முரணான வாதங்களை வைத்து, பொய்களைப் புணைந்து ஹதீஸ்களை மறுக்கும் வழிகெட்ட பிரிவினர் பின்வரும் ஹதீஸையும் மறுக்கின்றனர். இறைத்தூதர்(ச) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள். மேலும், அவர்கள், அது இப்ராஹீம்(ர) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’. என்றும் கூறினார்கள். ஆறிவிப்பவர்: உம்மு சுரைக் (ரழி) ஆதாரம்: புகாரி (3359) இந்த ஹதீஸ் இரண்டு விடயங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று பல்லியைக் கொல்லுங்கள் என்ற ஏவல். மற்றையது இப்றாஹீம் நபி நெருப்பில் போடப்பட்ட போது அவருக்கு எதிராக நெருப்பை அது ஊதியது என்ற ...

  • 3 February

    தெரிந்த பேயை விட்டு விட்டு தெரியாத தேவதையை அரவணைத்த இலங்கை மக்கள்

    வித்தியாசமான ஒரு தேர்தலையும், தேர்தல் முடிவையும் இலங்கை மக்கள் சந்தித்துள்ளனர். இலங்கையில் இதுவரை ஜனாதிபதியாக இருந்தவர்கள் அதிகபட்சமாக இரண்டு முறை பதவி வகித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மூன்றாவது முறையும் பதவி வகிப்பதற்காகப் போட்டியிட்டார். அவர் பதவியில் இருக்கும் போதே, இரண்டு வருடங்கள் மீதம் இருக்கும் போதே இந்தத் தேர்தல் நடந்தது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் போட்டியிட்டுத் தோல்வியடைந்தது இதுவே முதல் தடவையாகும். இவ்வாறு இந்தத் தேர்தலில் வித்தியாசமான பல அம்சங்கள் உள்ளன. முன்னாள் ஜனாதிபதியுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனாவுடன் ஒப்பிடும் போது முன்னாள் ஜனாதிபதியே ...

December, 2014

  • 21 December

    மனிதனின் உடலின் மண் தின்னாத பகுதி – நவீன விஞ்ஞானம் உறுதிப்படுத்தும் நபி மொழி!

    4935 – حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ» قَالَ: أَرْبَعُونَ يَوْمًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ شَهْرًا؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: أَرْبَعُونَ سَنَةً؟ قَالَ: أَبَيْتُ، قَالَ: «ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنَ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ البَقْلُ، لَيْسَ مِنَ الإِنْسَانِ شَيْءٌ ...

  • 11 December

    இவருக்கு எனது நன்றிகள்…

    நான் இவருக்கு நன்றி செலுத்துகின்றேன். அல்லாஹ் இவருக்கான நற்கூலியை மறுமையில் முழுமையாகவே வழங்க வேண்டும் என்று அவனிடம் பிரார்த்திற்கின்றேன். இவர் எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்தார். அதற்காக பிரார்த்தனையைத் தவிர வேறு எந்த கைமாறையும் நான் அவருக்குச் செய்ய வில்லை அவரும் அதை எதிர்பார்க்கவில்லை. இதைச் சொல்வதால் சில நன்மைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் விரிவாக விளக்க முற்படுகிறேன் இவரது பெயர் அலி. அலி நாநா என பொதுவாக அழைக்கப் படுவார். கல்வியில் ஆர்வம் உள்ள ஒரு பொது மகன். எப்போதும் கல்வி ...

  • 4 December

    மாடு பேசியதாக வரும் ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?

    மாட்டின் மீது ஏறி சவாரி செய்ய முடியுமா? முஃதஸிலா பாணியில் ஹதீஸ்களை மறுத்துவரும் வழிகேடர்கள் மறுத்து வரும் ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும். அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். بَيْنَا رَجُلٌ يَسُوقُ بَقَرَةً إِذْ رَكِبَهَا فَضَرَبَهَا فَقَالَتْ إِنَّا لَمْ نُخْلَقْ لِهَذَا إِنَّمَا خُلِقْنَا لِلْحَرْثِ فَقَالَ النَّاسُ سُبْحَانَ اللهِ بَقَرَةٌ تَكَلَّمُ فَقَالَ فَإِنِّي أُومِنُ بِهَذَا أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَمَا هُمَا ثَمَّ وَبَيْنَمَا رَجُلٌ فِي غَنَمِهِ إِذْ عَدَا الذِّئْبُ فَذَهَبَ ...