கட்டுரைகள்

July, 2015

  • 5 July

    நோன்பும் நிய்யத்தும்

    நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும். ‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (தாரமி: 1845, அபூதாவூத்: ...

June, 2015

  • 9 June

    அல்குர்ஆன் விளக்கம் சூரா பகரா – அல்லாஹ்வின் வருகை

    அல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன. ‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’ ‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’ ‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?'(89:21-23) இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் ...

  • 9 June

    முத்ஆ கூத்துக்கள்

        வளைகுடா நாடொன்றில் ஒரு வைத்தியர் பணி புரிந்து வந்தார். அவருடன் இன்னொரு ஷீஆ வைத்தியரும் பணி புரிந்து வந்தார். இவ்விருவருக்குமிடையில் பின்வருமாறு முத்ஆ தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. சுன்னா வைத்தியர்    :    முத்ஆ எனும் தற்காலிகத் திருமணம் உங்கள் மத்தியில் ஹலாலானது என்றா கூறுகின்றீர்? ஷீஆ வைத்தியர்    :    ஆம்! ஹலால்தான். சுன்னா வைத்தியர்    :    அதாவது, எந்த இடத்தில் உள்ள எந்தப் பெண்ணாக இருந்தாலும் கூலியையும் காலத்தையும் நிர்ணயித்து இந்தத் திருமணத்தைச் செய்யலாம் அப்படித்தானே? ஷீஆ வைத்தியர்    :    ஆமாம். ...

  • 9 June

    இஸ்லாம் அழைக்கிறது

        சாதிகள் இல்லையடி பாப்பா என பாடினான் ஒரு புலவன். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் ஆன்றோர் வாக்காகும். இருப்பினும் சாதி வேறுபாடு ஒழிந்ததாக  இல்லை. உலக வரலாற்றில் இரத்தக் கறை படிந்த பக்கங்கள் பலவற்றில் சாதி, இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்தக் கண்டுபிடித்த ஒன்றுதான் உயர் சாதி, தாழ் சாதி வேறுபாடு. இதை மதத்தின் பெயரிலேயே மனித மனங்களில் பதித்தனர் மத புரோகிதர்கள். மனிதனைப் பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...

  • 7 June

    ரமழானிய்யத்

    ரமழான் தக்வாவின் மாதமாகும். அது அல்குர்ஆனின் மாதமாகும், ஸதகாவின் மாதமாகும், பொறுமையின் மாதமாகும் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகின் வாயில்கள் மூடப்பட்டு ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் மாதமாகும். அருள் வளம் பொருந்திய இம்மாதத்தில் நாம் நோன்பு நோற்கின்றோம் கியாமுல் லைல் தொழுகின்றோம். ஸகாதுல் பித்ர் கொடுக்கின்றோம் இவ்வாறு பல்வேறுபட்ட நல்லறங்களில் ஈடுபடுகின்றோம். இத்தகைய நல்லறங்களில் ஈடுபடுகின்ற போது பல்வேறு பட்ட சந்தேகங்களும் கேள்விகளும் பொதுவாக எழுகின்றன. அவற்றுள் சிலவற்றுக்கான விளக்கங்களை இவ்வாக் கத்தின் மூலம் தர முயல்கின்றோம். பிறையில் பிரியும் சமூகம்: பிறையைக் கண்டு நோன்பு ...

  • 7 June

    பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு

    இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என நினைக்கின்றேன். ‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவு செய்யுங்கள். (அதனை நிறைவு செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டால் பலிப்பிராணியில் சாத்திய மானதுதான் (அதற்குப்) ...

  • 7 June

    பிக்ஹுல் இஸ்லாம் – குனூத்

        குனூத் ஓதுவதை சிலர் தொழுகையில் செய்ய வேண்டியவற்றில் ஒன்றாகவும் மற்றும் சிலர் செய்யக் கூடாதவற்றில் ஒன்றாகவும் குறிப்பிட்டுள்ளனர். சுபஹுடைய குனூத் விடயத்தில் நபித்தோழர்கள் காலத்திலிருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இருப்பினும் சுபஹுடைய குனூத் விடயத்தில் சிலர் தீவிரப் போக்கைக் கைக்கொண்டு வருகின்றனர். சுபஹுடைய குனூத் ஸுன்னா எனக் கருதுபவர்கள் குனூத் ஓதாத இமாமைப் பின்பற்றித் தொழுவதைத் தவிர்த்து வருகின்றனர். சிலர் பின்பற்றித் தொழுதாலும் இமாம் ஸலாம் கொடுத்த பின்னர் இரண்டு ஸஜதாக்கள் மறதிக்காக தனியாகச் செய்துவிட்டு ஸலாம் கொடுக்கின்றனர். சுபஹுடைய குனூத் ...

  • 7 June

    படிப்படியாகத் தடை செய்யப்பட்ட மது

    ‘(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘அவ்விரண்டிலும் பெரும்கேடும், மனிதர்களுக்கு (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப்பெரியதாகும்’ எனக் கூறுவீராக! மேலும், தாம் எதைச் செலவு செய்வது? என்றும் உம்மிடம் கேட்கின்றனர். ‘(தேவைக்குப் போக) மீதமுள்ளதை’ எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ்  வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்.’ (2:219) அறபு மக்கள் மிகப்பெரும் மதுப் பிரியர்களாக இருந்தார்கள். குடிக்காமல் இருப்பது ஆண்மைக்கு அழகன்று என்று நினைத்தவர்களும் இருந்தனர். ஒரு ஆண், ...

May, 2015