கட்டுரைகள்

December, 2014

November, 2014

  • 29 November

    புஹாரி ஹதீஸ் விவசாயம் செய்வதைத் தடுக்கிறதா?

    ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுகின்றது. அவற்றை மறுக்க வேண்டும் என்று புதிய கொள்கையைப் புகுத்தியவர்கள் தமது வாதத்திற்கு வலு சேர்க்க சில ஹதீஸ்களுக்கு வலிந்து தவறான விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். அந்த ஹதீஸ்களில் பின்வரும் நபிமொழியும் ஒன்றாகும். حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ الحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ الأَلْهَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ، قَالَ: وَرَأَى سِكَّةً وَشَيْئًا مِنْ آلَةِ الحَرْثِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ ...

  • 25 November

    முஸ்லிம்களின் அரசியல் இலக்கு

    ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படா விட்டாலும் ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் தேர்தல் காய் நகர்த்தல்களில் முழு மூச்சுடன் கவனம் செலுத்தி வருகின்றனர். அண்மையில் நடந்த தேர்தல்கள் குறிப்பாக, ஊவா தேர்தல் அரசின் வாக்கு வங்கி சரிந்து வருவதைத் தெளிவாக உணர்த்தியது. இதனால் திடீரென ஜனாதிபதித் தேர்தலை நடாத்தி தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை ஆளும் தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதே வேளை, ஊவா தேர்தல் பிரதான எதிர்க்கட்சிக்குப் பெரும் உற்சாகத்தையூட்டியுள்ளது. முயற்சித்தால் கூட்டணி அமைத்தால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்ற பெறலாம் என்ற ...

  • 23 November

    யார் இந்த ISIS

    அண்மைக் காலமாக ஊடகங்களின் பரபரப்புச் செய்தியாக ISIS பற்றிய தகவல்கள் வெளிவந்தவண்ணமுள்ளன. இன்றைய இலத்திரனியல் ஊடகங்களில் இவர்களது வீரதீரச் செயல்கள் மட்டுமன்றி இவர்களால் நடாத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூரக் கொலைகளும் வெளிவந்து மக்கள் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர். சிலர் இவர்களை நபியவர்களால் ஏற்கனவே முன்னறிவிப்புச் செய்யப்பட்ட அமைப்பாகப் பார்க்கின்றனர். மற்றும் சிலர் இஸ்லாத்தின் எதிரிகளால் வழிநடாத்தப்படும் இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் போக்குள்ள அமைப்பாகப் பார்க்கின்றனர். சிரிய அரசாங்கம் இஸ்ரேலை விட மிகக் கொடூரமான முறையில் சிரிய முஸ்லிம்களைக் கொன்று குவித்து வந்தது. அரபு வசந்தம் என்ற பெயரில் அரபு நாடுகளில் ...

  • 20 November

    திருக்குர்ஆன் தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா?

    இலங்கை சிங்களவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஒரு நாடாகும். இந்த நாட்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் பௌத்த மதத்தைப் பேணிப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். இந்த அடிப்படையில் இந்த நாட்டு அரசு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபட்டால் அதை யாரும் குறை காண முடியாது. இதே போன்று இந்நாட்டு மதகுருமார் தத்தமது மார்க்கத்தைப் போதனை செய்து பரப்புவதற்கும் பாதுகாப்பதற்கும் முயற்சிப்பதையும் யாரும் குறை காணமாட்டார்கள். குறை காணவும் முடியாது. இந்த வகையில் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கென BBS முற்பட்டால் அது அவர்களது உரிமையும் கடமையுமாகும். ...

  • 2 November

    ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) கட்டாயமானதாகும். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவை அடைவது ஒரு ஒட்டமாகவும் பின்னர் மர்வாவில் இருந்து ...

  • 2 November

    மரணித்தும் வாழும் உயிர்த்தியாகிகள் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை மரணித்தவர்கள் என்று கூறாதீர்கள். மாறாக, அவர்கள் உயிருடன் இருக்கின்றார்கள். ஆனால், நீங்கள் உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்.’ (2:154) அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்தவர்களை ‘அம்வாத்’ – ‘இறந்தவர்கள்’ என்று கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கின்றனர். எனினும், நீங்கள் உணரக் கூடிய விதத்தில் அல்ல என்று இந்த வசனம் கூறுகின்றது. ‘அல்லாஹ்வின் பாதையில் கொல்லப் பட்டவர்களை மரணித்தவர்கள் என்று நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தமது இரட்சகனிடத்தில் உயிருடன் இருக்கின்றனர். (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றனர்.’ ‘அவர்களுக்கு அல்லாஹ் தனது அருட்கொடையிலிருந்து ...

  • 2 November

    உஸ்மான்(வ) அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள். யதார்த்தம் என்ன?

    குலபாஉர் ராஷீதூன்களில் அதிகமான விமர்சனங்களைச் சந்தித்தவராக உஸ்மான்(வ) அவர்கள் திகழ்கின்றார்கள். தனது மரணத்தின் பின் நுபுவ்வத்தின் அடிப்படையிலான கிலாபத் குறிப்பிட்ட காலம் இருக்கும் என நபி(ச) அவர்கள் கூறினார்கள். அவ்வாறு நபியவர்களால் நபித்துவத்தின் அடிப்படையில் அமைந்த கிலாபத் எனும் போற்றப்பட்ட ஆட்சியில் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியும் ஒன்றாகும். அன்று வாழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளும், இஸ்லாத்தின் பெயரில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த விரும்பியவர்களும் உஸ்மான்(வ) அவர்களது கிலாபத் நிர்வாகம் தெடர்பிலும் மார்க்க விவகாரங்கள் தொடர்பிலும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். ஆட்சித் தலைவர் மீது அவநம்பிக்கையை ...

  • 2 November

    இயேசுவை இழிவுபடுத்தும் பைபிலும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்

    இயேசுவின் பிறப்பு பற்றி அல்குர்ஆன் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமலும் கூறி அவரை கண்ணியப்படுத்தியுள்ளமையும், பைபிள் இது பற்றிக் கூறும் போது அல்குர்ஆன் அளவுக்கு அவரது அற்புதப் பிறப்பு பற்றி உறுதிப்படக் கூறாத ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதுடன் அவர் யோசோப்பின் குமாரன் என அறியப்பட்டார் எனக் கூறி அதில் சந்தேகத் தன்மையையும் உண்டு பண்ணுகின்றது. இந்த அடிப்படையில் இயேசுவின் பிறப்பு விடயத்தில் அல்குர்ஆன் அவரை கண்ணியப்படுத்தும் அதே வேளை பைபிள் அவரை அசிங்கப்படுத்துகின்றது என்பதைச் சென்ற இதழில் நோக்கினோம். இயேசுவின் பரம்பரை: ...

  • 2 November

    சரிந்து வரும் சமூக மரியாதை

    ஒரு சமூகம் குறித்து பிற சமூக மக்களிடம் உயர்வான எண்ணங்கள் இருக்க வேண்டும். இது ஒரு நல்ல சமூகம் என்ற மதிப்பும் மரியாதையும் இருந்தால் அந்த சமூகத்தின் ஒவ்வொரு தனி மனிதனும் மரியாதையுடன் நோக்கப்படுவான். இல்லாத போது கீழ்த்தரமான, தப்பான பார்வையைத் தவிர்க்க முடியாது. இந்த அடிப்படையில் சமுதாய மரியாதையைச் சிதைப்பது நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதாகவும் அழித்துக் கொள்வதாகவும் அமையலாம். கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து உயர்வான எண்ணம் இந்த நாட்டில் நிலவி வந்தது. நாணயமானவர்கள், நம்பிக்கையானவர்கள், நல்லவர்கள், ஒற்றுமையானவர்கள்….. இவ்வாறான ...