கட்டுரைகள்

November, 2016

  • 2 November

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02 | கட்டுரை.

    அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் கூற வேண்டிய தேவை வந்திருக்காது! எனவே, இரண்டுக்கு மிடையில் புரிந்து கொள்வதில் வேறுபாடு ...

  • 2 November

    பிக்ஹுல் இஸ்லாம் தொடர் – 19 – தஹிய்யதுல் மஸ்ஜித் | கட்டுரை.

    பள்ளிக்குள் நுழைபவர் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தஹிய்யதுல் மஸ்ஜித் (மஸ்ஜித் காணிக்கைத் தொழுகை) தொழுவது சுன்னத்தாகும். ‘உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் வரை அமர வேண்டாம்’ என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: கதாதா இப்னு ரபீஃ(வ) ஆதாரம்: புஹாரி (444), இப்னு குஸைமா(1827), இப்னுமாஜா (1012) பள்ளிக்குள் நுழைந்தவர் அதில் அமர்வதற்கு முன்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழ வேண்டும் என இந்த ஹதீஸ் கூறுகின்றது. ஒருவர் குத்பாவுடைய நேரத்தில் பள்ளிக்குள் நுழைந்தாலும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டே அமர ...

  • 2 November

    பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை.

    பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் அந்த முன்னறிவிப்புக்குரியவர் யார் என்பதையே இத்தொடரில் விரிவாக ஆராயவுள்ளோம். 01. அவர்களுக்காக ஒரு ...

October, 2016

  • 22 October

    நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்| கட்டுரை.

    நவீன பிர்அவ்ன்கள் நாசமாகட்டும்… நவீன கால பிர்அவ்ன்களின் கொடூரங்களிலிருந்து இஸ்லாமிய சமூகம் ஈடேற்றம் பெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்தனை புரிவோமாக! இஸ்லாமிய வருடக் கணிப்பீட்டின் முதல் மாதமாக முஹர்ரம் மாதம் திகழ்கின்றது. போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகவும் இது திகழ்கின்றது. ‘ஷஹ்ருல்லாஹ்” – அல்லாஹ்வின் மாதம் என இம்மாதம் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது! ஹிஜ்ரி கணிப்பீடும் தனித்துவப் போக்கும்: கி.மு., கி.பி. என உலக மக்கள் காலத்தைக் கணிக்கும் போது இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் தியாகப் ...

September, 2016

  • 18 September

    பிக்ஹுல் இஸ்லாம் – 18 | தஸ்பீஹ் தொழுகை |கட்டுரை.

    தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும். ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும். நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது. இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது விடயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிலவி வருகின்றது. தொழும் முறையும் அதன் சிறப்பும்: தஸ்பீஹ் தொழுகை பற்றிப் ...

  • 16 September

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் | முஹ்கம் முதஷாபிஹாத் | கட்டுரை.

    ‘ஆல்” என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(அ) அவர்களது தந்தையே ‘இம்ரான்” என்பவராவார். ஈஸா(அ) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.” (3:33) இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது ...

  • 12 September

    கல்விப் பாதையில் மாற்றம் தேவை |கட்டுரை.

    ‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்” என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்” என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!” என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது. இலங்கை முஸ்லிம்கள்; ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் தனியான முஸ்லிம் பாடசாலைகளாகும். எமது முன்னோர்கள் கல்விக்காக மார்க்கத்தையும், கலாசாரத்தையும், தனித்துவத்தையும் இழந்துவிடக் ...

August, 2016

  • 17 August

    நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டாலும் நம்பித்தான் ஆகவேண்டும் | கட்டுரை.

    لِّلَّـهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّـهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّـهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ‘வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலோ அல்லது அதனை மறைத்து விட்டாலோ அது பற்றி அல்லாஹ் உங்களை விசாரிப்பான். தான் நாடுவோரை அவன் மன்னிப்பான். தான் நாடுவோரை தண்டிப்பான். அல்லாஹ் யாவற்றின் ...

June, 2016

  • 22 June

    அல்குர்ஆன் விளக்கம்: கண்ணியமிக்க இரவு | கட்டுரை.

    ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் ‘அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97 ஆம் அத்தியாயமாக அல் குர்ஆனில் இடம் பெற்றுள்ள இவ்வசனங்கள் ‘லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ச) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அ) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் ...

  • 13 June

    பிக்ஹுத் தஃவா: தவறு செய்பவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? | கட்டுரை.

    தஃவா என்பது இஸ்லாத்தின் முக்கியமானதொரு அம்சமாகும். இதற்கு நபி(ச) அவர்களது வாழ்வில் அழகிய வழிகாட்டல் உள்ளது. அவரவர் அவரவரது விருப்பங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப தஃவா செய்ய முடியாது. உஸ்மான் (ர) அவர்களைக் கொலை செய்தவர்களும், முஸ்லிம்களுக்கு எதிராக வாள் ஏந்தியவர்களும் தஃவாவின் பெயரில் ‘தீமையைத் தடுத்தல்” என்ற போர்வையில்தான் இந்த அராஜகங்களை அரங்கேற்றினர். தஃவா என்பது சீர்திருத்தத்திற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர சீர்குலைப்பதாக அமைந்துவிடக் கூடாது. சில தஃவா அணுகுமுறைகளால் தீமைகள் அழிவதற்குப் பதிலாக வளரவும், நன்மைகள் குறையவும் ஆரம்பித்துவிடுகின்றன. எனவே, அழைப்புப் ...