கட்டுரைகள்

June, 2016

  • 11 June

    முஃதஸிலாக்கள் ஓர் விளக்கம் (5) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும் | கட்டுரை.

    குர்ஆன் ஒரு பொருளா (ஷைஉன்) இல்லையா? என்று கேட்பர். அதை ஒரு பொருள் என்று கூற நேரிடும். அதை ஒரு பொருள் இல்லையென்றால் ஒன்றுமில்லை என்றாகிவிடும். இந்தக் கேள்விக்கு இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஹுவ ஷைஉன் லைஸ கல் அஷ்யாஇ” அது ஒரு பொருள் தான். ஆனால், ஏனைய பொருள் போன்றதல்ல எனப் பதில் கூறினர். மற்றும் சிலர் அது பொருள் அல்ல, ‘அம்ர்” அல்லாஹ்வின் கட்டளை எனப்பதில் கூறினர். எப்படிக் கூறினாலும், ذَٰلِكُمُ اللَّـهُ رَبُّكُمْ ۖ لَا إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ ...

  • 9 June

    ரமழான் நல்லமல்களின் பருவ காலம் |கட்டுரை.

    சில மாதங்களாக வரலாறு காணாத வரட்சியும், வெப்பமும் இலங்கையை வாட்டி வதைத்தது. இலங்கையின் வெப்பநிலை உயர்ந்து கொண்டே சென்றது, செல்கின்றது. தற்போது நாடு வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றது. நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக வெள்ளப் பெருக்கும், மண்சரிவு அபாயமும், உயிர் மற்றும் பொருட் சேதங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ந்தும் சீரற்ற காலநிலை நிலவி வருவதுடன் மண்சரிவு அபாயமும் நீடிக்கின்றது. வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் பல இலட்சம் மக்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் எமது அமைப்புக்கள் பலதும் போட்டி போட்டுக் கொண்டு வெள்ள நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு ...

  • 8 June

    பிக்ஹுல் இஸ்லாம்: ஸலாதுத் தராவீஹ் |கட்டுரை.

    தராவீஹ் தொழுகை 11 தொழுவதற்கான ஆதாரங்களைப் பார்த்து வருகின்றோம். ‘நான் ஆயிஷா(ர) அவர்களிடம் வந்து, ‘நபி(ச) அவர்களது தொழுகை பற்றி எனக்கு அறிவியுங்கள்” எனக் கேட்டேன். அதற்கவர்கள், ‘ரமழானிலும், ரமழான் அல்லாத காலங்களிலும் நபி(ச) அவர்களது இரவு நேரத் தொழுகை 13 ரக்அத்துக்களை உடையதாக இருந்தது. அதில் சுபஹுடைய (முன் சுன்னத்து) இரண்டு ரக்அத்துக்களும் அடங்கும்” என்று கூறினார்கள்.” அறிவிப்பவர்: அபூஸலமா(ர) நூல்: புஹாரி 1170, முஸ்லிம் 738-127, இப்னு குஸைமா 2213 ‘ஆயிஷா(ர) அறிவித்தார். நபி (ச) அவர்கள் ஃபஜ்ருடைய முன் ஸுன்னத்து, ...

  • 7 June

    ரமழான் வெற்றியின் மாதம். | கட்டுரை.

    புனிதம் பூத்துக் குலுங்கும் ரமழான் மாதம் பல்வேறுபட்ட வெற்றிகளைத் தந்த மாதமாகத் திகழ்கின்றது. பொதுவாக எமது பார்வையில் ரமழான் என்பது சோம்பலுக்குரிய, ஓய்வுக்குரிய மாதமாக மாறிவிட்டாலும் இஸ்லாமிய உலகு ரமழான் மாதத்தில் பல போர்க்களங்களைக் கண்டுள்ளதோடு அதில் வெற்றிவாகையும் சூடியுள்ளது. ரமழான் கண்ட வெற்றிக்களிப்புக்கள் சிலவற்றை இங்கு நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என நினைக்கின்றேன். பத்ர் போர்: இஸ்லாமிய வரலாறு கண்ட முதல் போர் பத்ர் யுத்தமாகும். இது ஹிஜ்ரி 02 ரமழான் மாதத்தில்தான் நடந்தது. ஆயிரம் பேர் கொண்ட படையை சுமார் 313 ...

  • 7 June

    நோன்பின் மகத்துவம். | கட்டுரை.

    இஸ்லாம் போதிக்கும் அடிப்படையான இபாதத்துக்களில் நோன்பும் ஒன்றாகும். ரமழான் மாதத்தில் நோன்பிருப்பது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும். நோன்பின் மாண்புகளையும் மகத்துவங்களையும் புரிந்து கொள்ள இஸ்லாம் அதற்கு வழங்கியுள்ள சிறப்புக்களை அறிந்து கொள்வது முக்கியமாகும். ஆரம்ப காலங்களில் குடும்பத்தில் மூத்தவர்கள் அனைவரும் நோன்பிருப்பதால் சிறுவர்களும் நோன்பு நோற்று வந்தனர். இதனால் நோன்பு என்பது அனைவராலும் கடைப்பிடிக்கப் படும் ஒரு இபாதத்தாக இருந்தது. இந்த நிலை இப்போது குறைந்து வருகின்றது. வளர்ந்தவர்களில் பலரும் தொழிலைக் காரணம் காட்டி நோன்பு நோற்பதைத் தவிர்த்து வருகின்றனர். இளம் சந்ததிகளிடமும் ...

  • 6 June

    நோன்பை முறிப்பவை.

    இஸ்லாம் கூறும் அடிப்படைக் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். அல்லாஹ்வுக்காக சுபஹிலிருந்து மஃரிப் வரை உண்ணல், பருகல், உடலுறவில் ஈடுபடுதல் என்பவற்றைத் தவிர்ப்பதே நோன்பு என்று கூறப்படும். இந்த நோன்பை சில காரியங்கள் முறித்துவிடும். இதற்கு ‘முப்திலாதுஸ் ஸவ்ம்” (நோன்பை முறிப்பவை) என அறபியில் கூறப்படும். நோன்பு நோற்கும் நாம் இது குறித்து அறிந்திருப்பது அவசியமாகும். 1 – 2) உண்ணல், பருகல்: உண்பது, பருகுவது என்பன நோன்பை முறிக்கும். இது பொதுவாக அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின்வரும் வசனம் ஆதாரமாக அமைகின்றது. ‘…ஃபஜ்ரு நேரம் ...

  • 6 June

    இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை.

    நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை ஏவும் உரிமை எமக்கில்லை. ஒருவர் ஒரு செயலை நல்லது என எண்ணி செய்து ...

May, 2016

  • 17 May

    அல்குர்ஆன் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”

    ‘அல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:276) இன்றைய உலகப் பொருளாதாரம் வட்டியுடன் பின்னிப் பிணைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிகள் நீங்க வேண்டும் என்றால் வட்டி முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். உலக நாடுகள் அனைத்தும் பெரும் கடன் சுமையில் உள்ளன. அந்தக் கடனுக்கான வட்டியைக் கட்டுவதற்கே பல கோடிகளை மாதாந்தம் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளன. அதனால் வரிக்கு மேல் வரியை விதித்து மக்கள் வாட்டி வதைக்கப்படுகின்றனர். தொழில் நிறுவனங்கள் வட்டி கட்டுவதற்காகப் பொருட்களின் ...

  • 15 May

    முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் (04) | முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும்.

    குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். செத்துப் போன வாதங்களை உயிர்ப்பிப்பதற்காக இந்த ஆக்கம் எழுதப்படவில்லை. இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட சிந்தனைகளை இறக்குமதி செய்த அனைவரும் குர்ஆன், ஹதீஸின் ...

  • 10 May

    ஸலாதுத் தராவீஹ் (தராவீஹ் தொழுகை).

    ரமழான் கால இரவுகளில் தொழப்படும் தொழுகைக்கு ‘தராவீஹ்” என்று கூறப்படும். ஹதீஸ்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப் பட்டிருப்பதற்கு நேரடியான ஆதாரத்தைக் காண முடியாது. ஏற்கனவே நான் குறிப்பிட்ட அடிப்படையில் இதுவும் ‘கியாமுல் லைல்” இரவுத் தொழுகையின் வட்டத்திற்குள் அடங்கக் கூடியதே! ‘அபூஸலமா அறிவித்தார். ரமலானில் நபி(ச) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது என்று ஆயிஷா(ர) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ‘நபி (ச) அவர்கள் ரமலானிலும் ரமலான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் ...