கட்டுரைகள்

May, 2017

  • 26 May

    ரமழான் சிந்தனைகள் | கட்டுரை.

    புனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாகஇ உரமாக இங்கே சிதறவிடலாம் என எண்ணுகின்றேன். புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும்: புனித ரமழான் குர்ஆனின் மாதமாகும். எனவே, குர்ஆனுக்கும் எமக்குமிடையில் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் எற்படுத்தும் ...

  • 21 May

    கழிவுகளால் நேரும் அழிவுகள் | கட்டுரை.

    உலகு எதிர் கொள்ளும் பெரும் பிரச்சினைகளில் கழிவுகளும் ஒன்றாகும். முன்பெல்லாம் கழிவுகள் பெரும்பாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிவிடும் பொருட்களாகவே இருந்தன. இப்போது எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் சில பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் கப்கள், பக்கட் வகைகள்… போன்ற எண்ணற்ற கழிவுகளை வெளிவிடுகின்றான். இவை ஆண்டாண்டு காலம் சென்றாலும் உக்கி மண்ணோடு மண்ணாகிப் போவதில்லை. மாறாக அவை நச்சாக மாற்றம் பெறுகின்றன. எமது மண் வளத்தைக் கெடுக்கும் பொருட்கள் மாத்திரம் நம் மண்ணோடு தேங்கிவிடுகின்றன. இது மனித ...

  • 16 May

    பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை.

    அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...

April, 2017

  • 25 April

    பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.

    இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், ...

  • 24 April

    ஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.

    ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ ‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’ ‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் ...

  • 24 April

    பைபிளில் முஹம்மத் (06) – பைபிளில் பத்ர் யுத்தம் | கட்டுரை.

    இயேசு அல்லாத மற்றுமொரு இறைத் தூதரைப் பற்றி பைபிள் முன்னறிவிப்புச் செய்துள்ளது. அந்த இறைத்தூதர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் இருந்து வருவார் என்றும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்கள் இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் கூறி வருகின்றது. ஆனால், இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் வருவார் என்று கூறப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபியே என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் உறுதியாகத் தெளிவுபடுத்தி வருகின்றோம். இந்தத் தொடரில் மற்றும் சில சான்றுகளைப் பார்க்க இருக்கின்றோம். நபி(ச) அவர்கள் ...

  • 17 April

    பிக்ஹுல் இஸ்லாம் – 25 – தொழுகையை சுருக்கித் தொழுதல் ┇கட்டுரை.

    சென்ற இதழில் பயணி சுருக்கித் தொழுவதுதான் சிறந்தது. நவீன கால வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி தொழுகையை சுருக்குவதைத் தவிர்ப்பது தவறானது என்பதை அவதானித்தோம். பயணி முழுமையாகத் தொழும் சந்தர்ப்பம்: பயணம் செய்யக் கூடியவர் ஊர்வாசிகளைப் பின்பற்றித் தொழ நேர்ந்தால் அவர் முழுமையாகவே தொழ வேண்டும். தொழுகையின் ஆரம்பத்தில் அல்லது இறுதி அத்தஹிய்யாத்தில் இணைந்தால் கூட அவர் எழுந்து ‘கஸ்ர்’ – சுருக்கித் தொழாமல் முழுமையாகவே தொழ வேண்டும். பயணி கட்டாயம் சுருக்கித் தொழ வேண்டும் என்ற கருத்தில் உள்ள சிலர் பயணி ஊர்வாசியைப் ...

  • 11 April

    ஜனாஸா தொழுகை |கட்டுரை.

    எல்லாம் வல்ல ஏக வல்லோன் அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப் புகழும். இறுதித் தூதர் முஹம்மத் நபி(ச) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் என்றென்றும் உண்டாவதாக! ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவனுக்குப் பிரார்த்தனை செய்யும் முகமாக ஏனைய முஸ்லிம்களால் தொழப்படும் தொழுகைக்கே ஜனாஸா தொழுகை என்று கூறப்படும். இந்தத் தொழுகை பர்ழு கிபாயாவாகும். சிலர் செய்தால் அடுத்தவர் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிடும். யாருமே செய்யாவிட்டால் அனைவருமே குற்றவாளி களாகும் நிலை ஏற்படும். ‘இந்தத் தொழுகையைத் தொழுப வருக்கு ஒரு கீராத் – உஹது மலையளவு நன்மை ...

  • 6 April

    வறிய நாடுகளை வாட்டும் டெங்கு!

    வரண்ட மற்றும் உலர் வெப்ப வலய நாடுகளை டெங்கு அபாயம் அச்சுறுத்தி வருகின்றது. டெங்குக் காய்ச்சல் (Dengue Fever) எலும்பை முறிக்கும் காய்ச்சல் (Break Born Fever) என்றெல்லாம் இதுஅழைக்கப்படும். இந்நோய் ஆரம்பத்தில் உயிர் கொல்லி நோயாக இலங்கையில் பார்க்கப்பட்டது. பின்னர் நோயை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டால் மலேரியாக் காய்ச்சல் போல் இலகுவாக மருத்துவம் செய்யும் நிலை இருந்தது. அண்மையில் டெங்குக் காய்ச்சல் பல உயிர்களை இலங்கையில் காவு கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் கிண்ணியா பகுதியில் பல உயிர்கள் பலியாகி பல்லாயிரம் மக்கள் பாதிப்புற்றுள்ளனர். ...

March, 2017

  • 6 March

    மகளிர் தினம் மாற்றத்தை ஏற்படுத்தியதா? | கட்டுரை.

      மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக 1975 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு அறிமுகமாகி வருகின்றது. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளைத் தடுப்பதும்தான் இத்தினத்தின் பிரதான இலக்காகும். ஆனால், உண்மையில் இச்சர்வதேச தினங்கள் சாதித்தது எதுவும் இல்லை என்பதைத்தான் உலக புள்ளிவிபரங்கள் புரிய வைக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் வளர்ந்து கொண்டுதான் செல்கின்றன. ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பாட்டி வரைக்கும் பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சூழ்நிலை அதிகரித்தே வருகின்றது. அறியாமைதான் இந்த நிலைக்குக் காரணம் ...