மூஸா(அலை) அவர்களது சமூகமும் அவர்களது மீறப்பட்ட வாக்குறுதிகளும்

இன்னும் “மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாக நாங்கள் காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை இடியோசை பிடித்துக் கொண்டதை (எண்ணிப்பாருங்கள்.)” (2:55) அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் என இஸ்ரவேல் சமூகம் கேட்ட போது அவர்கள் இடி முழக்கத்தால் தாக்கப்பட்டார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இது இஸ்ரவேல் சமூகத்தின் ஆணவத்திற்கும், அவநம்பிக் கைக்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும். அவர்களது இந்த வேண்டுதல் மிக மோசமானது என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது. ...

Read More »

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன? பதில்: ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும். முதலாவது வகை: மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள். இரண்டாவது வகை: ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ஒரு இமாம் ஆரம்பத்தில் தொழுவிப்பார். அடுத்தவர் இறுதி நேரத்தில் தொழுவிப்பார். இது பித்அத் ஆகும் ...

Read More »

நாட்டின் நலம் காக்க நல்லுறவை வளர்ப்போம்

பயமும் பட்டினியும் இல்லாத வாழ்வு என்பது அல்லாஹ் வழங்கும் அருள்களில் முக்கியமானதாகும். நாட்டை ஆள்பவர்களின் அடிப்படையான கடமையும் இதுதான். மக்களுக்கு அச்சமற்ற ஒரு வாழ்வை வழங்குவதும், பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்தி பட்டினியில்லாத சூழ்நிலையை உருவாக்குவதும்தான் ஆட்சியாளர்களின் அடிப்படைக் கடமையாகும். பலமான மக்களிடமிருந்து பலவீனர்கள் பாதுகாக்கப்படுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதும் ஆட்சியாளர்களின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றாக மிளிர வேண்டும். அபூபக்கர்(வ) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதும் இதைத்தான் கூறினார்கள். ‘உங்களில் பலவீனமானவன் அவனது உரிமையை அவனுக்குப் பெற்றுக் கொடுக்கும் வரை அவன்தான் என்னிடம் ...

Read More »