சுன்னாவுக்கும் பித்ஆவுக்குமிடையில் ஷஃபான் மாத நோன்பு

ஷஃபான் மாதம் சுன்னத்தான நோன்புகள் அதிகமாக நோக்கத்தக்க சிறந்த மாதமாகும். இருப்பினும் இந்த மாதத்தின் 15 ஆம் நாளில் விஷேடமாக நோன்பு நோற்கப்படுகின்றது. அது “பராத்”, “விராத்” என முஸ்லிம்களால் அழைக்கப்படுகின்றது. இது பித்அத்தான வழிமுறையாகும். ஷஃபான் 15 ஆம் இரவில்தான் குர்ஆன் அருளப்பட்டது என்று சிலர் நம்புகின்றனர். அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது என்ற திருக்குர்ஆனின் கூற்றுக்கு எதிரான கருத்தாக இது உள்ளது. சுன்னத்தான நோன்புகளை நோற்காது மார்க்கம் அனுமதிக்காத 15 ஆம் நாள் நோன்பை மட்டும் மக்கள் நோற்று வருவதால் ஷஃபான் ...

Read More »

அல்லாஹ்வின் நாட்டத்திற்கும் தக்லீத் சிந்தனைக்கும் இடையில் சூனியம் – புதிய பித்னா

ஒன்லைன் PJ இணைய தளத்தில் சூனியம் பற்றிப் பேசும் 2:102 வசனத்திற்கு புதிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தான் உருவாக்கிய வழிகெட்ட சிந்தனையைப் பாதுகாக்க குர்ஆனைக் கூட திரிவுபடுத்த முனைந்துவிட்டனர் என்பதற்கு இது சிறந்த ஆதாரமாக அமைந்துவிட்டது. இந்த விளக்கத்தை அவதானித்தால் குர்ஆனுடன் விளையாடும் இவர்களது வழிகெட்ட போக்கையும் அல்லாஹ்வையும், ரஸூலையும் மிஞ்சிப் போகும் இவர்களது வழிகெட்ட சுபாவத்தையும் புரிந்து கொள்ளலாம். அந்த வெளியீட்டில் புதிய சூனிய பித்னா என்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, இல்லாத ஒரு இலக்கண விதியைச் சொல்லி குர்ஆனில் உள்ள ஒரு ...

Read More »

இந்தியத் தேர்தலும் இலங்கை இனவாதமும்

இந்தியாவின் தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து அடிப்படைவாத அமைப்பான பாரதீய ஜனதா கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள அதே வேளை, காங்கிரஸைப் படுபாதாளத்தில் வீழ்த்தியுள்ளது. குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட “மோடி” இந்தியாவின் 16-ஆம் பிரதமராகிவிட்டார். இந்த அரசியல் மாற்றம் ஆசியாவில் மதவாதமும் இனவாதமும் கூர்மை பெற்று வருவதற்கான வெளிப்படையான அடையாளமாகக் கொள்ளலாம். பர்மாவில் பற்றி எரியும் பௌத்த மதவாதத் தீ இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியது போல், இந்தியாவில் இந்துத் தீவிரவாத அமைப்பின் ...

Read More »

ஸஹாபாக்களை “கிரிமினல்” என வசைபாடும் கொள்கை விஷக்கிருமிகள்

அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு கிரிமினலா? அம்ரிப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் ஒரு சிறந்த நபித்தோழராவார். போர்த் திறமையும், தந்திரமும், தலைமைத்துவப் பண்பும் நிறைந்த இவரை நபி(ஸல்) அவர்கள் போர்களுக்குத் தளபதியாக நியமித்துள்ளார்கள். இவர் மூலம் பல வெற்றிகளை இஸ்லாமிய உலகு அடைந்துள்ளது. இவரின் தலைமையில்தான் எகிப்தும் கைப்பற்றப்பட்டது! இவரது வரலாறு, இவர் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்வு, இஸ்லாத்திற்கு முற்பட்ட இவரது வாழ்வு, இவரது மரணம் அனைத்தும் விரிவாகப் பார்க்கப்பட வேண்டிய அம்சங்களாகும். தமிழ் உலகில் தவ்ஹீதுக்கு ஏகபோக உரிமை கோரும் சிலரால் இவர், “கிரிமினல்” ...

Read More »

அறிவீனத்திற்கும் தெளிவிற்கும் மத்தியில்

“பத்வா” என்றால் மார்க்கத் தீர்ப்பு என்று பொருள்படும். பத்வா வழங்கும் மார்க்க அறிஞர் “முப்தீ” என அழைக்கப்படுவார். இஸ்லாமியச் சட்டவாக்கத்தில், மார்க்கச் சட்டம் குறித்துக் கேட்கப்படும் கேள்விக்கு அது குறித்த மார்க்கத்தின் சட்டத்தை எடுத்துச் சொல்வதே பத்வா எனப்படுகின்றது. இஸ்லாம் என்பது ஒரு வாழ்க்கைத் திட்டமாகும். எனவே ஒரு முஸ்லிமின் முழு வாழ்வும் மார்க்க வழிகாட்டலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். அவனது இபாதத், இல்லற வாழ்வு, பொருளீட்டல் அனைத்தையும் அவன் மார்க்க அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செயற்படும் போது அலை அலையாகக் கேள்விக் ...

Read More »

இலங்கைத் தாயின் இனிய மைந்தர்களாக…

பலநூறு ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை, 1948 இல் சுதந்திரம் பெற்றது. உலக நாடுகள் பலவும் காலனித்துவத்தின் கோரப் பிடியிலிருந்து விடுதலை பெற்ற தினத்தை சுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றன. இந்த அடிப்படையில் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி என்பது எமது தாய் நாட்டின் சுதந்திர தினமாகும். அந்நிய ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற்றமை என்பது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மகிழ்ச்சியைத் தரும் செய்தி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பொதுவாக அரசியல் ரீதியில் அந்நியரின் நேரடியான ஆதிக்கத்தின் கீழ் இருந்து விடுதலை ...

Read More »