நோன்பும் மருத்துவமும்

நோன்பாளி சில மருந்துகளைப் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் பலருக்குள்ளது. குறிப்பாக ஆஸ்துமா, பீனிஸ வருத்தம் உள்ளவர்கள் சுவாசிப்பதை இலகு படுத்துவதற்காக இன்ஹேலர் போன்றவற்றைப் பயன்படுத்துவர். நோன்பு இருக்கும் போது வீசிங் பிரச்சினை ஏற்பட்டால் இதைப் பயன்படுத்தலாமா என்றால் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறே ஆவி பிடிப்பதாக இருந்தாலும் பிடிக்கலாம். பெக்லேட் போன்ற டெப்லட் துகல்களைப் பொருத்த வரையில் தவிர்ப்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில், மருந்து துகல்கள் வாய்வழியே உள்ளே செல்கின்றது. எனவே, இதைத் தவிர்ப்பதே நல்லது. இவ்வாறே ஊசி மூலம் மருந்து ஏற்றுவதிலும் தப்பில்லை. ...

Read More »

நோன்பாளி பல் துலக்குதல்?

நோன்பாளி பல் துலக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. நோன்பாளி பகல் நேரத்தில் பல் துலக்கக் கூடாது என்ற கருத்து தவறானதாகும். பொதுவாக இஸ்லாம் அடிக்கடி பல் துலக்குவதை வரவேற்கின்றது. குறிப்பாக ஒவ்வொரு தொழுகைக்காகவும் பல் துலக்குவது கட்டாய ஸுன்னத்துக்களில் ஒன்றாகும். எனவே, நோன்போடு இருக்கும் போது பல் துலக்குவதில் எந்த தடையும் இல்லை.

Read More »

நோன்பும் நிய்யத்தும்

நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும். ‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (தாரமி: 1845, அபூதாவூத்: ...

Read More »

அல்குர்ஆன் விளக்கம் சூரா பகரா – அல்லாஹ்வின் வருகை

அல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன. ‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’ ‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’ ‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?'(89:21-23) இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் ...

Read More »

முத்ஆ கூத்துக்கள்

    வளைகுடா நாடொன்றில் ஒரு வைத்தியர் பணி புரிந்து வந்தார். அவருடன் இன்னொரு ஷீஆ வைத்தியரும் பணி புரிந்து வந்தார். இவ்விருவருக்குமிடையில் பின்வருமாறு முத்ஆ தொடர்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. சுன்னா வைத்தியர்    :    முத்ஆ எனும் தற்காலிகத் திருமணம் உங்கள் மத்தியில் ஹலாலானது என்றா கூறுகின்றீர்? ஷீஆ வைத்தியர்    :    ஆம்! ஹலால்தான். சுன்னா வைத்தியர்    :    அதாவது, எந்த இடத்தில் உள்ள எந்தப் பெண்ணாக இருந்தாலும் கூலியையும் காலத்தையும் நிர்ணயித்து இந்தத் திருமணத்தைச் செய்யலாம் அப்படித்தானே? ஷீஆ வைத்தியர்    :    ஆமாம். ...

Read More »

இஸ்லாம் அழைக்கிறது

    சாதிகள் இல்லையடி பாப்பா என பாடினான் ஒரு புலவன். ஓன்றே குலம் ஒருவனே தேவன் என்பதும் ஆன்றோர் வாக்காகும். இருப்பினும் சாதி வேறுபாடு ஒழிந்ததாக  இல்லை. உலக வரலாற்றில் இரத்தக் கறை படிந்த பக்கங்கள் பலவற்றில் சாதி, இன, மொழி, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு முக்கிய இடம் உண்டு. மனிதன் மனிதனை அடிமைப்படுத்தக் கண்டுபிடித்த ஒன்றுதான் உயர் சாதி, தாழ் சாதி வேறுபாடு. இதை மதத்தின் பெயரிலேயே மனித மனங்களில் பதித்தனர் மத புரோகிதர்கள். மனிதனைப் பிறப்பின் அடிப் படையில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் ...

Read More »