தனித்து விடப்பட்ட தாயும் மகனும் இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் கஃபா அமைந்துள்ள பாலைவனப் பிரதேசத்தில் விடவேண்டும் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது. உலகின் ...
Read More »முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25] எமது உண்மையான தாயகம் சுவனமாகும்.
முதல் மனிதனின் முதல் தவறு அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது. அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை ஒப்புக் கொண்டான். அதன்பின் ஆதம் நபியிடம் அவற்றின் பெயர்களைக் கூறுமாறு கேட்டபோது அவர் ...
Read More »சிலைகளை உடைக்கலாமா? | Ismail Salafi | Sri Lanka | Current Issue | Article | Statue|Islam | Unmai Udayam.
இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை வணக்கத்திற்கு எதிராகப் போராடி நபித்தோழர்கள் பயங்கரமான ...
Read More »நடு நிலை சமுதாயம்|Article | Unmai Udayam | Ismail Salafi | Muslims.
இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். அதன் போதனைகள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன. தீவிரவாதம் எந்தக் கோணத்தில் வந்தாலும் ஆபத்தையே ஏற்படுத்தும் என்பது இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும். இதனால்தான், தீவிரவாதிகள் அழிந்து போவார்கள் என நபி(ச) அவர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். “(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத் தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். புறமுதுகிட்டுச் செல்பவர்களிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே, முன்னர் நீங்கள் முன்னோக்கிக் கொண்டிருந்த கிப்லாவை மாற்றினோம். அல்லாஹ் நேர்வழி காட்டியோரைத் தவிர மற்றவர்களுக்கு ...
Read More »பாகிலானி(ரஹ்) அவர்களும் அவர்களின் சாதுர்யமும் | Article | Anan Ismail | Tamil | Unmai Udayam.
By: Anan Ismail முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார். இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ...
Read More »இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே! | Politics | Sri Lanka |World | Ismail Salafi | Unmai Udayam |Article.
ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு குட்டிச் சுவராகிவிடும். தமது அரசியல் காய் நகர்த்தல்கள் அனைத்தும் ...
Read More »குத்பாவின் ஒழுங்குகள் | பிக்ஹுல் இஸ்லாம் (41) | Article | Ismail Salafi.
ஜும்ஆத் தொழுகை என்பது இரண்டு குத்பா உரைகளையும் இரண்டு ரக்அத்துத் தொழுகையையும் கொண்டது என்பதை முன்னரே குறிப்பிட்டோம். ஜும்ஆ தொழுகை நிறைவு பெற குத்பா என்பது ஷர்த்தாகும். நபி(ச) அவர்கள் தன் வாழ்நாளிலே எந்த ஜும்ஆத் தொழுகையையும் குத்பா இல்லாமல் நிகழ்த்தியதே இல்லை. அத்துடன், ‘நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமை தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள். இன்னும், வியாபாரத்தையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்து கொள்பவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.” (62:9) இந்த வசனத்தில் குத்பாவின்பால் ...
Read More »போதையும் இளைய சமூகமும் | Video.
🎤உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி 🌷”போதையும் இளைய சமூகமும்”🌷 JASM இஜ்திமா புத்தளம் ”BODAUM ILAYA SAMOOGAMUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI JASM ISLAMIYA VILAKKA MANADU PUTTALAM 🗓07/12/2018
Read More »ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?|குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் (24)
فَاِذَاۤ اُحْصِنَّ فَاِنْ ا تَيْن بِفَاحِشَة فَعَلَيْهِن نِصْف مَا عَلَى الْمُحْصَنٰتِ مِنَ الْعَذَابِ ؕ “அவர்கள் திருமணம் முடித்த பின்னர் மானக்கேடான செயலைச் செய்து விட்டால், சுதந்திரமான கன்னிப் பெண்களுக்கு வழங்கும் தண்டனையில் அரைவாசியே அவர்களுக்குரிய தண்டனையாகும்.” (4:25) மேற்படி வசனத்தை மொழிபெயர்ப்புச் செய்வதில் ஏற்பட்ட குளறுபடியில் இலங்கையில் பெரிய கொள்கைக் குழப்பமே ஏற்பட்டது எனலாம். இந்த அத்தியாயத்தின் 24, 25 ஆம் வசனங்களில் அல் முஹ்ஸனாத் என்ற பதம் நான்கு முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. அல் முஹ்ஸனாத் என்பதற்கு திருமணம் ...
Read More »பீ.ஜே. யின் கருத்துக்களை மீளாய்வு செய்யுங்கள்| தொடர் 02 | கட்டுரை.
குர்ஆனின் நேரடி அர்த்தத்திற்கு மாற்றமாகத் தனது விளக்கத்தை முற்படுத்துதல். இவரது தர்ஜமா விளக்கக் குறிப்புக்களில் அநேகமாக இந்தத் தவறைச் செய்துள்ளார். உதாரணமாக: ஆதம், ஹவ்வா இருவரையும் அல்லாஹ் சுவர்க்கத்தில் நிர்வாணமாக விடவில்லை. ஆடையுடன்தான் விட்டான் என குர்ஆன் கூறுகின்றது. ‘நிச்சயமாக அதில் நீர் பசித்திருக்க மாட்டீர். மேலும், நீர் நிர்வாணமாக இருக்கவும்; மாட்டீர்.” (20:118) ‘சுவர்க்கத்தில் நிர்வாணமாக மாட்டீர்கள்” என அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் தடுக்கப்பட்ட கனியைப் புசித்ததும் நிர்வாணமானார்கள். ஆனால், அவர் தனது 174 விளக்கக் குறிப்பில் அவர்கள் சுவர்க்கத்தில் நிர்வாணமாக இருந்ததாகவும் ...
Read More »