வர்ணம் தீட்டுவோம்!

ஆசிரியர் பக்கம் – ஜனவரி 2020 அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகின்றான் (முஸ்லிம்) என்பது இறைத்தூதர் முஹம்மத்(ச) அவர்களது போதனையாகும். அல்லாஹ்வைப் பற்றி குர்ஆன் அறிமுகம் செய்யும் போது, ”அஹ்ஸனுல் ஹாலிகீன்’ – அழகிய படைப்பாளன்’ (23:14, 37:125) என்று குறிப்பிடுகின்றது. இந்த வகையில் இஸ்லாம் அழகுணர்வை ஆர்வமூட்டக் கூடிய மார்க்கமாகும். ‘நாம் வானத்தில் கோள்களை அமைத்து, பார்ப்போருக்கு அதனை அலங்கரித்துள்ளோம்;.’ (15:16) வானத்தில் கோள்களை அமைத்து பார்ப்பவர்களுக்கு அதை அழகாக ஆக்கினோம் என்ற வசனம் பார்ப்பதற்கு ஒரு பொருளை அழகுற வடிவமைப்பது ...

Read More »

ஃபிக்ஹுல் இஸ்லாம் – 47

-S.H.M. Ismail Salafi கிதாபுல் ஜனாயிஸ் -(ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்)குளிப்பாட்டத் தகுதியானவர்கள்: ஜனாஸாவைக் குளிப்பாட்டும் விடயத்தில் யார் பொருத்தமானவர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் யார் பொருத்தமான வர்கள் என்பது குறித்து ஏற்கனவே பல விடயங்களை அவதானித்தோம். குளிப்பாட்டுபவர் விடயத்தில் பொதுவாக கவனிக்க வேண்டிய இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நல்லவர்கள்:குளிப்பாட்டுபவர்கள் மார்க்க விழுமியங் களைப் பேணி நடப்பவராக இருக்க வேண்டும். அவர் தான் குளிப்பாட்டும் போது ஜனாஸாவில் ஏதாவது குறைபாடுகளைக் கண்டால் அதை பகிரங்கப்படுத்தாமல் மறைக்கும் அவசியத்தை உணர்ந்திருப்பார். ...

Read More »

மத்ரஸாக் கல்வி! தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.

அரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் கூட அடிப்படைவாதத்தையும், தீவிர வாதத்தையும் போதிக்கும் தளங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அரபு மத்ரஸாக்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து காலத்தின் தேவைக்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த உலமாக்களை உருவாக்கத்தக்க மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மத்ரஸா – அறிமுகம்: “தரஸ” என்றால் கற்றான், படித்தான் என்பது அர்த்தமாகும். மத்ரஸா என்றால் கற்கும் ...

Read More »

எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்? | Article | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.

ஏப்ரல் 21 இல் நடைபெற்ற மிருகத்தனமாக தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக முஸ்லிம்களில் சிலர் சம்பந்தப்பட்டதனால் இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பான சிந்தனை உருவானது. முஸ்லிம்கள் வெறுப்புடன் நோக்கப்பட்டனர். இனவாத, மதவாத சக்திகளும் இனவாத ஊடகங்களும் இதைச் சாட்டாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது இலங்கை மக்களுக்கு வெறுப்பையும் வெறியையும் ஊட்டும் விதத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தன. உண்மையில் இது தொடர்பில் நின்று நிதானமாகச் சிந்தித்தால் இந்த வெறுப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டிருக்காது! நாட்டை ஆளும் சக்தி மீதே இந்த வெறுப்பு உருவாகியிருக்க வேண்டும். ...

Read More »

இஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும் | Video | Ismail Salafi

உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி விசேட பயான் நிகழ்ச்சி ”இஸ்லாத்தில் வேடிக்கையும் விளையாட்டும்” ”ISLATHIL VEDIKKAYUM VILAYATUM” BY ASHSHK S.H.M ISMAIL SALAFI @JTJM PARAGAHADENIYA 05/12/2018

Read More »

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28]

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் செத்து விழுந்தான். இப்படி நடக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. இது தற்செயலாக நடந்தது. ...

Read More »

வேடிக்கையும் கேளிக்கையும் | Article | Ismail Salafi | Unmai Udhayam.

மனித வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விளையாட்டுக்கள், பேச்சுக்கள், நடத்தைகள் அனைத்தையும் இஸ்லாம் தடுத்திருப்பதாக சிலர் நினைக்கின்றனர். பேசாமல், சிரிக்காமல் முகத்தை ‘உம்’ என்று வைத்திருப்பதுதான் உண்மையான தக்வாவின் அடையாளம் என்று சிலர் நினைத்துள்ளனர். இது தவறாகும். சிரித்த முகத்துடன் காட்சியளிப்பதும் பிறரை மகிழ்வூட்டுவதும் மார்க்கம் போதிக்கும் நல்ல பண்புகளில் உள்ளவைதான். “நபி(ச) அவர்களை விட நான் புன்புறுவல் பூக்கும் ஒருவரை நான் பார்க்கவில்லை” என அப்துல்லாஹ் இப்னுல் ஹாரிஸ்(ர) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதி: 3641, அஹ்மத்: 17704 (இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ...

Read More »

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27] | பிர்அவ்னின் உள்ளத்தில் அல்லாஹ் மாற்றத்தை ஏற்படுத்தினான்.

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் மூஸா நபி பிறந்தார்கள். குழந்தை பிறந்த செய்தியை பிர்அவ்னின் படையினர் அறிந்தால் கழுத்தை ...

Read More »