Current Issues

December, 2018

  • 17 December

    முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.

    உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி”முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்””MUSLIMGALIN KALVI VALARCHIUM PADASALAIGALIN MUNNETRAMUM”BY ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 02/12/2018

  • 12 December

    இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்.

    ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 (உண்மை உதயம்) இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் நியமனமும்: ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ...

  • 10 December

    த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! | Anan Asmath Bin Ismail.

    த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! ஆக்கம்: Anan Asmath Bin Ismail. (மகன்) நபி(ச) அவர்களின் தூதுத்துவ வரலாறு 1976 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக ‘The Message’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதை சிரியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ‘முஸ்தபா அக்காப்’ என்பவர் இயக்கியிருந்தார். இப்பட உருவாக்கத்திற்கு எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகள் அனுமதியும், குவைட், லிபியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் வாக்களித்திருந்தன. இருந்தாலும் மக்காவிலுள்ள ‘ராபிதது ஆலமுல் இஸ்லாம்’ என்ற அமைப்பு இதற்கான அனுமதியை ...

November, 2018

  • 23 November

    இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு வலி (பொறுப்பாளர்) | Article 📖

    பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய ‘ஷாத்’ – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி ...

  • 22 November

    இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்.

    இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும் இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த ...

  • 21 November

    எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

    ஆசிரியர் பக்கம்: எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சூழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது குறைத்துக் கொண்டால் எம்மால் விற்க ...

  • 12 November

    இஸ்லாம்; விமர்சனங்களும் விளக்கங்களும்┇கட்டுரை.

    விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்: இஸ்லாம் குறித்து பலதரப்பாரும் பல்வேறுபட்ட விமர்சனங்களைச் செய்து வருகின்றனர். சிலர் ஏதேனும் ஒரு மத நிலைப்பாட்டில் இருந்து கொண்டே குறைமதியுடனும் குறை காணும் நோக்குடனும் குரோத மனப்பாங்குடனும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்களில் சிலவற்றுக்கு அவர்களின் மத நிலைப்பாட்டுடன் சம்பந்தப்படுத்தி சில விளக்கங்களை முன்வைத்தால் களத்தில் இருப்பவர்களுக்குப் பெரிதும் உதவியாக அமையலாம் எனக் கருதுகின்றேன். 01. விபச்சாரத்தைத் தூண்டும் குர்ஆன்(?): லூத் நபியின் சமூகத்தினர் தன்னினச் சேர்க்கையாளர்களாக இருந்தனர். லூத் நபியின் வீட்டிற்கு வானவர்கள் மனித ரூபத்தில் வந்த ...

  • 8 November

    திருமண வயதெல்லை┇கட்டுரை.

    இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் ...

  • 5 November

    விழி இழந்த பின் விளக்கெதற்கு | கட்டுரை.

    ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018) விழி இழந்த பின் விளக்கெதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம். ...

  • 2 November

    ஜமால் ஹாஷிக்ஜீ; உணரப்டவேண்டிய உண்மைகள்┇கட்டுரை

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர் – உண்மை உதயம் இஸ்லாமிய மாத இதழ்) ஜமால் கஷோக்ஜியின் படுகொலை விவகாரம் சர்வதேச மட்டத்திலும் முஸ்லிம்கள் மத்தியிலும் கடந்த சில வாரங்களாக சலசலப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. துருக்கியில் உள்ள சவூதி துணைத் தூதரகத்துக்குள் அவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பரவலாக அறியப்பட்ட விடயமாகும். இது தொடர்பில் சில கருத்துக்களை இந்த இடத்தில் பதிவிடலாம் என எண்ணுகின்றேன். ஜமால் கஷோக்ஜியின் படுகொலைக்காக அமெரிக்காவும் அழுகின்றது. ஐ.நா.வும் பதறுகின்றது. உண்மையில் கொலைக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் தார்மீக உரிமை ...