Sunday , 10 December 2023

Current Issues

August, 2016

July, 2016

June, 2016

 • 26 June

  இலங்கை தஃவாவில் வழிகெட்ட பிரிவுகளின் தாக்கம் எவ்வாறு இருக்கிறது? எது சரியான கூட்டம்? | Video | Qatar |Q&A.

  அகீதா ரீதியாக பிளவுபட்ட வழிகெட்ட பிரிவுகளின் தாக்கம் இலங்கையில்இருக்கும் ஜமாஅத்களில் எவ்வாறுதாக்கம் செலுத்தியிருக்கின்றது? எந்த ஜமாத்தில் நபி ஸல் அவர்களும் சஹாபாக்களும் வாழ்ந்துகாட்டிய நல்வழியை ஒத்த கொள்கையையுடன் வாழ்க்கையயை அமைத்துக்கொள்ளலாம்?

 • 6 June

  இஜ்திஹாதுடைய விடயங்களில் எதிர் பிரச்சாரம் இல்லை.

  நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது இஸ்லாத்தின் அடிப்படையான அடையாளங்களில் ஒன்றாகும். தஃவாவின் இலக்கு, விதிமுறை, அதைக் கையாளும் முறை, வரையறைகள் தொடர்பில் விடப்படும் பிழைகளும் உணர்ச்சி வசப்படும் நிகழ்வுகளும் இஸ்லாமிய உம்மத்தில் தேவையற்ற சர்ச்சைகளையும், பிளவுகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளன. நன்மையை ஏவுதல் எனும் போது நாம் ஏவுவது நன்மையாக இருக்க வேண்டும். அது நன்மை என்பதற்கு குர்ஆன், சுன்னாவில் ஆதாரம் இருக்க வேண்டும். மார்க்கத்தில் ஆதாரம் இல்லாத பித்அத்தான செயற்பாடுகளை ஏவும் உரிமை எமக்கில்லை. ஒருவர் ஒரு செயலை நல்லது என எண்ணி செய்து ...

May, 2016

 • 6 May

  கடமைகளை மறந்த உரிமைகள்.

  மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ வர்க்கங்களால் தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டன. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. சக்திக்கு மீறிய பணிகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. இவ்வாறு ஆதிக்க சக்திகளாலும் முதலாளித்துவ ...

April, 2016

February, 2016

 • 19 February

   ismailsalafi.com எட்மினின் செய்தி

  அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் இணையதளம் சில தடங்களால் இடையில் சீரற்ற நிலையில் இருந்தது. இதனால் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். குறுகிய நாட்களில் சிறந்த வரவேற்பைப் பெற்ற இணையதளமாக ஸலபியின் தளம் இருந்தது. அதன் ஓட்டம் அதே சீரில் தொடர்ந்து இயங்கும் என உறுதியளிக்கிறோம் இன்ஷா அல்லாஹ். இப்படிக்கு எட்மின்

 • 19 February

  மாடறுப்புத் தடைச்சட்டம் ஏற்படுத்தும் மறுவிளைவுகள்

  களுத்துறை பயாகல இந்துக் கல்லூரியின் தைப்பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் இலங்கையில் மாடறுப்பது முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். மாடறுப்பதைத் தடை செய்துவிட்டு உணவுக்காக மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடு குறித்து தான் நிதியமைச்சரிடம் ஆலோசனை கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ஆட்சியில் மாடறுப்பைத் தடுக்க வேண்டும் என பல இனத்தவர்கள் பலமான கோரிக்கையை முன்வைத்த போதும் இதற்காக பௌத்த தேரர் ஒருவர் தீக்குளித்து மரணித்த போதும் கூட அவர் இப்படியொரு வார்த்தையை வெளியிடவில்லை. ...