அரசியல்

March, 2018

January, 2018

  • 16 January

    பலஸ்தீனப் பிரச்சினையும் இஸ்லாத்தின் தீர்வும் | Article

    ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது இவரின் அறிவிப்பு ஏற்படுத்திய ஒரு நல்ல மாற்றமாகும். இதே வேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை ...

December, 2017

  • 25 December

    இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் எதிர்கொள்ள வேண்டிய முறையும்!! (கப்பலைக் காக்க கடலில் கொட்டித்தான் தீர வேண்டும்.) | கட்டுரை

    உண்மை உதய ஆசிரியர் பக்கக் கட்டுரை. வரலாறு நெடுகிலும் முஸ்லிம் சமூகம் பல்வேறுபட்ட சவால்களைச் சந்தித்தே வருகின்றது. சோதனைகளும், வேதனைகளும் முஸ்லிம் சமூகத்திற்கு புதிதல்ல. சோதனைகள் வாட்டி வதைத்தாலும், துன்பங்களும் துயரங்களும் துரத்தித் துரத்தி வந்தாலும் சோர்ந்து போகாமல் வாடி வதங்கிவிடாமல் தலை நிமர்ந்து நிற்பது அல்லாஹ்வின் அருள் மாத்திரமே என்பது தெளிவாகும். முஸ்லிம் சமூகம் அடுத்தவர்களால் சீண்டப்படும் வேளைகளில், உலமாக்கள் மற்றும் சமூக முன்னோடிகள் அவர்களைப் பொறுமையாக இருங்கள், துஆ செய்யுங்கள் என்று போதிப்பர். இதைத்தான் அவர்கள் செய்யவும் முடியும். அடுத்து சட்ட ...

  • 2 December

    சிறுபான்மைச் சமூகம்!!

    உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் அல்லாத பிற சமூகங்களுக்கு மத்தியில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்றனர். உலகில் வாழும் நால்வரில் ஒருவர் முஸ்லிம் எனும் அளவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் பிற மக்களுக்கு மத்தியில் சிறுபான்மையாகவே வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை முஸ்லிம்கள் பிற சமூகங்களுடன் சேர்ந்து வாழும் போது பல்வேறுபட்ட சமய, சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது? இந்தப் பிரச்சினைகளுக்கான மார்க்க ரீதியிலான தீர்ப்பை எப்படிப் பெறுவது? ...

November, 2017

  • 2 November

    ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!

    மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...

October, 2017

August, 2017

  • 23 August

    உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்┇கட்டுரை.

    துல் ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (رضي الله عنه) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக ...

  • 23 August

    பாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா?┇கட்டுரை.

    குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து இழுத்து நிறுத்தி அதனைச் சரியான வழியில் நகர்த்தியது இஸ்லாம்தான். உலகை அறியாமை ஆண்ட போது அறிவொளி பாய்ச்சியது, அடக்குமுறையை அடக்கி உலகமெங்கும் நீதி நெறியைப் பரப்பியது! பெண் கொடுமையை ஒழித்தது. சாதி வேறுபாட்டை வேரோடு சாய்த்தது. சிசுக் கொலையை நிறுத்தியது. கற்பழிப்பு போன்ற துஷ்பிரயோகங்களை துடைத்தெறிந்தது. இவ்வாறு சரியான திசையில் ...

  • 13 August

    கத்தார் + சஊதி பிரச்சினையில் நடுநிலை தவறி நாறிப்போவதேன்!┇கட்டுரை.

    இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். எதையும் பக்கச்சார்பு இல்லாமல் நடுநிலை தவறாமல் நோக்குவதையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இஸ்லாமிய உம்மத்தை அல் குர்ஆன் ‘உம்மதன் வஸதா” நடுநிலை சமுதாயம் என்றே அடையாளப்படுத்துகின்றது. ‘(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சி யாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத் தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற் காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். ” (2:143) ஆனால், கொள்கை வெறியுடன் கலந்த இயக்க வெறி இந்த இஸ்லாமிய பண்பை அழித்து விட்டது. எதையும் இயக்கக் கண்ணாடி போட்டுப் பார்ப்பதையும் நோக்குவதையும் வழக்கமாக மாற்றியுள்ளது. அண்மையில் ...