‘நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் அருளிய பின் உங்களிட மிருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், ‘அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டு அவருக்கு நீங்கள் உதவி செய்வீர்களா?’ என அல்லாஹ் நபி மார்களிடம் உறுதிமொழி வாங்கி, நீங்கள் இதை ஏற்றுக் கொண்டு எனது பலமான உடன்படிக்கையை எடுத்துக் கொண்டீர்களா? எனக் கேட்டபோது, ‘நாம் ஏற்றுக் கொண்டோம்’ என அவர்கள் கூறினர். அ(தற்க)வன், ‘நீங்களே (இதற்கு) சாட்சியாக இருங்கள். உங்களுடன் நானும் சாட்சியாளர்களில் உள்ளவனாவேன்’ என்று கூறியதை (எண்ணிப்பாருங்கள்.)’ ‘எனவே, இதன் பின்னரும் எவரேனும் ...
ஆய்வுகள்
November, 2017
August, 2017
-
30 August
இயேசு கடவுள் இல்லை┇கட்டுரை
‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...
-
18 August
அல் குர்ஆன் விளக்கம்-09: முறியடிக்கப்பட்ட யூதர்களின் சதி┇கட்டுரை.
‘(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொலை செய்ய) சூழ்ச்சி செய்தனர். (அதற் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் சூழ்ச்சியாளர்களில் மிகச் சிறந்தவனாவான்.’ (அல்குர்ஆன்-3:54) ஈஸா(அ) அவர்களது பிரச்சாரத்தை யூதர்கள் மறுத்தனர். சில சீடர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். இதன் காரணமாக இயேசுவை கொலை செய்ய யூதர்கள் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைபிள் சொல்லும் தகவல் பிரகாரம் அந்தக் கால அரசனுக்கு எதிராக இயேசு செயற்படுவதாக இராஜ துரோகம் செய்வதாகச் சோடித்து இயேசுவைப் பழிதீர்க்க முற்பட்டனர். இயேசு ஒவ்வொன்றிலிருந்தும் நுட்பமாகத் தப்பி வந்தார். ஈற்றில் இயேசுவைக் ...
-
8 August
பிக்ஹுல் இஸ்லாம் – 27- சேர்த்துத் தொழுதல்┇கட்டுரை.
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) ழுஹருடைய நேரத்தில் ழுஹருடன் அஸரையும், அஸருடைய நேரத்தில் அஸருடன் ழுஹரையும், இவ்வாறே மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளையும் இணைத்து சேர்த்துத் தொழுவதையே இது குறிக்கும். இதனை ‘ஜம்உ’ செய்தல் என்று கூறப்படும். ‘நிச்சயமாக தொழுகை நம்பிக்கை யாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது.’ (4:103) தொழுகை என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்ய வேண்டிய கடமையாகும். அப்படி இருந்தும் ழுஹர், அஸர் மற்றும் மஃரிப், இஷா ஆகிய தொழுகைகளை உரிய நேரத்திற்கு முந்தியோ அல்லது ...
July, 2017
-
30 July
அல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?┇கட்டுரை.
‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் ...
May, 2017
-
16 May
பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை.
அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...
April, 2017
-
25 April
பைபிளில் முஹம்மத் (07) – இயேசு அறிவித்த தேற்றவாளர் | கட்டுரை.
இயேசு அறிவித்த தேற்றவாளர் ‘ஒரு இறைத்தூதர் வருவார், அவர் தன்னை விட மகிமை மிக்கவராக இருப்பார், அவர் சகல சத்தியங்களுக்குள்ளும் மக்களை வழி நடாத்துவார் அவரது போதனை முழு மனித சமூகத்துக்குமுரியதாக இருக்கும். அவரது போதனை மாற்றப்பட மாட்டாது. உலகம் உள்ளளவும் பின்பற்றத்தக்க வழிகாட்டலாக அது இருக்கும். அவர் வெறுமனே போதனை செய்பவராக மட்டும் இல்லாமல் குற்றவியல் சட்டங்கள் மூலம் மக்களைக் கண்டித்து வழிநடாத்துவார்’ என முஹம்மத் நபி பற்றி இயேசு முழுமையான முன்னறிவிப்புக்களைச் செய்துள்ளார். அவர் முஹம்மத் நபி குறித்துளூ பரிசுத்த ஆவியானவர், ...
-
24 April
ஈஸா நபியின் அற்பதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 06 | கட்டுரை.
ஈஸா நபியின் அற்புதப் பிறப்பு குளோனிங் ஆகுமா? ‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்துள்ள ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு (ஒரு குழந்தையை வழங்க) நன்மாராயம் கூறுகின்றான். அதன் பெயர் மர்யமின் மகன் ஈஸா அல்மஸீஹ் என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்களில் உள்ளவராகவும் இருப்பார்’ என வானவர்கள் கூறியதை (எண்ணிப் பாருங்கள்.)’ ‘மேலும் அவர் தொட்டிற் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் மக்களுடன் பேசுவார். இன்னும் (அவர்) நல்லவர்களில் உள்ளவருமாவார் (என்றும் கூறினர்.)’ ‘(அதற்கு மர்யம்) ‘என் இரட்சகனே! எந்த ஆடவரும் ...
-
24 April
பைபிளில் முஹம்மத் (06) – பைபிளில் பத்ர் யுத்தம் | கட்டுரை.
இயேசு அல்லாத மற்றுமொரு இறைத் தூதரைப் பற்றி பைபிள் முன்னறிவிப்புச் செய்துள்ளது. அந்த இறைத்தூதர் இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் இருந்து வருவார் என்றும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. பைபிளில் வந்துள்ள முன்னறிவிப்புக்கள் இயேசுவைப் பற்றியே பேசுகின்றன என கிறிஸ்தவ உலகம் கூறி வருகின்றது. ஆனால், இஸ்மாயீல் நபியின் பரம்பரையில் அறபு நாட்டில் வருவார் என்று கூறப்பட்ட இறைத்தூதர் முஹம்மது நபியே என்பதை இரண்டாம் கருத்துக்கு இடமில்லாமல் உறுதியாகத் தெளிவுபடுத்தி வருகின்றோம். இந்தத் தொடரில் மற்றும் சில சான்றுகளைப் பார்க்க இருக்கின்றோம். நபி(ச) அவர்கள் ...
-
22 April
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சூனியத்தின் விளக்கம் | Riyadh KSA | 12-04-2017.
ரியாத்- பத்ஹா தஃவா நிலையத்தின் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க நிகழ்ச்சி, நாள் : 12:04:2017, இடம், Al Batha, Riyadh-KSA.வழங்குபவர் : அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர்: உண்மை உதயம் மாத இதழ், இலங்கை.
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்