அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே வழிபடுவதா?” என சிந்தித்தனர். இதன் முடிவாக சிலை வணக்கம் கூடாது என்பதை உணர்ந்தனர். ...
ஆய்வுகள்
February, 2018
-
20 February
குறைந்தபட்ச எண்ணிக்கை | ஜமாஅத்துத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம் – 34]
குறைந்தபட்ச எண்ணிக்கை ஜமாஅத்துத் தொழுகைக்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும். மாலிக் இப்னு ஹவைரிஸ்(ரலி) அறிவிக்கின்றார்: “பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” 📚 புகாரி- 630, அபூ தாவூத்- 589, இப்னு குஸைமா- 1510, (அறிஞர் அல்பானி இந்த ஹதீஸை ஸஹீஹான அறிவிப்பு என்கிறார்.) ...
January, 2018
-
26 January
ஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும்… அது கற்றுத் தரும் பாடங்களும்…
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் மீது விபச்சாரக் குற்றம் சுமத்தப்பட்டது. அந்நிகழ்வையொட்டி சூறா அந்நூரின் 10 வசனங்கள் அருளப்பட்டன. அந்நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனாலேயே அல்லாஹ்வும் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளான். முதலில் இந்நிகழ்வு குறித்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதைச் சுருக்கமாகப் பார்ப்போம். ஆயிஷா(ரலி) அறிவித்தார், ‘இறைத்தூதர்(ச) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு ...
-
26 January
பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் | ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]
பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். ஆயிஷா(ரலி) உம்மு ஸலமா(ரலி) போன்ற பெண்கள் இமாமத் செய்ததாக வரக் கூடிய செய்திகளும் இக்கருத்துக்கு வலுசேர்க்கின்றது. “உம்மு ஸலமா(ரலி) ...
-
26 January
யூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 14]
“(பாதுகாப்புக்கான) அல்லாஹ்வினது உத்தரவாதமும் மனிதர்களினது உத்தரவாதமும் இருந்தாலே தவிர, அவர்கள் எங்கு காணப்பட்ட போதும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. மேலும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். இன்னும் அவர்கள் மீது வறுமை விதிக்கப்பட்டு விட்டது. அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்தமையும், அநியாயமாக நபிமார்களைக் கொலை செய்து வந்தமையுமே இதற்கான காரணங்களாகும். இது அவர்கள் மாறு செய்து வந்ததாலும், வரம்பு மீறிக் கொண்டே யிருந்ததினாலுமாகும்.” (3:112) யூதர்கள் மீது இழிவும் வறுமையும் சாட்டப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளானவர்கள் என்று இந்த ...
December, 2017
-
26 December
ஜமாஅத்துத் தொழுகை-2 [பிக்ஹுல் இஸ்லாம்-32]
சென்ற இதழில் ஜமாஅத்துத் தொழுகை கட்டாயக் கடமை என்று கூறுவோரின் ஆதாரங்களை அவதானித்தோம். இந்த இதழில் ஜமாஅத்துத் தொழுகை ஷர்த்தோ, பர்ளு ஐனோ அல்ல என்ற கருத்துடையோரின் ஆதாரங்களை அலசவுள்ளோம். 01. தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 25 அல்லது 27 மடங்கு சிறந்தது என ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த ஹதீஸ் ஜமாஅத்துத் தொழுகையின் சிறப்பைக் கூறும் அதே வேளை, தனியாகத் தொழுவதற்கும் நன்மை உண்டு என்பதையும் விபரிக்கின்றது. பர்ழான தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழுவது ‘ஷர்த்’ என்றால் ‘ஷர்த்’ கடைப்பிடிக்கப்படாவிட்டால் அமல் பாத்திலாகி ...
-
26 December
தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு | Article
கட்டுரை ஆசிரியர் சகோதரி ஹுர்ரா, உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் புதல்வியாவர். தேனீ – அல்லாஹ்வின் அற்புத படைப்பு எம்.ஐ. ஹுர்ரா (கல்-எலிய மகளிர் அரபுக் கல்லூரி) ‘மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் உயரமாகக் கட்டியிருப்பவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்’ என தேனீக்கு உமது இரட்சகன் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.’ (16:68) அல்குர்ஆனில் அல்லாஹ்-வினால் நினைவு கூரப்பட்ட அற்புதப் படைப்புக்களில் தேனீயும் ஒன்றாகும். ஆரம்ப காலங்களில் தேனீயானது பூவிலிருந்து தேனைக் கொண்டு வரும். பூச்சி என்ற நம்பிக்கையில் ‘தேனைக் கொண்டு ...
-
8 December
மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)
மீலாதும் மௌலிதும் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள புத்தகம். எழுதியவர் – அஷ்ஷையக் இஸ்மாயில் ஸலபி. புத்தகத்தை பார்க்க கீழுள்ள புத்தகத்தின் பெயரை க்ளிக் செய்யவும். Click here மீலாதும் மௌலிலும் ஓர் இஸ்லாமியப் பார்வை. (Ebook)
-
8 December
ஜமாஅத்துத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-31]
பிக்ஹுல் இஸ்லாம் – 31 ஜமாஅத்துத் தொழுகை ஜமாஅத்துத் தொழுகை என்பது தனியான ஒரு தொழுகை கிடையாது. ஐவேளைத் தொழுகை மற்றும் இஸ்லாம் அங்கீகரித்த பெருநாள் மற்றும் கியாமுல் லைல் போன்ற தொழுகைகளைத் தனியாகத் தொழாமல் அணியாக – கூட்டாகத் தொழுவதையே இது குறிக்கும். ஐவேளைத் தொழுகைகளை ஒரு இமாமைப் பின்பற்றி கூட்டாகத் தொழுவதை இஸ்லாம் பெரிதும் வலியுறுத்திப் பேசியுள்ளது. ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பித்துப் பேசும் அதே வேளை அதைப் புறக்கணிப்பதைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளது. ஐவேளைத் தொழுகையைக் கூட்டாகத் தொழுவது இஸ்லாத்தின் அடையாளச் ...
November, 2017
-
24 November
”அல் முஹ்ஸணாத் ஒரு விளக்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (9) | Video.
அஷ்ஷெய்க்:S.H.M இஸ்மாயில் ஸலபி ”அல் முஹ்ஸணாத் ஒரு விளக்கம்” ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (9) AL QURAN TAFHSEER CLASS (9) (SURAH AN NISHA) Explanation ASHSHK SHM ISMAIL SALAFI @jtjm paragahadeniya 08/11/2017.
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்