ஸகாதுல் ஃபித்ர் ஒரு விளக்கம்

‘ஸகாதுல் ஃபித்ர்’ என்பது ரமழானின் நோன்பு முடிய ஓரிரு தினங்களுக்கு முன்பிருந்து, பெருநாள் தொழுகைக்காக மக்கள் செல்வதற்கு முன்னர் வரை ஒவ்வொரு முஸ்லிமும் செலுத்தவேண்டிய கட்டாய தர்மத்தைக் குறிக்கும். ஒருவர் தனது பொறுப்பில் இருக்கும் சிறு பிள்ளை, பெற்றோர், அடிமை உட்பட அனைவருக்குமாக இந்த கட்டாய ஸகாத்தை வழங்கியாக வேண்டும். எவ்வளவு? எவர்களுக்காக? ‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் ...

Read More »

ஸகாத்தின் முக்கியத்துவம்

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஸகாத்தும் ஒன்றாகும். பொருளாதாரத்துடன் சம்பந்தப்பட்ட இக்கடமை, உரிய முறையில் நிறைவேற்றப்படும்போது சமூகம் சார்ந்த பல்வேறு சவால்களைச் சமாளிக்கும் சாத்தியம் ஏற்படுகின்றது. இக்கடமையின் முக்கியத்துவம், சிறப்பு என்பவற்றையும், இதனைக் கூட்டு முறையில் நடைமுறைப் படுத்துவதின் அவசியத்தையும் இங்கு சுருக்கமாக நோக்குவோம். அடிப்படைக் கடமை: ‘இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது. (1) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வை அன்றி வேறு யாரும் இல்லை என்றும், முஹம்மத்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுதல். (2) தொழுகையை நிலைநாட்டுதல். (3) ஸகாத்தைக் ...

Read More »

நோன்பாளிகளே உங்களைத்தான்!

நோன்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்களை இங்கே சுட்டிக் காட்ட விரும்புகின்றோம். 2, 3 மணிக்கு ‘ஸஹர்’ செய்துவிட்டு அப்படியே உறங்குவது! இதன் மூலம் ஸஹரைப் பிற்படுத்துதல் என்ற சுன்னா விடுபடுவதுடன், சிலவேளை சுபஹுத் தொழுகை கூட தவறிவிடும் நிலை ஏற்படுகின்றது. சிலர் சுபஹுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு முன்னர் ‘ஸஹர்’ செய்தாலும், அதான் கூறும் வரை கொஞ்சம் சாய்ந்து கொள்வோம் என சாய்ந்தால், காலை 8, 9 மணிக்குத்தான் விழிக்கின்றனர். இதனால், ‘சுபஹ்’ தவறிவிடும் தவறு நேரிடுகின்றது! எனவே ஸஹரை, ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 08)

சூனியம் – தொகுப்புரை நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று கூறும் ஆதாரபூர்வமான ஹதீஸை மறுப்பதற்காகச் சகோதரர் பீஜே முன்வைக்கும் வாதங்களுக்கான மறுப்பை இது வரை பார்த்தோம். இந்தத் தொடரின் இறுதி அங்கமாக அவரது ஆக்கத்தின் முடிவு குறித்தும், நமது கட்டுரையின் தொகுப்புக் குறித்தும் இத்தொடரில் நோக்குவோம். ஹாரூத், மாரூத் என்பவர்களிடம் மக்கள் வந்து ஸிஹ்ரைக் கற்றுக் கொண்டதாக குறிப்பிடும் இறைவன், அதன் அதிகபட்ச விளைவு என்ன என்பதை நமக்கு அடையாளம் காட்டுகின்றான். ஸிஹ்ர் எனும் கலை மூலம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும் ...

Read More »

இறையச்சமே இலக்கு

‘ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்’ (2:183). நோன்பு இஸ்லாத்தின் பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாகும். இது இறுதி தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மூலமாக முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமன்றி முன்னுள்ள சமூகங்கள் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் பிரசாரப் பணியைப் புரிவதற்கு முன்னரே, ஜாஹிலிய்யாக் கால மக்கள் நோன்பை அறிந்திருந்தனர். முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றும் வந்தனர். ‘உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் ...

Read More »

ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் கண்டன அறிக்கை

24-07-2009 அன்று இரவு 7.00 மணி முதல் நடுநிசி வரை பேருவளை, மககொட பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலையின் போது நடந்த அசம்பாவிதங்கள் குறித்து ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் பொதுச் செயலாளர் A.L. கலீலுர் ரஹ்மான் அவர்களால் வெளியிடப்பட்ட கண்டன அறிக்கை; பேருவலை, மககொட பிரதேசத்தில் மஸ்ஜிதுர் ரஹ்மான் என்ற பெயரில் குர்ஆன், சுன்னா அடிப்படையில் செயற்பட்டு வரும் மஸ்ஜித் திட்டமிட்ட முறையில் ஒரு குழுவால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது, இரண்டு மாடிகளையுடைய மஸ்ஜித், இரண்டு மாடிகளையுடைய மத்ரஸா, வாசிகசாலை ...

Read More »

மஸ்ஜிதுக்குள் மனித மிருகங்களின் வெறியாட்டம்

பேருவலை – மஹகொட மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் எரிப்பும், படுகொலையும் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் இரத்தக் கறை படிந்த நிகழ்வாகப் பதிவாகி விட்டது. பேருவளை, தர்கா டவ்ன் பகுதிகளில் பல தியாகங்களுக்கு மத்தியில் ஏகத்துவப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. வீடுகளிலும், பொதுப் பள்ளிகளிலும் பல ஏச்சுப் பேச்சுகள், எதிர்ப்புக்கள், கல்லெறிகளுக்கு மத்தியில் தொடரப்பட்ட பிரச்சாரம், “உண்மை உதயம்” ஆசிரியரும், சகோதரர் தவ்பீக் மதனி அவர்களும் கடத்தப்பட்டுக் கர்ண கொடூரமாகத் தாக்கப்பட்டதன் பின்னர் புது வடிவம் பெற்றது. எமக்கெனத் தனிப் பள்ளிவாசல்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் பின்னர் தர்கா ...

Read More »

ஹதீஸ் விளக்கம் – கொலைக் குற்றத்திற்கும் மன்னிப்புண்டு

(அபூ ஸயீத் என்ற) ஸஅது இப்னு மாலிக் இப்னு ஸினான் அல்குத்ரீ(ரலி) அறிவிக்கின்றார்கள், உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் ஒருவன் இருந்தான். அவன் 99 கொலை செய்திருந்தான். (தவறை உணர்ந்த அவன்) இவ்வூரில் சிறந்த அறிஞர் யார் என்று விசாரித்தான். பனூ இஸ்ராயீல் கூட்டத்தில் ஓரு (மார்க்க அறிவு குறைந்த வணக்க-வழிபாட்டில் ஆர்வம் மிகுந்த) ராஹிப் இருக்கிறார் என்று அவனிடம் கூறப்பட்டது. அவன் அவரிடம் வந்து, தான் 99 கொலை செய்ததாகவும், தனக்கு மன்னிப்பு உண்டா? என்றும் கேட்டான். “இல்லை!” என்று அந்த ராஹிப் பதில் ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 06)

‘முஹம்மத்(ஸல்) சூனியம் செய்யப்பட்டவர்?’ இஸ்லாத்தின் எதிரிகள் நபி(ஸல்) அவர்களை மஸ்ஹூர் – சூனியம் செய்யப்பட்டவர் என விமர்சித்துள்ளனர். அப்படி விமர்சித்தவர்களைக் குர்ஆன் அநியாயக்காரர்கள் என்று கூறுகின்றது. இதன் மூலம் அவர்களது விமர்சனம் அல்லாஹ்வால் மறுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்க நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸ் கூறுகின்றது. எனவே இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற தோரணையில் வாதித்து சகோதரர் ஹதீஸை மறுக்கின்றார். இந்த வாதம் தவறானதாகும். இந்த வாதத்தை முன்வைப்பதன் மூலம் சகோதரர் தனக்குத் தானே முரண்படுகின்றார். சூனியம் என்றால் வெறும் சூழ்ச்சி, தந்திர ...

Read More »

மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 07)

ஹதீஸில் முரண்பாடா? ‘நபி(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது’ என்ற ஆதாரபூர்வமான அறிவிப்பை ‘அல்குர்ஆனுக்கு முரண்படுகின்றது’ என்று கூறி, சகோதரர் மறுத்து வருகின்றார். இவர் கூறும் காரணம் தவறானது என்பதை இதுவரை நாம் ஆராய்ந்தோம். ‘குறித்த இந்த ஹதீஸிற்குள்ளேயே முரண்பாடு இருக்கின்றது’ என்ற மற்றுமொரு வாதத்தையும் இந்த ஹதீஸை மறுப்பதற்குத் துணையாக முன்வைக்கின்றார். ‘மேற்கண்ட செய்திகளின் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறியப்பட்டாலும், அதில் கூறப்படும் கருத்துக்கள் குர்ஆனுக்கு எதிராக அமைந்துள்ளதாலும், அந்த அறிவிப்புக்களில் முரண்பாடு இருப்பதாலும் இதை நாம் ஏற்கக்கூடாது.’ (பிஜே தர்ஜமா பக்:1311) இந்த ...

Read More »