அகீதாவைப் புரிந்துகொள்ள சில அடிப்படைகள் – 1

இஸ்லாத்தின் அத்திபாரமாகத் திகழ்வது அகீதாவாகும். இஸ்லாமியப் பிரசாரத்தின் முக்கிய இலக்கும் அகீதாவாகும். அகீதாவைப் போதிக்காமல் அதற்கு முதன்மை வழங்காமல் இஸ்லாமியப் பிரசாரத்தை முன்னெடுக்க முடியாது. இஸ்லாமிய அமைப்புகளும், இஸ்லாமிய அழைப்பாளர்களும் அடிப்படையான அகீதாவுக்கு வழங்க வேண்டிய முக்கியத்துவத்தை உரிய முறையில் வழங்கத் தவறி விட்டன என்றே கூற வேண்டும். அகீதாவை விட ஃபிக்ஹ் மஸ்அலாக்களும், பழாயில்களும்தான் அதிகமாக மக்களிடம் தாக்கம் செலுத்தியுள்ளன. இஸ்லாமிய அகீதாவில் அல்லாஹ்வின் அழகுத் திரு நாமங்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கையும் முக்கியமானதாகும். தவ்ஹீதை மூன்று வகைகளாகப் பிரித்து நோக்கும் அறிஞர்கள், ...

Read More »

மக்கள் மனங்களைக் கவர – 2

இரகசியம் பேணுதல்:- நட்பும், அன்பும் நீடிக்க நெருங்கிப் பழகுகின்றவர்களின் இரகசியங்களைப் பேணுவது அவசியமாகும். இரகசியங்களை அம்பலப்படுத்துபவன் மாணத்தை வாங்குபவன் என்று அறிந்துவிட்டால் யாரும் நெருங்கிப் பழக முன் வரமாட்டார்கள். தோழமையுடன், நட்புணர்வுடன் கதைக்க முற்படமாட்டார்கள். இத்தகையவர்கள் அனாவசியமாக அடுத்தவர்களின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அப்துர் ரஹ்மான் அஸ்ஸலமீ எனும் அறிஞர் சகோதரர்களின் இரகசியங்களைப் பேணுவது என்பது நட்புறவின் ஒழுங்குகளில் உள்ளதாகும் என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறே மற்றும் சில அறிஞர்கள் நல்லவர்களின் உள்ளங்கள் இரகசியங்களின் புதைகுழிகள் என்று கூறுவர். இரகசியங்கள் சிலரிடம் சொல்லப்பட்டால் அவர்களது ...

Read More »

மக்கள் மனங்களைக் கவர!

அழைப்புப் பணி புரிவோரும், சமூகப் பணி புரிவோரும் மக்களால் நேசிக்கப்பட வேண்டும். தாம் நேசிக்கும் ஒருவரின் கருத்துக்குத்தான் மக்கள் மதிப்பளித்துப் பழக்கப்பட்டுள்ளனர். எனவே பிறர் மீது தனது ஆளுமையைப் பிரயோகிக்க விரும்புபவர் முதலில் அவரால் நேசிக்கப்படக் கூடியவராகத் தன்னை மாற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த வகையில் மக்கள் மனங்களைக் கவரவும், அவர்களைத் தன் பால் ஈர்த்தெடுக்கவும், அவர்களது நேசத்தைப் பெறவும் இஸ்லாம் காட்டும் சில வழிகாட்டுதல்களைத் தொகுத்து நோக்குவது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகின்றேன். 1. அல்லாஹ்வின் நேசத்தைப் பெறல்: மக்கள் உங்களை நேசிக்க ...

Read More »

நபிவழி நடப்போம்!

ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. “நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6) இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள். நேசத்தின் வெளிப்பாடு: நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ...

Read More »

பித்அத்தின் தீய விளைவுகள் – 2

(7) மூட நம்பிக்கை சார்ந்த குழப்பங்களில் வீழ்தல்: மார்க்க ரீதியாக எழும் எந்தக் குழப்பமாக இருந்தாலும் அதில் அதிகம் வீழ்பவர்களாக பித்அத்காரர்கள் இருப்பார்கள். “இத்தூதரை அழைப்பதை உங்களுக்கிடையில் சிலர் சிலரை அழைப்பது போன்று ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களில் யார் மறைவாக நழுவிச் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிவான். அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ, அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக்கொள்ளட்டும்.” (24:63) பித்அத் செய்வோர் அல்லாஹ்வின் தூதருக்கு எதிராகச் செயற்படுபவர்கள் என்ற அடிப்படையில் பித்னாக்களில் வீழ்ந்து ...

Read More »

பித்அத்தின் தீய விளைவுகள் – 1

முஸ்லிம் உம்மத்தில் இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய வழிகேடுகளே பித்அத்துகளாகும். இந்த பித்அத்துகளால் பல்வேறுபட்ட பாரதூரமான எதிர்விளைவுகள் உருவாகின்றன. ஆனால், பித்அத்தான விடயங்களைச் சாதாரணமாகக் கருதும் சிலர், அவற்றைச் செய்வதில் பின்னிற்பதில்லை. அது போல், பித்அத் பற்றிப் பேசுபவர்களை சின்னத்தனமாய் நோக்கும் நிலையும் காணப்படுகிறது. எது எவ்வாறாயினும், பித்அத் புரிவோர் பல பாதிப்புகளை சம்பாதிக்கின்றனர் என்பது நபி(ஸல்) அவர்களின் கண்டிப்பான எச்சரிக்கையாகும். அப்பாதிப்புகளை முறையாக உணர்ந்தால்தான் பித்அத் எவ்வளவு பாரதூரமான குற்றம் என்பதை உணரலாம். எனவே பித்அத் ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து சுருக்கமாகப் புரிந்துகொள்ள முனைவோமாக! ...

Read More »