“முத்ஆ திருமணம்” ஒரு தெளிவான விபச்சாரம்

முத்ஆ திருமணம் என்பது ஒரு தெளிவான விபச்சாரம் என்பது சாதாரண மக்களுக்கும் புரிகின்றது. எனவே, முஸ்லிம் பொதுமக்களிடம் ஷிஆயிஷத்தைப் பரப்புவதில் சிக்கல் ஏற்படுகின்றது என்பதால் ஷிஆக்கள் தமது வழக்கமான யூதப் பாணியிலான சதித் திட்டங்களில் ஈடுபடுகின்றனர். முத்ஆ திருமணம் ஏனைய திருமண முறைகளைப் போன்றதுதான் என நிலைநாட்டி தமது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முற்படுகின்றனர். அதாவது, பொதுவான ஒரு திருமண முறையை அறிந்து வைத்திருக்கின்றோம். இந்த பொதுவான திருமணத்திற்கு மாற்றமான மற்றும் சில திருமண முறைகள் உள்ளன. அவற்றையும் பல இஸ்லாமிய அறிஞர்கள் சரி கண்டுள்ளனர். ...

Read More »

காஸா – இரத்தம் சிந்தும் பூமி

புனித பூமியான பலஸ்தீனம் யூத இன வெறியர்களால் இரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பலஸ்தீனத்தை ஆக்கிரமித்த யூதர்கள் ஐரோப்பா முழுவதும் சிதறி வாழ்ந்த இஸ்ரேலியர்களைக் குடியமர்த்தி இஸ்ரேல் எனும் சட்டவிரோத தேசத்தை உருவாக்கினர். இதற்கு அமெரிக்காவும் பிரிட்டனும் ஒத்து ஊதின. இன்றைய இஸ்ரேலின் குடிமக்களில் 80 சதவீதமானோர் வந்தேறு குடிகளாவர் இதனால் பலஸ்தீனர்களின் பூமி பறிபோனது. அவர்களது உரிமைகள் பறிக்கப்பட்டது மட்டுமல்லாமல் உயிர்களும் பறிக்கப்பட்டு வருகின்றன. வளைகுடாப் பிராந்தியத்தில் எந்தவொரு முஸ்லிம் நாடும் பலம் பெற்றுவிடக் கூடாது என்பது இஸ்ரேலின் இலட்சிய இலக்காகும். அண்மைக் காலமாக ...

Read More »

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு

குழந்தைகளை நெறிப்படுத்துவதில் தண்டணைகளின் பங்கு “உப்புத் திண்டவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்புச் செய்தவன் தண்டனை பெற வேண்டும்” என்பர். தண்டனைகள் தவறு செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும், தவறு செய்தவன் மேலும் தவறு செய்யாமல் இருக்கவும் உதவும். நாம் இங்கு குற்றம் செய்யும் குழந்தைகளைத் தண்டித்தல் குறித்து அலச உள்ளோம். குழந்தைகள் குற்றம் செய்தால் பெற்றோர்கள் உடல் ரீதியாகத் தண்டிக்கக் கூடாது. அப்படித் தண்டித்தால் பிள்ளைகள் பெற்றோருக்கு எதிராக காவல் துறையினரிடம் புகார் செய்யலாம் என சில நாடுகள் சட்டம் இயற்றி பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையில் ...

Read More »

மாநபி முஹம்மத் (ஸல்)

முஸ்லிம் உலகைத் தொடர்ந்தும் கொதிநிலையில் வைத்திருக்க வேண்டும் என எதிரிகள் சதி வலை பின்னி வருகின்றனர். ஏதாவது ஒரு பிரச்சினை முஸ்லிம் உலகில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எனவே, திடீர் திடீரென நபி(ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப் படுத்தும் கார்ட்டூன்கள், கட்டுரைகள், குறும்படங்கள் என பல வழிகளிலும் சதியெனும் வலையைப் பின்னிக் கொண்டேயிருக்கின்றனர். இவர்கள் இத்தகைய இழிசெயல்களில் ஈடுபடும் போதெல்லாம் முஸ்லிம்களும் வீதியில் இறங்கிப் போராடுகின்றனர். உயிர் இழப்புக்களும், பொருள் இழப்புக்களும் இதனால் ஏற்படுகின்றன. இதைப் பார்க்கும் சாதாரண நடுநிலைவாதிகளான மாற்றுச் சமூக ...

Read More »

அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா

சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும். நாங்கள்தான் சத்தியத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என கூறித் திரியும் ஒரு கும்பல், ‘சூனியத்தினால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும்’ என நம்புபவர்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யபட்டதை நம்புபவர்கள் முஷ்ரிக்குகள். சூனியத்தில் நுணுக்கமான ‘ஷிர்க்குகள் ...

Read More »

ஷீயாக்கள் உஷார்

அப்துல்லாஹ் பின் ஸபா எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர். நபியவர்களது மரணத்தின் பின்னர் அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சித் தலைமைக்குரியவர்கள் என்று ஆரம்பத்தில் சிந்தித்தனர். அன்று வாழ்ந்த சில நல்லவர்களிடமும் இந்த எண்ணம் இருந்தது. ஆனால் அவர்கள் ஏனையவர்களின் ஆட்சியை எதிர்க்கவில்லை. இந்த ஷீயாக்கள் தமது தவறான சிந்தனைகளையெல்லாம் இங்கிருந்துதான் ஆரம்பித்தனர். ‘நபியவர்களுக்குப் பின்னர், அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் ...

Read More »

கற்றுக்கொண்ட எட்டுப் பாடங்கள்

ஒரு ஆசிரியரிடம் மாணவர் ஒருவர் நீண்டகாலமாகக் கற்று வந்தார். ஒரு நாள் அந்த ஆசிரியர் தனது மாணவரிடம் எவ்வளவு காலமாக நீ என்னுடன் நெருக்கமாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு மாணவர் 33 வருடங்கள் என்று கூறினார். தொடந்து அந்த, ஆசிரியர் : என்னிடமிருந்து நீ இந்தக் காலப் பகுதியில் எதைக் கற்றாய்? மாணவன் : எட்டு விடயங்களைக் கற்றுக் கொண்டேன். (இது கேட்ட ஆசிரியர் அதிர்ந்து போனார். திறமையான மாணவன். ஆனால் இவ்வளவு காலமாக எட்டே எட்டு விடயங்களைத்தான் கற்றுக் கொண்டதாகக் கூறுகின்றானே! என ஆச்சரியப்பட்டார்.) ...

Read More »

ஈமானிய உறுதியுடன் எதிர்கொள்வோம் (தலையங்கம் – இலங்கை விவகாரம்)

இலங்கை ஒரு அழகான பூமி. இயற்கை வளங்கள் நிறைந்த தீவு. இங்கு வாழும் மக்களும் பொதுவான மனித இயல்புகளில் முன்னேற்றம் கண்டவர்கள். இந்த அழகிய தேசத்தை மொழிவெறியும், இனவெறியும் சேர்ந்து இரத்தம் சிந்தும் பூமியாக மாற்றியது. வாகனங்களுக்கு சிங்கள மொழியில்தான் ‘ஸ்ரீ’ போட வேண்டும் எனப் பெரும்பான்மை இனத்தவர்களும், நாம் தமிழில்தான் போடுவோம் என தமிழர்களும் பிடிவாதமாக இருந்தனர். இதற்காக இந்த இலங்கை நாட்டின் மைந்தர்கள் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இப்படி மொழிவெறி பேசிய ஒருகாலம் இருந்தது. பலரது உயிர்களைக் காவுகொண்ட அந்த ...

Read More »

அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம்.  எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என ...

Read More »