வரலாறு

November, 2017

  • 27 November

    ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]

    ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் பார்க்கவில்லையா? என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள். முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். எம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற ...

  • 21 November

    மூஸா நபியும்… அதிசயப் பாம்பும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-3]

    மூஸா (அலை) அவர்கள் ஒரு நபியாவார்கள். அவருக்கு ‘தவ்றாத்” வேதம் வழங்கப்பட்டது. அவர் இஸ்ரவேல் சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதராவார்கள். அவர் ஒரு நாள் தன் மனைவியுடன் எகிப்துக்கு வந்து கொண்டிருந்தார். இடைநடுவில் இரவாகிவிட்டது. அப்போது தூரத்தில் வெளிச்சத்தைக் கண்டார். வெளிச்சம் தென்பட்ட பகுதியில் மக்கள் இருக்கலாம்; அவர்களைச் சந்தித்தால் ஏதேனும் உதவியைப் பெறலாம்; பயண உதவிக்கு நெருப்பு எடுத்து வரலாம் என எண்ணினார். எனவே, மனைவியை ஒரு இடத்தில் இருக்கச் சொல்லிவிட்டு வெளிச்சம் வந்த திசை நோக்கி நடந்தார். அங்கு சென்ற போதுதான் அந்த ...

  • 6 November

    முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.

    ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம். எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ...

  • 2 November

    ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!

    மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...

October, 2017

  • 22 October

    காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்.]

    திருக்குர்ஆன் கூறும் கதைகள் -அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)- சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது. இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் ...

  • 4 October

    சர்வதேச அலட்சியத்திற்கு மத்தியில் றோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை | ODDAMAVADI.

    ராபிதாவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு. காலம்: 22.09.2017 வெள்ளிக்கிழமை. இடம்: ஹிழ்ரிய்யா ஜும்ஆ மஸ்ஜித் மாஞ்சோலை.

August, 2017

  • 30 August

    இயேசு கடவுள் இல்லை┇கட்டுரை

    ‘அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக ஈஸாவின் உதாரணம், ஆதமின் உதாரணத்தைப் போன்றதாகும். அவன் அவரை மண்ணிலிருந்து படைத்து பின்னர் அவருக்கு ‘குன்’ (ஆகுக) என்றான். உடனே அவர் (மனிதராக) ஆகிவிட்டார்.’ (3:59) இயேசு தந்தை இன்றிப் பிறந்தவர். அவருக்குத் தந்தை இல்லை என்பதால் கிறிஸ்தவ உலகு அவரைக் கடவுளின் குமாரன் என்றும் கடவுள் தன்மை வாய்ந்தவர் என்றும் நம்புகின்றது. இயேசு போதித்த போதனைக்கு இது எதிரானதாகும். இயேசுவின் உதாரணம் ஆதம் நபியின் உதாரணத்தை ஒத்ததாகும் என இந்த வசனம் கூறுகின்றது. தந்தை இன்றிப் பிறந்ததால் இயேசுவைக் கடவுள் ...

  • 23 August

    உஸ்மான் (رضي الله عنه) அவர்களின் கொலையும் கொள்கைக் குழப்பவாதிகளின் நிலையும்┇கட்டுரை.

    துல் ஹஜ் மாதத்தில்தான் மூன்றாம் கலீபா உத்தமர் உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டார்கள். அவர்களது கொலை இஸ்லாமிய உலகில் தொடரான பித்னாக்களையும் உள் முரண்பாடுகளையும் கொள்கைக் குழப்பங்களையும் உருவாக்கியது. ஆனால், உஸ்மான்(رضي الله عنه) அவர்கள் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்ட அற்புதமான ஒரு தலைவராவார். ஒவ்வொரு தலைவரும் தனது அதிகாரத்தையும் ஆயுளையும் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மனோநிலையில் தான் இருப்பார்கள். ஆனால், உஸ்மான் (رضي الله عنه) அவர்கள் தனது பதவியையும் உயிரையும் காப்பதற்காக ...

  • 12 August

    தனி மரம் தோப்பாகாது! தனித்து சிந்திப்பது தீர்வாகாது┇கட்டுரை.

    அடுத்தவர் தம்மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என அஞ்சும் போதுதான் புரட்சிகளுக்கான வித்துக்கள் விதைக்கப்படுகின்றன. அடுத்தவர்களின் முன்னேற்றத்தில் எமது அழிவு ஏற்படும் என அஞ்சும் போதுதான் இன, மத வெறிகள் உண்டாகின்றன. அடுத்தவர்கள் முன்னேறுவது போல் நாமும் முன்னேறுவோம் என்று முயன்றால் அது சமூக நலன் என்று சொல்லலாம். அவர்கள் வளர்ந்தால் அது எமக்குப் பாதிப்பு என்பதால் அவர்களை வளரவிடக் கூடாது என்று செயற்படும் போதுதான் இனவாதம், மதவாதம், வன்முறைகள், வெறியாட்டங்கள் உண்டாகுகின்றன. இந்த இனவாத, மதவாத செயற்பாடுகள் எங்கும் வளர்ச்சிக்கு வழியாக அமைந்திருக்காது. அழிவுக்கான ...

July, 2017

  • 30 July

    அல் குர்ஆன் விளக்கம்┇முஸ்லிம்கள் பைபிளை நம்ப வேண்டுமா?┇கட்டுரை.

    ‘மேலும், அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் அவன் கற்றுக் கொடுப்பான்.’ (3:48) ஈஸா நபிக்கு தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பது பற்றி இங்கே கூறப்படுகின்றது. மூஸா நபிக்கு தவ்றாத் வேதமும் ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதமும் அருளப்பட்டதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக இதை நம்ப வேண்டும். குர்ஆனில் தவ்றாத், இன்ஜீல் பற்றி புகழ்ந்து பேசப்பட்டுள்ளது. கிறிஸ்தவ உலகு மூஸா நபியின் வேதத்தைப் பழைய ஏற்பாடு என்றும் ஈஸா நபியின் போதனையை புதிய ஏற்பாடு என்றும் கூறி இரண்டையும் இணைத்து பைபிள் ...