பொதுவானவை

April, 2018

  • 3 April

    சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

    அல்லாஹுதஆலா சில நாட்களை சிறப்பித்துள்ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக ...

March, 2018

  • 11 March

    அணுபவப் பகிர்வு… அப்துல் ஹமீல் பக்ரி (ரஹ்)

    சென்னையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் ‘அஹ்லே ஹிங்’ (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி ‘நீங்கள் கொழும்பா?’ என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் ...

February, 2018

  • 26 February

    ”உலோபித்தனத்திற்கும் முகஸ்துதிக்கும் இடையில் தர்மம்” @ JTJM PARAGAHADENIYA.

    அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (14) ”ULOBITTANATTHITKUM MUGASTUDITKUM EDAYIL DHARMAM” AL QURAN TAFHSEER CLASS (14) (SURHA AN NISA EXPLANATION) ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 17/01/2018. 

  • 13 February

    அனுபவப் பகிர்வு: அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்)

    சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் “அஹ்லே ஹிந்த்” (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி “நீங்கள் கொழும்பா?” என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் செய்து ...

  • 10 February

    பெப்ரவரி 14 – காதலர் தினம் | ஆசிரியர் பக்கம் | கட்டுரை

    சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. ‘பெற்றோர் தினம்’, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள ...

January, 2018

  • 26 January

    உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..

    இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” -58:11 இந்த வசனத்தில் கல்வி, ...

  • 19 January

    இஸ்லாத்தில் மனித நேயம் காத்தல் | Video | Paragahadeniya

    அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி ஸுரதுன் நிஸா தொடர் விளக்க வகுப்பு (13) ”ISLATHIL MANIDA NEYAM KAATTAL” AL QURAN TAFHSEER CLASS (13) (SURHA AN NISA EXPLANATION) ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 10/01/2018. 

  • 16 January

    இப்றாஹிம் நபியும்… நான்கு பறவைகளும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-11]

    இப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்சியைக் கண்ட இப்றாஹீம் நபியின் உள்ளத்தில் ஓர் எண்ணம் எழுந்தது. “பல உயிரினங்களின் வயிற்றில் பிரிக்கப்பட்ட இந்த உடலை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்?” என்பதுதான் அது! இந்த எண்ணத்தோடு இப்றாஹீம் நபி அல்லாஹ்விடம், “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்று எனக்குக் காட்டுவாயா?” என்று கேட்டார்கள். “இப்றாஹீம்! நீ நம்பவில்லையா?” என அல்லாஹ் கேட்டான். “இல்லை… இல்லை… நான் நம்புகின்றேன். இதைக் ...

  • 9 January

    இயற்கை அழிவுகள்’ ஏன் வருகின்றன? | Kuwait | Jumua | 2017.

    தலைப்பு; ‘இயற்கை அழிவுகள்’ ஏன் வருகின்றன? ஜும்மா உரை: S.H.M. இஸ்மாயில் (ஸலஃபி) B.A.Hons இடம்; Fahaheel,Jumma’h Majid Date: 22/12/2017. 

December, 2017

  • 27 December

    பெண்ணே பெண்ணே! அறுவை வேண்டாம் | (‘பெண்களே உங்களுக்குத்தான்’ எனும் புத்தகத்திலிருந்து) | Article

    மனிதர்களில் சிலர் சரியான அறுவைப் பாட்டியாக இருப்பர். பேசிக் கொண்டே இருப்பர். இந்தப் பேச்சு வெறுப்பேற்றுவதாகக்கூட இருக்கும். இத்தகைய இயல்புடையோர் பெண்களிலும் இருக்கின்றனர். ஒரே விடயத்தை ஒரே நபரிடம் ஒன்பது தரம் பேசுவர். அதன் பிறகும் பேசத் தயாராக இருப்பர். ஆனால் பாவம்! கேட்பவர்கள் பாடோ படுதிண்டாட்டம்தான். சலிப்போ, களைப்போ இல்லாமல் கதைத்துக் கொண்டிருப்பர். சிலருக்கு வீட்டில் வேலையிருக்காது. ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்காக அடுத்த வீட்டிற்குப் போய் அறுக்க ஆரம்பிப்பர் . இவளுக்கு வேலையில்லாமல் பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்கும் வேலையில்லாமல் இருக்குமா? அல்லது இவளது ...