கட்டுரைகள்

November, 2018

  • 21 November

    எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

    ஆசிரியர் பக்கம்: எதிர்கால இருப்புக்கு தீர்வு என்ன? இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர் எமது பொருளாதாரத்தினதும் இருப்பினதும் முதுகெலும்பாக வியாபாரம் பார்க்கப்படுகின்றது. அந்த முதுகெலும்பை முறித்துவிட்டால் முதுகெலும்பு முறிந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும். இது ஆபத்தான நிலையாகும். இனவாத சிந்தனைகள் கிளரப்படுகின்றது. ஒரு சமூக சூழலில் மற்ற சமூகங்களில் தங்கி வாழும் பொருளாதார அடித்தளத்தில் எமது சமூகத்தின் அத்திரவாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. வர்த்தகம் என்பது விற்றல்-வாங்குதல் என்ற இரு பக்கங்களைக் கொண்டது. வாங்குவதை நிறுத்திவிட்டால் அல்லது குறைத்துக் கொண்டால் எம்மால் விற்க ...

  • 8 November

    திருமண வயதெல்லை┇கட்டுரை.

    இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற நிலை இருந்தது. தற்போது ஒரு சாரார் ...

  • 5 November

    விழி இழந்த பின் விளக்கெதற்கு | கட்டுரை.

    ஆசிரியர் பக்கம் : (செப்டம்பர் 2018) விழி இழந்த பின் விளக்கெதற்கு இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இனவாத அமைப்புக்கள்| முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுக்கு இல்லாத சலுகைகளைப் பெற்று வருவதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்ற தோரணையில் கருத்து வெளியிட்டு வந்தன. முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் காழி நீதிமன்ற அமைப்புக்கள் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வந்தன. சதிகளும் சவால்களும் நிறைந்த இந்த சூழலில்தான் நாம் சர்ச்சைப்பட்டு வருகின்றோம். ...

  • 2 November

    அல் குர்ஆன் விளக்கம் (21); மனித இனத்தின் தோற்றம்; அடிமைப்பெண் மற்றும் மஹரின் சட்டம்┇கட்டுரை.

    05. அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் ஏன் அனுமதியளித்தது! பலதார மணம் புரிந்து நீதமாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால் ஒரு மனைவியுடன் அல்லது உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட உங்கள் அடிமைப் பெண்களுடன் போதுமாக்கிக் கொள்ளுங்கள் என 4:3 ஆம் வசனம் கூறுகின்றது. அடிமைப் பெண்களை மிருகங்களாக நடத்தும் வழிமுறையும் அவர்களைப் பாலியல் தேவைக்காக பயன்படுத்தும் நடைமுறையும் காலா காலமாக இருந்து வந்தது. 19 ஆம் நூற்றாண்டு வரை அடிமைகள் இவ்வாறுதான் நடத்தப்பட்டு வந்தனர். இஸ்லாம் இந்த அடிமைகள் விடயத்தில் சீர்திருத்தங்களைக் ...

October, 2018

  • 16 October

    பாவாத மலையும் (Adam’s Peak) இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்┇Article.

    இலங்கை சப்ரகமுவ மத்திய மாகாணங்களுக் கிடையே கடல் மட்டத்தில் இருந்து 2243 மீட்டர் (7359 அடி) உயரத்தில் கூம்பு வடிவிலாக இந்த மலை அமைந்துள்ளது. இந்த மலை அனைத்து சமய மக்களாலும் புனிதத்துவத்துடன் நோக்கப்படுகின்றது. இந்த மலை உச்சியில் ஒரு பாதச் சுவடு உள்ளது. மலை உச்சியில் 1.8 மீட்டர் அளவான பாறையில் இப்பாதம் பதிந்துள்ளது. இந்தப் பாதச் சுவடு புத்தருடையது என பௌத்தர்கள் நம்பி அதை வழிபட்டு வருகின்றனர். அவர்கள் இதை ‘சிறீபாத’ என அழைக்கின்றனர். இந்துக்கள் இது சிவனின் பாதச் சுவடு ...

  • 7 October

    ஜூம்ஆத் தொழுகை

    பிக்ஹுல் இஸ்லாம் – 39 (ஆகஸ்ட் – 2018) …………………………………………………. ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜூம்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜூம்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜூம்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா இணைந்தார்கள். உலகம் ...

  • 1 October

    இளமையும் இஸ்லாமும் | Article.

    இளமையும் இஸ்லாமும் ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் கூடியதிலிருந்தும் உங்களைப் படைத்தான். பின்னர் உங்களை சிசுவாக வெளியேற்றுகின்றான். பின்னர் உங்கள் இளமையை நீங்கள் ...

September, 2018

  • 11 September

    தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை.

    இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. இன்று நூற்றுக் கணக்கான கிலோ போதை வஸ்த்துக்கள் கைப்பற்றப்படும் நிலைக்குச் சென்றுள்ளது. யுத்தத்திற்குப் ...

July, 2018

  • 28 July

    தோட்டக்கார நண்பா! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-24]

    இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருக்கும் தோட்டம் இருந்தன. இருவரும் விவசாயிகள். அதில் ஒருவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட இறை விசுவாசி. மற்றொருவர் இறை நிராகரிப்பில் உள்ளவர். அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ சரியான நம்பிக்கை அவரிடம் இருக்கவில்லை. அல்லாஹ் அந்த இறை நிராகரிப்பாளருக்கு இரண்டு தோட்டங்களை வழங்கி இருந்தான். தோட்டத்தில் திராட்சை காய்த்து கொத்துக் கொத்தாக காட்சித் தந்தது. தோட்டத்தைச் சூழ பேரீத்தம் மரங்கள் இருந்தன. மரங்களுக்கு நடுவே வேறு பயிர்களும் செழித்து வளர்ந்தன. அந்த இரு தோட்டங்களுக்கும் மத்தியில் ஒரு ...

  • 26 July

    பொறுமையும்… உறுதியும்… [அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் – 23]

    لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏ ‘நிச்சயமாக நீங்கள் உங்களது செல்வங் களிலும் உங்கள் உயிர்களிலும் சோதிக்கப் படுவீர்கள். இன்னும் உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் இணைவைத்தோரிடமிருந்தும் அதிகமான நிந்தனை(வார்த்தை)களையும் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் நிச்சயமாக அது உறுதிமிக்க காரியங் களில் உள்ளதாகும்.’ (3:186) உங்கள் செல்வங்கள், உயிர்களில் ...