கட்டுரைகள்

September, 2015

 • 22 September

  தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

  ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக் கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும், ஆண்களுக்கு அவர்களை விட ஒருபடி உயர்வுண்டு! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.’ (2:228) இந்த வசனம் பல ...

 • 22 September

  முஹம்மது நபியின் முறைப்பாடு

  ஒரு குற்றம் செய்து பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் அதனை முறைப்பாடு செய்யப் போவதாக அறிந்தால் நாம் அச்சமடைகின்றோம். பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி சமரசம் செய்து கொள்ள முற்படுகின்றோம். செய்த குற்றத்திற்கு ஏற்ப ஏதாவது கொடுத்தேனும் முறைப்பாடு செய்யாமல் சமாதானப்படுத்த முனைகின்றோம். முறைப்பாடு ஏன் செய்யப்படுகின்றது? யாரிடம் யாரால் செய்யப்படுகின்றது? என்பதற்கு ஏற்ப அதற்கு அழுத்தமும் இருக்கின்றது. ”எனது இரட்சகனே! நிச்சயமாக எனது சமூகம் இந்தக் குர்ஆனை வெறுக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டார்கள்’ என இத்தூதர் கூறுவார்.’ (25:30) இந்தக் குற்றச்சாட்டும், முறைப்பாடும் அகிலத்தாரின் அருட்கொடை அண்ணல் ...

 • 22 September

  இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

  அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது போன்ற உணர்வை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். இறுகிப் போன உள்ளங்கள் இளகி நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் மனதை ஆட்கொண்டிருந்த அச்ச உணர்வுகள் அகல ஆரம்பித்துள்ளன. ...

 • 22 September

  அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகமும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்

      உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ;பிர யோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ;பிரயோகத்துக்குள்ளாவதை பெரும்பாலான வர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் ...

 • 22 September

  நபித்தோழர்களின் விளக்கம்

              அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்;லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷPஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ ...

 • 3 September

  இஸ்லாம் அழைக்கிறது – 03

  குற்றங்களைக் குறைக்கும் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் மனித இனம் வெட்கித் தலை குனியத் தக்க குற்றச் செயல்கள் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தந்தையால் கற்பழிக்கப்படும் மகள்கள், சகோதரனால் சீரழிக்கப்படும் சிறுமிகள், சிறுவர் சிறுமியர்களுக்கு எதிரான பாலியல் துஷ;பிரயோகங்கள், பகிரங்கமாக பலர் பார்த்துக் கொண்டிருக்க நடக்கும் பலாத்காரங்கள், கொடூரமான கொலைகள், பட்டப்பகலில் படுகொலை, கொள்ளை, திருட்டு… என குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. உலக நாடுகள் அனைத்திலும் குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. குற்றவாளிகளும் மனிதர்களே! அவர்கள் திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும் ...

 • 3 September

  சத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

  ‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224) நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு பின்னர் உதவி செய்ய வேண்டிய தேவை வரும் போது சத்தியம் செய்துவிட்டேன் அதனால் தர முடியாது என்று கூறி ...

 • 3 September

  இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 6

  கிறிஸ்தவ உலகம் இயேசுவை கடவுள் என்று கூறுகின்றது. இஸ்லாம் இயேசுவை கடவுள் அல்ல கடவுளின் தூதர் என்று கூறுகின்றது. ‘இயேசுவைக் கர்த்தரே! என்று அழைத்தவர்கள் பரலோக இராஜ்ஜியத்தை அடைய முடியாது’ என்று சென்ற தொடரில் பார்த்தோம். இயேசுவைக் கடவுள் என்று கூறுவதற்கு அவர் கடவுளின் குமாரன் என்பதையும் கிறிஸ்தவ உலகம் ஆதாரமாகக் கூறுகின்றது. இயேசு கடவுளின் குமாரன் அல்லர், கடவுளுக்கு குமாரன் இல்லை, இயேசு கடவுளோ கடவுளின் பிள்ளையோ அல்லர் என இஸ்லாம் கூறுகின்றது. இயேசு இறைவனின் குழந்தையா? இயேசுவை தேவகுமாரன், கடவுளின் பிள்ளை ...

 • 3 September

  மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)

  ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும் பயன்படுத்தி வந்தனர். உன்னைத் தீண்ட மாட்டேன் ...

 • 3 September

  கண்ணியமிக்க இரவு..!

  ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகக் கருதப்படுகின்றது. இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அலை) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் இந்த ...