Tag Archives: Ismail Salafi

சுன்னத்தான தொழுகைகள் – 3 : பிக்ஹுல் இஸ்லாம்

லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷhவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் இரவில் தொழப்படும் வித்ர் தொழுகையும், ரமழான் காலங்களில் தொழப்படும் தராவீஹ் என அழைக்கப்படும் தொழுகையும் கியாமுல் லைல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும். இந்த கியாமுல் லைல் ...

Read More »

அவர்கள் மூட்டுகின்றார்கள்…. நாம் எரிகின்றோம்!

    சிரியாவில் கடந்த சில வருடங்களாகவே பெரும் மனித அவலங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. கற்பழிப்புக்கள், கூட்டுப் படுகொலைகள், சிறுவர் மற்றும் சிறுமியர் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், சித்திரவதைகள், இரசாயன ஆயுதப் பாவனை என ஈனத்தனமான கொடூரங்களை ஆஸாத்தின் இராணுவ மிருகங்கள் நிகழ்த்தி வருகின்றன. இந்தக் கொடூரங்களின் விளைவால் பாரிய உள்நாட்டுப் போர் வெடித்து சிரியா சிதறிப் போயுள்ளது. சிரியாவின் சிறுவர்கள் மீது இரசாயனம் பாவிக்கப்பட்ட போது அமெரிக்கா போன்ற பெரிய நாடுகள் கொஞ்சம் கொதித்து விட்டு அப்படியே அடங்கிப் போயின. சிரியாவின் கொடூரங்களுக்குப் பின்னால் ...

Read More »

முத்தலாக் : அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேணமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, ...

Read More »

சுன்னத்தான தொழுகைகள் – 02

சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- 626, 1160 ‘நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.’ ...

Read More »

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிள் – 7

குர்ஆன், பைபிள் இரண்டுமே இயேசு பற்றிப் பேசுகின்றன. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் இயேசுவை மதிக்கின்றனர். முஸ்லிம்கள் இயேசுவை இறைவனின் திருத்தூதர் என்று போற்றுகின்றனர். அவர் ஆண் தொடர்பின்றி அற்புதமாகப் பிறந்தவர், பிறந்ததும் தனது தாயின் தூய்மை பற்றி அற்புதமாகப் பேசியவர். இறைவனிடமிருந்து வேத வெளிப்பாட்டைப் பெற்று மக்களுக்கு நற்போதனை செய்தவர். இன்று வரை வாழ்ந்து கொண்டிருப்பவர். உலக அழிவு நெருங்கும் போது மீண்டும் பூமிக்கு வந்து நீதியான, அமைதியான ஒரு ஆட்சியை உலக மக்களுக்கு வழங்குவார் என்றெல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றனர். பைபிளும், குர்ஆனும் இயேசு பற்றிக் ...

Read More »

தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக் கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும், ஆண்களுக்கு அவர்களை விட ஒருபடி உயர்வுண்டு! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.’ (2:228) இந்த வசனம் பல ...

Read More »

முஹம்மது நபியின் முறைப்பாடு

ஒரு குற்றம் செய்து பாதிக்கப்பட்டவர் காவல் துறையினரிடம் அதனை முறைப்பாடு செய்யப் போவதாக அறிந்தால் நாம் அச்சமடைகின்றோம். பாதிக்கப்பட்டவருடன் சமாதானம் பேசி சமரசம் செய்து கொள்ள முற்படுகின்றோம். செய்த குற்றத்திற்கு ஏற்ப ஏதாவது கொடுத்தேனும் முறைப்பாடு செய்யாமல் சமாதானப்படுத்த முனைகின்றோம். முறைப்பாடு ஏன் செய்யப்படுகின்றது? யாரிடம் யாரால் செய்யப்படுகின்றது? என்பதற்கு ஏற்ப அதற்கு அழுத்தமும் இருக்கின்றது. ”எனது இரட்சகனே! நிச்சயமாக எனது சமூகம் இந்தக் குர்ஆனை வெறுக்கப்பட்டதாக எடுத்துக் கொண்டார்கள்’ என இத்தூதர் கூறுவார்.’ (25:30) இந்தக் குற்றச்சாட்டும், முறைப்பாடும் அகிலத்தாரின் அருட்கொடை அண்ணல் ...

Read More »

இலங்கை தேர்தல் உணர்த்தும் படிப்பினைகள்

அமைதியான ஒரு தேர்தலை இலங்கை வரலாறு அண்மையில் சந்தித்தது. ஆரவாரம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் மற்றும் அடாவடித்தனங்கள் இல்லாமல் பலரையும் வியக்கவைக்கும் விதத்தில் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் முடிவுகள் சிறுபான்மை சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு பெரிதும் மனநிம்மதியைக் கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுத்து வந்த பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்தது போன்ற உணர்வை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். இறுகிப் போன உள்ளங்கள் இளகி நிம்மதிப் பெருமூச்சு விட ஆரம்பித்துள்ளன. முஸ்லிம்களின் மனதை ஆட்கொண்டிருந்த அச்ச உணர்வுகள் அகல ஆரம்பித்துள்ளன. ...

Read More »

அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகமும் அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளும்

    உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ;பிர யோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது? என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும், சிறுவர்களும் துஷ;பிரயோகத்துக்குள்ளாவதை பெரும்பாலான வர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் ...

Read More »

நபித்தோழர்களின் விளக்கம்

            அல்குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாகும். இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடுகளையும் வணக்க வழிபாட்டு முறைகளையும் இஸ்;லாம் போற்றும் பண்பாடுகளையும் குர்ஆன், சுன்னாவிலிருந்தே நாம் பெற வேண்டும். குர்ஆனும் சுன்னாவுமே இஸ்லாத்தின் மூலாதாரங்கள் என்பதில் பெரும்பாலும் எல்லா முஸ்லிம்களும் ஒன்றுபடுகின்றனர். கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் போன்ற வழிகேடர்களும் இதே நிலைப்பாட்டில்தான் இருந்தனர். நவீன கால வழிகேடர்களும் இதே கருத்தைத்தான் வலியுறுத்தி வருகின்றனர். காதியாணிகள், வஹ்ததுல் வுஜூத் பேசுவோர் ஏன், ஷPஆக்கள் கூட இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். குர்ஆன், சுன்னாவை அவரவர் சிந்தனைக்கும், மனோ ...

Read More »