பலஸ்தீனப் பிரச்சினையும் இஸ்லாத்தின் தீர்வும் | Article

ட்ரம்ப் அமெரிக்காவின் அவமானச் சின்னம்! பொது இடத்தில் பெண்களுடன் ஆபாசமாகவும் அசிங்கமாகவும் நடந்து கொள்ளும் இயல்பு கொண்டவர். இஸ்ரேலும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் கொண்ட கள்ளக் காதலில் கருத்தரித்த ஈனப் பிறவி! சட்டவிரோத இந்த நாட்டின் தலைநகராக ஜெரூஸலத்தை அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார்.

இவரின் அநியாயமான, அடாவடித்தனமான சட்ட விரோத அறிவிப்பால் முஸ்லிம் உலகு கொதித்துப் போயுள்ளது. இவரின் அறிவிப்பின் மூலம் மீண்டும் பலஸ்தீனம் பற்றிய எண்ணம் மேலெழுந்துள்ளது. இது இவரின் அறிவிப்பு ஏற்படுத்திய ஒரு நல்ல மாற்றமாகும்.

இதே வேளை, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூஸலத்தை அறிவித்ததை முஸ்லிம்கள் எதிர்க்கின்றார்கள் என்பது முஸ்லிம்கள் இஸ்ரேலை அங்கீகரிக்கின்றார்கள், அதன் தலைநகராக டெல் அவிவ் இருந்துவிட்டுப் போகட்டும், ஜெரூஸலத்தை அதன் தலைநகராக்குவதை நாம் எதிர்க்கின்றோம் என்பதுதான் முஸ்லிம் உலகின் நிலை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இஸ்ரேலே சட்டவிரோதமானது. மனித உரிமைகளையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு பலஸ்தீனத்தின் பூர்வீக மக்களாகிய முஸ்லிம்களைத் துரத்திவிட்டு உருவாக்கப்பட்டதே இஸ்ரேல் ஆகும். நாம் இஸ்ரேலின் இருப்பையே மறுக்கின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பலஸ்தீனப் பிரச்சினை மட்டுமன்றி உலக அளவில் முஸ்லிம் சமூகம் சந்தித்து வரும் சவால்களை சமாளிக்கவும் பின்வரும் அடிப்படைகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

யூத-கிறிஸ்தவர்களை பொறுப்பாளர்களாக எடுத்தல்:
யூத-கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதும் அவர்களைப் பொறுப்பாளர்களாக எடுப்பதும் இந்த உம்மத்தின் அழிவுக்கு அடிப்படையாக அமையும்.

‘நம்பிக்கை கொண்டோரே! யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் நேசத்திற்குரியவர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! (உங்களுக்கு எதிராக) அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர். உங்களில் யார் அவர்களை நேசத்திற்குரியவர்களாக ஆக்கிக் கொள்கின்றானோ நிச்சயமாக அவனும் அவர்களைச் சார்ந்தவனே! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களான கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்.’ (5:51)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாத்தை எதிர்க்கும் விடயத்தில் ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாக உள்ளனர். உண்மையில் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கும் அதன் இருப்புக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கிறிஸ்தவ நாடுகளின் துணைதான் காரணமாகும்.

கிறிஸ்தவர்கள் தங்களது தூதரான இயேசுவை விபச்சாரத்தில் பிறந்தவர் எனத் தூற்றும் யூதர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்கும் விடயத்தில் கைகோர்த்துள்ளனர். இப்படியிருக்க, முஸ்லிம்கள் யூதர்களையோ கிறிஸ்தவர்களையோ தமது பொறுப்பாளர்களாக எடுப்பது இஸ்லாமிய உம்மத்தின் இழிவுக்கும் அழிவுக்கும் வழிவகுக்கும். நான் கிறிஸ்தவ நாட்டுடன் நட்பு வைத்தாலும் வைப்பேன்இஸ்லாமிய நாட்டுடன் நல்லுறவு வைக்கமாட்டேன் என்கின்ற மனநிலை எமது மன்னர்களிடமும் தலைவர்களிடமும் மாறாத வரையில் தலை நிமிர்ந்து நிற்க முடியாது.

ஒருவருக்கொருவர் துணையாக இருத்தல்:
முஸ்லிம் நாடுகளும் இஸ்லாமிய அமைப்புக்களும் தமக்குள் உள்ள கசப்புக்களைக் களைந்து கைகோர்க்க வேண்டும்.

‘எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களில் சிலர் மற்றும் சிலருக்கு உற்ற நண்பர்களாவர். (எனவே உங்களுக்கிடையிலும்) நீங்கள் இதைச் செய்யாவிட்டால் பூமியில் குழப்பமும் பெரும் சீர்குலைவும் ஏற்பட்டு விடும்.’ (8:73)

இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்க்கும் விடயத்தில் காபிர்கள் கைகோர்த்துள்ளனர். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளை மறந்து விட்டு இஸ்லாத்தை எதிர்த்தல் எனும் இலக்கில் ஒன்றுபட்டுள்ளனர். இதை நீங்கள் செய்யாவிட்டால் பித்னாவும் பூமியில் பெரும் குழப்பமும் ஏற்படும் என அல்லாஹ் எச்சரிக்கின்றான். எமக்கு என்றுள்ள பொது இலக்குகளை அடைந்து கொள்வதிலாவது நாம் ஒன்றுபட்டுச் செயற்பட முனைய வேண்டும். ஆனால், நயவஞ்சகத்தனமாக காட்டியும் கூட்டியும் கொடுக்கும் கொடிய குணத்துடன் எமது நாடுகள் செயற்படுவதால் முஸ்லிம் பூமியெங்கும் பித்னாவும் பஸாதும் நிலைத்துள்ளன. பலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், பொது இலக்கை அடைந்து கொள்வதற்காக ஒன்றுபட்டு செயற்படும் நிலையும் முஸ்லிம் நாடுகளில் ஏற்படாத வரையில் உரிய தீர்வு வராது.

நம்மை நாம் மாற்றிக் கொள்ளுதல்:
பலஸ்தீன பூமி பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் ஒரு செய்தியைக் குறிப்பிட்டுள்ளான்.

‘(தவ்ராத்) எனும் உபதேசத்திற்குப் பின்னர், ‘நிச்சயமாக பூமிக்கு நல்லவர்களான எனது அடியார்களே உரித்துடையவர்கள்’ என ஸபூர் வேதத்தில் நாம் எழுதினோம்.’ (21:105)

அல்லாஹ் ஸாலிஹான நல்லடியார்கள் அதன் வாரிசுகளாவார்கள். முஸ்லிம்கள் அதன் வாரிசாக இருந்தார்கள். முஸ்லிம்களின் நம்பிக்கை நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் அவர்களிடமிருந்து அதன் ஒரு பகுதியை அல்லாஹ் மோசமான ஒரு சமூகத்தின் கையில் கொடுத்து எம்மைச் சோதிக்கின்றான். பலஸ்தீன முஸ்லிம்கள் தம்மை அல்லாஹ்வின் ஸாலிஹான அடியார்கள் என்கின்ற நிலைக்கு மாற்றிக் கொண்டால் பலஸ்தீன பூமியை அவர்கள் அனந்தரமாக அடைவார்கள். இந்த உண்மையை உணர்ந்து எமது நம்பிக்கைகள், நடத்தைகளை மாற்றிக் கொண்டால் பலஸ்தீனப் பிரச்சினையிலும் மாற்றம் வரும்.

இறுதிக் காலத்தில் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் போர் நடக்கும். அதில் யூதர்கள் தோல்வியடைந்து ஓடி ஒழிவார்கள். மரங்களுக்கும் மலைகளுக்கும் பின்னால் அவர்கள் ஒழியும் போது, ‘ஓ முஸ்லிமே! எனக்குப் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொலை செய்துவிடு’ என மலையும் மரமும் பேசும் என நபி(ச) அவர்கள் கூறியுள்ளார்கள். மரம் ஒரு மனிதனைப் பார்த்து ‘முஸ்லிமே!’ என்று அழைக்கும் அளவுக்கு அன்று வாழும் முஸ்லிம்கள் நல்லவர்களாக இருப்பார்கள். அவர்களின் கையில்தான் பலஸ்தீன் பூரண சுதந்திரத்தை அடையும். இதை யூதர்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.

ஒரு யூதப் பெண் அரசியல்வாதியிடம் முஸ்லிம்கள் உங்களை வெற்றி கொள்வார்கள் என்று பேசிக் கொள்கின்றார்களே! அதைப் பற்றி என்ன கூறுகின்றீர்கள் எனக் கேட்ட போது, உண்மைதான். ஆனால், அது இப்போது நடக்காது. வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது போல் சுபஹ் தொழுகையில் கலந்து கொள்ளும் காலத்தில்தான் அது நடக்கும். எனவே, அது பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்ற கருத்தில் பதிலளித்துள்ளார்.

முஸ்லிம்களிடம் ஏற்படும் இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற வெறியும் வேட்கையும்தான் பலஸ்தீனுக்கான வெற்றியாக இருக்கும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர். இதை நாம் சரியாக உணர்ந்து எம்மை முழுமையாக மாற்றிக் கொள்ள முனைய வேண்டும்.

நல்ல தலைமை:
புனித பூமிகளை அல்லாஹ் நல்ல தலைமையின் கையில்தான் ஒப்படைப்பான். மூஸா நபிக்குப் பின் இஸ்ரவேல் சமூகத்திற்கு ஒரு நபியின் தலைமையின் கீழ் அல்லாஹ் பலஸ்தீனை அளித்தான். மக்காவை நபியவர்களின் தலைமையிலான போராட்டத்தில் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு அளித்தான். உமர்(ர) அவர்களின் தலைமையின் கீழ் பலஸ்தீனை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வழங்கினான். மீண்டும் ஸலாஹுத்தீன் அய்யூபியின் தலைமையின் கீழ் முஸ்லிம்களுக்கு பலஸ்தீனை அல்லாஹ் வழங்கினான். மீண்டும் பலஸ்தீன் முஸ்லிம்களின் கைவசம் வர வேண்டும் என்றால் முஸ்லிம்களிடம் ஒரு நல்ல தலைமை ஏற்பட வேண்டும். இல்லையென்றால் இமாம் மஹ்தியின் வருகை வரையும் காத்துத்தான் ஆக வேண்டும்.

இறுதி முடிவு இஸ்லாத்திற்கே!:
பலஸ்தீனப் பிரச்சினையின் முடிவு என்ன என்பது தெளிவானதுதான். யூதர்கள் தோல்வியடைவார்கள், விரட்டி விரட்டி வேட்டையாடப்படுவார்கள். அதுதான் இந்த ஆட்டத்தின் முடிவு! ஆனால், அது எப்போது? எப்படி? என்பதை அல்லாஹ்தான் அறிவான். அந்த வெற்றியை அடைவதற்கு முன்னர் ஏற்படும் மோதல்கள், இழப்புக்கள் எம்மிடம் எந்தத் தளர்வையும் ஏற்படுத்திவிடக் கூடாது. முஸ்லிமின் போராட்ட வாழ்வில் தோல்வி என்பதே இல்லை. மறுமை வெற்றி என்பதே எமது முதல் தர இலக்கு. இந்த இழப்புக்கள் எல்லாம் மறுமைக்கான முதலீடுகளாகும். எனவே, எத்தனை இழப்புக்கள் ஏற்பட்டாலும் தளராத ஈமானுடன் அவற்றைத் தாங்க வேண்டும். இது எம்மிடம் எள்ளளவும் சோர்வை ஏற்படுத்திவிடக் கூடாது.

ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் சாதகமாக ஆக்கவும் அநியாயத்திற்குத் துணை போகவும் அமெரிக்கா, இஸ்ரேலின் அழிவுக்கும் இழிவுக்குமாகவும் அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்பது முஸ்லிம்களாகிய நம் அனைவரினதும் கட்டாயக் கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.