முஸ்லிம் உலகு

April, 2018

  • 4 April

    சிரியா – ஒரு போராட்ட பூமி.

    சிரியாவில் பஷ்ஷாரின் ஷியா படையும், ரஷ்யாவின் நாஸ்தீகப் படையும், அமெரிக்காவின் கூலிப் படைகளும் நிகழ்த்தி வரும் கொடூர போர்க்களத்தில் அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். போர்க் களத்தில் சிறுவர்களையும், பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்துள்ளது இஸ்லாம். ஆனால், இந்தப் போரில் கொத்துக் கொத்தாக குண்டு மழை பொழியப்பட்டு சிறுவர்கள் அப்பாவிகள் கொன்று குவிக்கப்படுகின்றனர். உலக ஊடகங்கள் இந்தக் கொடிய போரை முஸ்லிம்கள், ஷியா – சுன்னா பிரிவுகளாகப் பிரிந்து மோதிக் கொள்வதாக சித்தரிக்கின்றன. ஆனால் உண்மை அது மட்டுமல்ல. பஹ்ரைன், குவைத், சவூதி ...

  • 4 April

    சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்.

    இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் குற்றம் செய்தால் அந்த இனத்தையோ மதத்தையோ தண்டிக்கவும் முடியாது, குற்றம் சுமத்தவும் முடியாது. ஒரு ...

March, 2018

February, 2018

  • 10 February

    பெப்ரவரி 14 – காதலர் தினம் | ஆசிரியர் பக்கம் | கட்டுரை

    சர்வதேச தினங்களில் அதிகமான மக்களால் கொண்டாடப்படும் தினமாக காதலர் தினம் அமைந்துள்ளது. மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச தினங்கள் தீர்மானிக்கப்பட்டன. ‘பெற்றோர் தினம்’, பெற்றோரின் பெருமையை உணர்த்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், சில பெற்றோர்கள் அந்தத் தினத்தில் மட்டும் பெருமைப்படுத்தப்படுகின்றனர். ஆசிரியர் தினம் ஆசிரியர்களை கௌரவிக்க உருவாக்கப்பட்டது. பெரும்பாலும் மாணவர்களுக்கு மத்தியில் ஆசிரிய ஆசிரியைகள் தமது ஆளுமையையும் அந்தஸ்தையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும் தினமாக அத்தினம் மாற்றப்பட்டு வருகின்றது. எப்படியிருந்தாலும் பெற்றோரை மதித்தல், ஆசிரியரை கண்ணிப்படுத்துதல், போதை ஒழிப்பு போன்ற அம்சங்கள் இஸ்லாத்தில் உள்ள ...

January, 2018

  • 26 January

    உலமாக்களும்… அவர்களின் பொறுப்புக்களும்..

    இல்மைச் சுமந்த ஆலிம்கள் சமூகத்தின் கலங்கரை விளக்காகவும் அசத்திய இருள்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு சத்திய ஜோதியாகவும் திகழ்பவர்கள் என்றால் மிகையன்று! கற்றவர்களை அல்லாஹ் பல கோணங்களில் மகிமைப்படுத்தியுள்ளான். “நம்பிக்கை கொண்டோரே! ‘சபைகளில் இடமளியுங்கள்’ என உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் இடமளியுங்கள். அல்லாஹ்வும் உங்களுக்கு இடமளிப்பான். நீங்கள், ‘எழுந்து விடுங்கள்’ என்று கூறப்பட்டால் உடனே எழுந்திருங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டு, அறிவும் வழங்கப் பட்டுள்ளார்களோ அவர்களுக்கு அல்லாஹ் அந்தஸ்துக்களை உயர்த்துவான். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்.” -58:11 இந்த வசனத்தில் கல்வி, ...

December, 2017

November, 2017

  • 21 November

    சமூக உருவாக்கத்தில் கணவன்-மனைவியின் பங்கு

    சமூகம் என்பது மக்களைத்தான் குறிக்கும். ஆனால், சமூக உருவாக்கம் என்பது வெறும் மக்கள் தொகையைப் பெருக்குவதைக் குறிப்பதாக அமையாது நல்ல மக்களின் உருவாக்கத்தைத்தான் அது குறிக்கும். நல்ல தனி மனிதர்களை உருவாக்குவதன் மூலம்தான் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். நல்ல தனி மனிதர்களை நல்ல குடும்பங்கள்தான் உருவாக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களாக இருப்பவர்கள் கணவன்-மனைவியரே! கணவன்-மனைவியரினூடாகத்தான் நல்ல குடும்பங்கள் உருவாக்கப்படும். நல்ல பல குடும்பங்கள் உருவாகும் போது நல்ல கிராமமும் நல்ல சமூகமும் உருவாக முடியும். எனவே, எழுச்சிமிக்க சமூக மாற்றத்தின் அத்திவாரங்களாக கணவன்-மனைவியர்கள்; ...

  • 6 November

    முஹர்ரம் அல்லாஹ்வின் மாதம் | கட்டுரை.

    ஹிஜ்ரி ஆண்டுக் கணிப்பின் முதல் மாதமாக முஹர்ரம் திகழ்கின்றது. இம்மாதத்தை நபி(ச) அவர்கள் ‘ஷஹ்ருல்லாஹ்’ அல்லாஹ்வின் மாதம் என்று சிலாகித்துக் கூறியுள்ளார்கள். பொதுவாக எல்லா மாதங்களும் அல்லாஹ்வின் மாதம்தான் என்றிருப்பினும் முஹர்ரம் மட்டும் ஏன் அல்லாஹ்வின் மாதம் என்று அழைக்கப்படுகின்றது என்ற ஐயம் எழலாம். எல்லாமே அல்லாஹ்வுக்குரியது என்றிருந்தாலும் ஏதாவது ஒன்று அல்லாஹ்வுடன் இணைத்துக் கூறப்பட்டால் அது அப்பொருளின் சிறப்பைக் குறிப்பதாகச் கொள்ளப்படும். அல்லாஹ் ஸாலிஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் ஒட்டகத்தை அல்குர்ஆன் ‘நாகதுல்லாஹ்’ – அல்லாஹ்வின் ஒட்டகம் என்று குறிப்பிடுகின்றது. எல்லா ஒட்டகங்களும் அல்லாஹ்வுடையதுதான். என்றாலும் ...

  • 2 November

    ரேஹிங்கியா ஒரு வரலாற்றுத் துரோகம்!!

    மியன்மார், அநியாயத்தின் அக்கிரமத்தின் புதிய அகராதி! ‘ஆங்சான் சூகி’ – ‘அசின் விராது’ கொடூரக் கொலைக் களத்தின் கோர முகம்! ரோஹிங்கிய முஸ்லிம்கள் நவீன யுகத்தின் கொத்தடிமைகள்! ஒரு வரலாற்றுத் துரோகத்தின் மறுவடிவம்! ஆம், வரலாறு நெடுடிகிலும் அராக்கான் பகுதி முஸ்லிம்கள் பௌத்த தீவிரவாதத்தால் கொடூரமான கொலைகள், கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலை, சிறுவர் சிறுமியர் சித்திரவதை செய்து சிதைக்கப்படுதல் என வரலாறு காணாத வன்கொடுமைகளைச் சந்தித்து வருகின்றனர். ரோஹிங்கிய முஸ்லிம்கள் மியன்மாரைச் சேர்ந்தவர்கள் அல்லர், வந்தேறிகள் என்று கூறித்தான் இந்த அநியாயங்களையும் அக்கிரமங்களையும், ...