சட்டங்கள்

October, 2015

 • 12 October

  முஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்

       மனிதனின் ஆன்மீக உணர்வுகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதற்காக இஸ்லாம் சில காலங்களை ஏற்படுத்தியுள்ளது. ரமழான் மாதம், துல்ஹஜ் மாதம் போன்றவற்றை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இத்தகைய மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். புனித மாதம்: இந்த மாதம் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்களில் ஒன்றாகும். ‘அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் ...

 • 12 October

  சுன்னத்தான தொழுகைகள் – 3 : பிக்ஹுல் இஸ்லாம்

  லைலத்துல் கத்ர் கடந்த இதழில் கடமையான தொழுகைகளுக்கு முன், பின் உள்ள சுன்னத்தான தொழுகைகள் குறித்துப் பார்த்தோம். இந்த இதழில் கியாமுல் லைல் குறித்து நோக்கவிருக்கின்றோம். ‘கியாமுல் லைல்’ – இரவுத் தொழுகை- என்பது இஷhவின் பின் சுன்னத்து முதல் பஜ்ர் வரையுள்ள நேரத்தில் தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். நடு இரவில் தொழப்படும் தஹஜ்ஜத் தொழுகையும் இரவில் தொழப்படும் வித்ர் தொழுகையும், ரமழான் காலங்களில் தொழப்படும் தராவீஹ் என அழைக்கப்படும் தொழுகையும் கியாமுல் லைல் என்ற பொதுப் பெயரால் அழைக்கப்படும். இந்த கியாமுல் லைல் ...

 • 12 October

  முத்தலாக் : அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

  ‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேணமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, ...

September, 2015

 • 22 September

  சுன்னத்தான தொழுகைகள் – 02

  சுன்னத்தான தொழுகைகள் தொடரில் சுபஹுடைய முன் சுன்னத்து தொழுவது குறித்து நாம் பார்த்து வருகின்றோம். தொழுத பின்னர் வலப்பக்கமாக சிறிது சாய்ந்து படுத்துக் கொள்ளுதல்: ‘பஜ்ருடைய அதானுக்கும் தொழுகைக்கும் இடையே நபி(ச) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இகாமத் சொல்வதற்காக முஅத்தின் அவர்களிடம் வரும் வரை வலப்புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி) ஆதாரம்: புஹாரி- 626, 1160 ‘நபி(ச) அவர்கள் சுபஹுடைய (சுன்னத்து) இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள். நான் விழித்திருந்தால் என்னோடு கதைத்துக் கொண்டிருப்பார்கள். இல்லையென்றால் (வலப்புறம்) சாய்ந்து படுத்துக் கொள்வார்கள்.’ ...

 • 22 September

  தலாக், இத்தா காரணங்களும் நியாயங்களும்

  ‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் தங்களுக்காக எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்களது கருவறைகளில் அல்லாஹ் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. அவர்கள் இதற்குள் இணக்கப்பாட்டை விரும்பினால் அவர்களை மீண்டும் மீட்டிக் கொள்ள அவர்களின் கணவன்மார்களே முழு உரிமை யுடையவர்களாவர். (மனைவியர்களாகிய) இவர்கள் மீது முறைப்படி கடமைகள் இருப்பது போலவே இவர்களுக் கான உரிமைகளும் இருக்கின்றன. ஆயினும், ஆண்களுக்கு அவர்களை விட ஒருபடி உயர்வுண்டு! அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.’ (2:228) இந்த வசனம் பல ...

July, 2015

 • 5 July

  நோன்பும் நிய்யத்தும்

  நோன்புக்கு மட்டுமன்றி எல்லா அமல்களுக்கும் நிய்யத் முக்கியமானதாகும். நிய்யத் என்றால் குறித்த அமலை அல்லாஹ் வுக்காக செய்கின்றேன் என்று உள்ளத்தில் எண்ணுவதாகும். நிய்யத் என்பது உள்ளத்துடன் சம்பந்தப்பட்ட அமலாகும். அதற்கும் வாயால் மொழிவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நோன்புக்கான நிய்யத்தைப் பொருத்த வரையில் பர்ழான நோன்பு நோற்கும் ஒருவர் சுபஹுடைய நேரத்திற்கு முன்னரே நோன்பு நோற்பதாக உறுதி கொள்ள வேண்டும். ‘யார் பஜ்ருக்கு முன்னர் நோன்பு நோற்பதாக உறுதி கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பே இல்லை’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள். (தாரமி: 1845, அபூதாவூத்: ...

June, 2015

 • 7 June

  பாவங்களுக்குப் பரிகாரமாகும் நோன்பு

  இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பும் ஒன்றாகும். நோன்பு பாவங்களிலிருந்தும், நரக வேதனையிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகத் திகழ்கின்றது. நாம் நோற்கும் நோன்பின் மூலம் எமது பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாவங்களை அழிக்கும் விஷேட அம்சம் நோன்பில் உள்ளடங்கியிருப்ப தால்தான் பல்வேறுபட்ட குற்றங்களுக்குப் பரிகாரமாக நோன்பு பரிந்துரைக்கப்படுகின்றது. இந்த வகையில் நோன்பைக் குற்றப் பரிகாரமாகப் பரிந்துரைக்கும் சில குர்ஆனின் சட்டங்களை உங்கள் முன் சமர்ப்பிக்கலாம் என நினைக்கின்றேன். ‘அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவு செய்யுங்கள். (அதனை நிறைவு செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்பட்டால் பலிப்பிராணியில் சாத்திய மானதுதான் (அதற்குப்) ...