இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பீ.ஜே. என சுருக்கமாக அழைக்கப்படுபவர். நல்ல நாவன்மையும் வாதத் திறமையும், எழுத்தாற்றலும் மிக்க இவர் தனது திறமைகளை இஸ்லாமிய அகீதாவுக்கு முற்றிலும் முரணாகப் பயன்படுத்தி வருகின்றார். இவரது போதனைகளும் அதை அவர் முன்வைக்கும் விதமும் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் மாற்று மதத்தவர்களுக்கு மத்தியிலும் குழப்பத்தையும் மன முரண்பாடுகளையும் ஏற்படுத்தி வருகின்றது. ஏனைய இஸ்லாமிய அமைப்புக்களுடன் இணங்கிப் போகாத இவரது இயல்பு இவரது இயக்கத்தவர்களிடமும் குடிகொண்டுள்ளது. இதனால் இவரது இயக்க செயற்பாடுகளால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவும் குழப்பங்களும் ஏற்பட்டு வருவதுடன் இவர்களது ...
கட்டுரைகள்
December, 2018
-
13 December
குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 02
இஸ்லாமானது கனவர் மனைவி கடமைகளையும் உரிமைளையும் போதிய வழிகளையும் முள்வைத்துள்ளது. அவற்றில் சில, மனைவி நல்ல விடயங்களில் கவனுக்காகக் கட்டுப்படல்: “நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு முறை பெண்கள் ஒன்று சேர்ந்து அவர்களில் ஒருவரை நபியவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்பெண் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! நான் பெண்களின் சார்பாக உங்களிடம் வந்துள்ளேன். ஜிஹாதானது ஆண்கள் மீது அலலாஹ் கடமையாக்கியுள்ளான். அவர்கள் அதில் காயப்பட்டால் கூலி கொடுக்கப்படுவார்கள் அதில் அவர்கள் கொல்லப்பட்டால் (ஷஹிதாக்கப்பட்டால்) அல்லாஹற்விடம் உயிரோடிருப்பர் உணவும் அளிக்கப்படுவார்கள். நாங்கள் அவர்களுக்காக உழைக்கின்றோம். நாம் அந்த ...
-
10 December
த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! | Anan Asmath Bin Ismail.
த மெசேஜ் ஓர் விமர்சன நோக்கு! ஆக்கம்: Anan Asmath Bin Ismail. (மகன்) நபி(ச) அவர்களின் தூதுத்துவ வரலாறு 1976 ஆம் ஆண்டு ஒரு திரைப்படமாக ‘The Message’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இதை சிரியா நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ‘முஸ்தபா அக்காப்’ என்பவர் இயக்கியிருந்தார். இப்பட உருவாக்கத்திற்கு எகிப்து, மொரோக்கோ போன்ற நாடுகள் அனுமதியும், குவைட், லிபியா ஆகிய நாடுகள் பொருளாதார ரீதியாக உதவுவதாகவும் வாக்களித்திருந்தன. இருந்தாலும் மக்காவிலுள்ள ‘ராபிதது ஆலமுல் இஸ்லாம்’ என்ற அமைப்பு இதற்கான அனுமதியை ...
-
6 December
குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01
குழந்தையின் நடத்தை பிறழ்வுகள்; காரணங்களும் தீர்வுகளும்.- 01 ஆக்கம்: எம்.ஐ. ஹுர்ரா பின்து இஸ்மாயில் ஸலபி (மகளின் ஆக்கம்) பீடிகை குழப்பங்கள் நிறைந்த இந்த சமூக சூழலில் குழந்தைகளை நடத்தை பிறழ்வுக்கு இட்டுச் செல்லும் காரணங்கள் அதிகரித்துள்ளன. சகல திக்குகளில் இருந்தும் அவர்கள் தீமையின் பால் ஈர்க்கப்படுகின்றனர். குழந்தைகளை வழிநடத்துபவர்கள் தமது பொறுப்பையும் அமானிதத்தையும் புரிந்து குழந்தைகளின் நெறிபிறழ்வுக்கான காரணங்களையும் அவற்றைக் களையும் வழிமுறைகளையும் அவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் விதத்தையும் தெளிந்த சிந்தனையுடன் அறிந்திருக்காவிட்டால் குழந்தைகள் சமூகத்தில் குற்றவாளிகளாகவும் குழப்பக்காரர்களாகவும் அழிந்து போகும் அடுத்த ...
-
5 December
அன்பான இறைவன் தண்டிக்கலாமா? | இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2
இஸ்லாம் விமர்சனங்களும் விளக்கங்களும் – 2 அன்பான இறைவன் தண்டிக்கலாமா? முஸ்லிம்கள் அல்லாஹ்வை அளவற்ற அருளாளன்| நிகரற்ற அன்புடையோன் என்று போற்றுகின்றனர். ஆனால், குற்றங்களுக்கு இஸ்லாம் விதிக்கும் தண்டனைகளைப் பார்த்தால் அந்த சட்டங்களைச் சொல்பவன் அன்பாளனாக இருக்க முடியாது. அத்துடன் நரகம் பற்றி குர்ஆன், ஹதீஸ் குறிப்பிடுகின்ற செய்திகளையும் பார்த்தால் அன்புள்ள இறைவன் எப்படி இப்படியெல்லாம் தண்டிப்பவனாக இருக்க முடியும் என்ற கேள்வியே எழுகின்றது என சிலர் விமர்சனம் செய்கின்றனர். இந்த விமர்சனங்களைச் செய்பவர்கள் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். அத்துடன் மறுமையில் இறைவன் ...
-
3 December
ஜும்ஆவும் அதானும் | பிக்ஹுல் இஸ்லாம் (39) | Article.
பிக்ஹுல் இஸ்லாம் (39) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆவும் அதானும் ஜும்ஆத் தொழுகைக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம்தான் பரவலாக இருக்கின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர், உஸ்மான்(ர) அவர்களது ஆட்சியின் ஆரம்பத்திலும் ஜும்ஆவுக்கு இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. மக்கள் தொகை பெருகிய போது உஸ்மான்(ர) அவர்கள் ஜும்ஆவின் நேரம் நெருங்கிவிட்டதை நினைவூட்டுவதற்காக சந்தையில் ஜும்ஆ நேரத்திற்கு முன்னர் ஒரு அதான் கூறும் ஏற்பாட்டைச் செய்தார்கள். இந்த அடிப்படையில்தான் ஜும்ஆவுக்கு இரண்டு அதான்கள் கூறும் வழக்கம் ...
November, 2018
-
27 November
ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல் (பிக்ஹுல் இஸ்லாம் (38)
பிக்ஹுல் இஸ்லாம் (38) ஜும்ஆத் தொழுகை ஜும்ஆத் தொழுகைக்குத் தயாராகுதல்: ஜும்ஆத் தொழுகைக்கு குளித்து வாசனைகள் பூசி நல்ல ஆடை அணிந்து தயாராகுவது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம். 04. கெட்ட வாடைகளைத் தவிர்த்தல்: பள்ளிக்குச் செல்லும் போது நல்ல வாசனையுடன் செல்வது சிறந்தது. பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் அருவருப்பான வாசனைகளுடன் செல்வது வெறுக்கத்தக்கதாகும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றைச் சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் செல்வது, சிகரட், பீடி, சுருட்டு போன்றவற்றைப் பாவித்துவிட்டுச் செல்லுதல், வியர்வை வாசம் வீசும் நிலையில் செல்வது என்பவற்றைத் தவிர்க்க வேண்டும். ...
-
24 November
அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்.
அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا ‘நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.’ (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. ‘அநாதைகளின் சொத்துக்களை உண்பது’ என்ற வார்த்தைதான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, வேறு ...
-
23 November
இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு வலி (பொறுப்பாளர்) | Article 📖
பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய ‘ஷாத்’ – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சீர்திருத்தம் என்றால் பிழையை சரியாக்க வேண்டும். பாதிப்புள்ள சட்டத்தை மாற்றி ...
-
22 November
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும் இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி மனப்பாங்கை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, இந்த ...
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்