கட்டுரைகள்

October, 2014

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 8)

    இஸ்லாம் நீதி நெறிகளைப் போற்றும் மார்க்கமாகும். அநியாயத்தை இஸ்லாம் அணுவளவும் ஆதரிக்கவோ, அனுமதிக்கவோ இல்லை. இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொலை செய்ய முயற்சி செய்ததால் யூதர்கள் மீது முஸ்லிம்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டது. இந்த வெறுப்புணர்வு கூட அநியாயத்திற்குக் காரணமாகிவிடக் கூடாது எனப் போதித்த மார்க்கம் இஸ்லாமாகும். “நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்காக நீதியை நிலைநிறுத்துபவர்களாகவும் (அதற்கு) சாட்சியாளர்களாகவும் இருங்கள். ஒரு கூட்டத்தின் மீதுள்ள வெறுப்பு, நீங்கள் நீதி செலுத்தாதிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீங்கள் நீதி செலுத்துங்கள். அதுவே பயபக்திற்கு மிக நெருக்கமானதாகும். ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 9)

    பெண்ணே! பெண்ணே! அநியாயம் வேண்டாம் கண்ணே! பெண்ணின் அன்பு, பாசம் காரணமாகவும் அவள் அநியாயக்காரியாக மாறும் நிலை ஏற்படுகின்றது. தன் பிள்ளை மீது கொள்ளும் பாசத்தின் காரணமாக அடுத்த பிள்ளைகளுக்கு அநியாயம் செய்கின்றாள். ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீதி, நியாயமாகப் பேச வேண்டும் என்பதை மறந்து தனது பிள்ளையின் தவறை மறைத்துப் பேசுகின்றாள். அடுத்த பிள்ளைகளின் சின்னத் தவறையும் பூதாகரமாக்கிக் காட்ட முயற்சிக்கின்றாள். கணவன் மீதுள்ள பாசத்தால் கூட பெண் இப்படி நடந்து கொள்வதுண்டு. பக்கச்சார்பு என்பது பெண்ணின் பிறவிக் குணம் போன்றே ஆகிவிட்டது. ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 7)

    ஒழுங்கீனம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் பண்பாடோ, நாகரீகமோ இல்லாமல் நடந்து கொள்வதைக் காணலாம். இவர்களின் இத்தகைய பண்பாடற்ற நாகரீக மற்ற இயல்புகளும், நடத்தைகளும் அடுத்தவர்களுக்கு பெருத்த அசௌகரியத்தை அளித்து வருகின்றன. எனினும் இத்தகைய பெண்கள் இவ் இழி குணங்களின் பாதிப்பை உணர்வதில்லை.இவர்களின் இங்கிதமற்ற நடத்தைகளால் அடுத்த சமூகம் முஸ்லிம் சமூகத்தையே தரக்குறைவாக எடை போடும் நிலையும் ஏற்படுவதுண்டு. சில பெண்கள் பயணத்தின் போது பக்கத்திலிருக்கும் பெண்களுடன் பேசிக் கொண்டு வருவர். அது அந்த பஸ்ஸில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும். குடும்பப் பிரச்சனை, பக்கத்து ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 6)

    தப்பெண்ணம் வேண்டாம் கண்ணே! சிலருக்கு அடுத்தவரைப் பற்றி எப்போதும் கீழ்த்தரமான எண்ணம் தான் இருக்கும். அடுத்தவர் எதை ஏன்இ என்ன நியாயத்திற்காகச் செய்கின்றனர் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கும். சிலர் பொறாமை காரணத்திற்காகவும் உளவு மனபப்பான்மையாலும் இந்த நிலைக்கு உள்ளாகின்றனர். பெண்களில் பலருக்கு இந்த நோய் இருக்கின்றது. ஒருவர் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இவருக்கு அருகில் செல்ல வேண்டி ஏற்பட்டால் இவர்களின் நடையின் வேகம் குறையும் தேவையில்லாமல் அந்த இடத்தில் ஏதேனும் ஒரு வேலையை ஆரம்பிப்பர். ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 5)

    போலிப் புகழாரம் வேண்டாம் கண்ணே! சில பெண்கள் போலிப் புகழ் பாடுவதில் வல்லவர்களாகத் திகழ்வர். தம்மைப் பற்றி எப்போதும் பீற்றித் திரிவர். இவர்களை அடுத்தவர்கள் மிக இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். அவர்கள் பேசும் தொணி, ஸ்டைல், சப்ஜக்ட் அனைத்துமே அவர்களது புகழ் போதையைப் படம்பிடித்துக் காட்டிவிடும். இவர்கள் பெருமை பேசிவிட்டு நகர்ந்ததும் அடுத்த பெண்கள் இவளின் பேச்சைச் சொல்லிச் சொல்லியே சிரிப்பர். தாம் தம்மைச் சூழவுள்ள பெண்களால் இழிவாக நோக்கப்படுவதை உணராமலே இவர்கள் பீற்றித் திரிவர். இத்தகைய இயல்பைக் கொண்ட பெண்கள் மிக விரைவாகவே ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 4)

    பதட்டம் வேண்டாம்! கண்ணே! சின்ன சிக்கல் ஏற்பட்டாலும் அதிகம் அலட்டிக் கொள்பவர்களாகவும், பதட்டம் கொள்பவர்களாகவும் பல பெண்கள் காணப்படுகின்றனர். பதட்டம் சில பெண்களுடன் கூடப்பிறந்த குணமாகக் குடிகொண்டிருக்கும். வாழ்வில் இறக்கங்கள் ஏற்பட்டாலோ இழப்புக்களைச் சந்திக்க நேரிட்டாலோ வாழ்வே சூனியமாகிவிட்டது போன்று நடந்து கொள்வர், ஒப்பாரி வைப்பர், கண்ணத்திலும் மார்பிலும் அடித்துக் கொள்வர், படபட எனப் பொரிந்து தள்ளுவர். உலகில் எவருக்கும் ஏற்படாத இழப்பு தனக்கு ஏற்பட்டது போன்று நடந்து கொள்வர். சில பெண்கள் அல்லாஹ்வையே குறைகூறுவர். அல்லாஹ்வுக்கு கண் இல்லாயா? என்று கேட்பர். சோதிக்க ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 2)

    வீண் விரயம் வேண்டாம்! கண்ணே! பெண் குடும்பத் தலைவி என்றும், இல்லத்தரசி என்றும் அழைக்கப்படுகின்றாள். வீட்டுக்கு அவள்தான் அரசியாம்! குடும்பத்துக்கு அவள்தான் தலைவியாம்! இல்லத்துக்கு அரசியாக இருப்பவள் பொறுப்பில்லாமல் செலவு செய்து கஜானாவைக் காலி பண்ணுபவளாக இருந்தால் நிலைமை என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்! குடும்பம் நடு வீதிக்கு வந்து விடுல்லவா! சில பெண்களின் கையில் காசு கிடைத்து விட்டால் அவர்களுக்குத் தலை-கால் விளங்காமல் போய் விடுகின்றது. பக்கத்து வீட்டு பாத்திமாவுக்கும், அடுத்த வீட்டு ஆயிஷாவுக்கும் கலர்ஸ் காட்டுவதற்காகப் பணத்தை நீர் போல் செலவு ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 3)

    கஞ்சத்தனம் வேண்டாம்! கண்ணே! செல்வத்தின் சிறப்பை அறியாமல் சிலர் வீண்விரயம் செய்கின்றனர். காசை நீராகக் கரைக்கின்றனர். ஈற்றில் இருந்ததையெல்லாம் இழந்து வெம்புகின்றனர். இதற்கு நேர்மாற்றமாக மற்றும் சிலர் கஞ்சத்தனம் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணத்தைச் சேர்த்து வைத்து எண்ணி எண்ணிப் பார்ப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம் அவசியத் தேவைக்குக் கூட செலவழிக்க மாட்டார்கள். இவர்களில் பலரின் நடவடிக்கை மிகவும் வித்தியாசமானது. சிலர் உண்ணவும் பருகாவும் கூட பஞ்சம் பாடுவர். மாலை நேரமானதும் ஏதாவது ஒரு வீட்டிற்குச் சென்று கதை கொடுப்பர். தேநீர் குடித்து முடிந்த ...

  • 31 October

    பெண்ணே பெண்ணே! – (தொடர் 1)

    கண்ணே! கண்ணே! பெண்கள் சமூகத்தின் கண்கள் என்பார்கள். பெண்கள் ஊடாகத்தான் சமூகம் பார்க்கப்படுகின்றது! பெண்கள் மூலம் தான் சமூகம் உருவாக்கப்படுகின்றது! சமூகம் எனும் சந்ததிகள் பெண்களால் தான் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். வார்க்கப்படுகின்றனர். இந்த வகையில் ஒரு பெண்ணில் ஏற்படும் மாற்றம் ஒரு குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.  ஒரு குடும்பத்தில் ஏற்படுகின்ற மாற்றம் ஒரு சமூக மாற்றமாக மலர்ந்து விரிகின்றது! எனவே பெண்களிடம் ஏற்படுகின்ற மாற்றம் ஆண்களிடம் ஏற்படுகின்ற மாற்றத்தை விட வரவேற்கப்பட வேண்டியதாகும். இந்த அடிப்படையில் இந்தக் கட்டுரை பெண்களைப் பார்த்துப் பேசுகின்றது. நான் செல்லப் ...

  • 31 October

    விளக்கை நோக்கி வரும் ‘விட்டில் பூச்சிகள்’ போல

    எனக்கும் உங்களுக்குமுள்ள உதாரணம் ஒரு மனிதனைப் போன்றதாகும். அவர் தீ மூட்டினால் அவரைச் சூழ அதிலிருந்து ஒளி வீசியபோது விட்டில் பூச்சிகளும் தீயில் விழும். இதர பூச்சிகளும் அதில் விழலாயின. அந்த மனிதரோ அவற்றைத் தீயில் விழாமல் தடுத்துக் கொண்டிருந்தார். எனினும், அவை அவரையும் மீறி நெருப்பில் விழுகின்றன. ‘இதனைப் போன்று (பாவங்களைப் புரிந்து) நரக நெருப்பில் நீங்கள் விழாமல் தடுக்க உங்கள் இடுப்புக்களைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டிருக்கிறேன். நரகைவிட்டும் வாருங்ககள்! நரகைவிட்டும் வாருங்கள்! எனக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ என்னையும் ...