Category: அரசியல்
-

மத்ரஸாக் கல்வி! தீவிரவாதத்தைப் போதிக்கின்றதா? | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.
அரபு மத்ரஸாக்கள் பற்றிய சர்ச்சைகளும், சந்தேகங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றாண்டுகளைத் தாண்டி இயங்கிவரும் அரபுக் கல்லூரிகள் கூட அடிப்படைவாதத்தையும், தீவிர வாதத்தையும் போதிக்கும் தளங்களாக சந்தேகக் கண் கொண்டு நோக்கப்படும் துர்ப்பாக்கிய நிலை உருவாக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை அரபு மத்ரஸாக்களில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து காலத்தின் தேவைக்கு ஏற்ப தகுதியும், திறமையும் வாய்ந்த உலமாக்களை உருவாக்கத்தக்க மாற்றங்களையும் சீர்திருத்தங் களையும் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மத்ரஸா – அறிமுகம்: “தரஸ” என்றால் கற்றான், படித்தான்…
-

எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவானேன்? | Article | Sheikh Ismail Salafi | Unmai Udayam | Oct 2019.
ஏப்ரல் 21 இல் நடைபெற்ற மிருகத்தனமாக தாக்குதல் சம்பவத்துடன் நேரடியாக முஸ்லிம்களில் சிலர் சம்பந்தப்பட்டதனால் இலங்கையில் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பான சிந்தனை உருவானது. முஸ்லிம்கள் வெறுப்புடன் நோக்கப்பட்டனர். இனவாத, மதவாத சக்திகளும் இனவாத ஊடகங்களும் இதைச் சாட்டாகப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்தின் மீது இலங்கை மக்களுக்கு வெறுப்பையும் வெறியையும் ஊட்டும் விதத்தில் தகவல்களை வெளியிட்டு வந்தன. உண்மையில் இது தொடர்பில் நின்று நிதானமாகச் சிந்தித்தால் இந்த வெறுப்பு முஸ்லிம் சமூகத்தின் மீது ஏற்பட்டிருக்காது! நாட்டை ஆளும் சக்தி…
-

சிலைகளை உடைக்கலாமா? | Ismail Salafi | Sri Lanka | Current Issue | Article | Statue|Islam | Unmai Udayam.
—
by
இஸ்லாம் சிலை வணக்கத்தை மிகவும் வன்மையாகக் கண்டிக்கும் மார்க்கமாகும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும், எதையும் வழிப்படக் கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படையாகும். இஸ்லாம் சிலை வணக்கத்தைக் கண்டிக்கின்றது என்பதனால் பிற சமூக மக்கள் வழிபடும் சிலைகளை உடைக்கலாமா என்றால் கூடாது என்பது இஸ்லாத்தின் பதிலாக இருக்கும். நபி(ச) அவர்கள் மக்காவில் 13 வருடங்கள் சிலை வணக்கத்திற்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தார்கள். அதனால் நபி(ச) அவர்களும் முஸ்லிம்களும் பல்வேறுபட்ட இழப்புக்களை சந்தித்தார்கள், கொடுமைகளுக்கு உள்ளானார்கள். சிலை…
-

நடு நிலை சமுதாயம்|Article | Unmai Udayam | Ismail Salafi | Muslims.
இஸ்லாம் நடுநிலையான மார்க்கமாகும். அதன் போதனைகள் தீவிரவாதத்தை எதிர்க்கின்றன. தீவிரவாதம் எந்தக் கோணத்தில் வந்தாலும் ஆபத்தையே ஏற்படுத்தும் என்பது இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும். இதனால்தான், தீவிரவாதிகள் அழிந்து போவார்கள் என நபி(ச) அவர்கள் எச்சரிக்கையும் செய்துள்ளார்கள். “(மற்ற) மனிதர்களுக்கு நீங்கள் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், இந்தத் தூதர் உங்களுக்குச் சாட்சியாளராக இருப்பதற்காகவும் இவ்வாறே உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கினோம். புறமுதுகிட்டுச் செல்பவர்களிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுபவர் யார்? என்பதை நாம் அறிவதற்காகவே, முன்னர் நீங்கள் முன்னோக்கிக் கொண்டிருந்த கிப்லாவை மாற்றினோம்.…
-

இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே! | Politics | Sri Lanka |World | Ismail Salafi | Unmai Udayam |Article.
ஐம்பது நாள் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் குழப்பங்களால் இலங்கையின் நன்மதிப்புக்கு சரிவு ஏற்பட்டது. நாணயத்தின் மதிப்பிலும் சரிவு ஏற்பட்டது. இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி…. என பல சரிவுகள் ஏற்பட்டன. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் நாடு உள்ளது. நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பநிலை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடவில்லை. விவாகரத்தை வேண்டி நிற்கும் தம்பதிகள் போல ஜனாதிபதியும் பிரதமரும் செயற்பட்டால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாடு குட்டிச் சுவராகிவிடும்.…
-

முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்.
உரை: அஷ்ஷெய்க்: S.H.M இஸ்மாயில் ஸலபி”முஸ்லிங்களின் கல்வி வளர்ச்சியும் பாடசாலைகளின் முன்னேற்றமும்””MUSLIMGALIN KALVI VALARCHIUM PADASALAIGALIN MUNNETRAMUM”BY ASHSHK S.H.M ISMAIL SALAFI@JTJM PARAGAHADENIYA 02/12/2018
-

இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும்.
ஆசிரியர் பக்கம் – டிசம்பர் 2018 (உண்மை உதயம்) இலங்கை அரசியல் குழப்பமும் உணர வேண்டிய உண்மைகளும் இலங்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளது. இக்கட்டுரை வெளிவரும் போது இந்தப் பிரச்சினை ஒரு தீர்வுக்கு வந்திருக்கலாம் அல்லது இன்னொரு கட்டத்திற்கு மாறியிருக்கலாம். ஆனால், சில உண்மைகளை இவ்வாக்கத்தின் மூலம் உணர்த்த நாடுகின்றோம். பிரதமர் நீக்கமும் நியமனமும்: ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை…
-

இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு வலி (பொறுப்பாளர்) | Article 📖
பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய ‘ஷாத்’ – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை நிலைநாட்ட சிலர் முயற்சிக்கின்றனர். சீர்திருத்தம் என்றால் பிழையை…
-

இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும்.
இலங்கை முஸ்லிம்களின் இன்றைய கல்வி நிலையும் முஸ்லிம் பாடசாலைகளின் முன்னேற்றத்திற்கான சில முன்மொழிவுகளும் இலங்கை முஸ்லிம்கள் வியாபார சமூகமாகப் பார்க்கப்படுகின்றனர். பொதுவாக முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணம்தான் முஸ்லிம் சமூகத்திடமும் மேலோங்கியுள்ளது. இருப்பினும் கடந்த காலத்தோடு ஒப்பிடும் போது முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் போட்டி போடும் அளவுக்கு சகல துறைகளிலும் முன்னேற்றங் கண்டு வருகின்றனர் என்பதுதான் உண்மையாகும். நாம் கல்வியில் பின்தங்கியுள்ளோம். ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும் போது மிகப் பின்தங்கி யுள்ளோம் என்ற எண்ணம் தோல்வி…
-

திருமண வயதெல்லை┇கட்டுரை.
இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பான சர்ச்சையுடன் முஸ்லிம் ஒருவரின் குறிப்பாக முஸ்லிம் பெண்ணின் திருமண வயதெல்லை தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. இது தொடர்பான இஸ்லாத்தின் நிலைப்பாடு மற்றும் இது தொடர்பான விமர்சனங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தம் என எண்ணுகின்றேன். முஸ்லிம் ஆண்-பெண் இருவரினதும் திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். ஏற்கனவே இருந்த சட்டத்தின் பிரகாரம் முஸ்லிம் பெண் 14 வயதைத் தாண்டினால் மணம் முடிக்கலாம் என்ற…