ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும்

ஷீஆக்களும் தற்காலிக (முத்ஆ) திருமணமும்

மனிதன் தனது இயற்கை உணர்வுகளைத் தணித்துக் கொள்ள இஸ்லாம் ஆகுமான வடிகால்களை வைத்துள்ளது! மனித உணர்வுகளில் பலம் வாய்ந்ததான பாலியல் உணர்வை பண்பான முறையில் தீர்த்துக் கொள்ள இஸ்லாம் ஷரீஆவின் விதிமுறைகளுக்குட்பட்ட திருமணம் என்ற வழியை அறிமுகம் செய்து ஆர்வமும் ஊட்டுகின்றது. இஸ்லாம் அறிமுகப்படுத்திய நாகரிகமும், பண்பாடும், ஒழுக்கமுமிக்க நிகாஹ் முறைக்கு முற்றும் முரண்பட்ட ‘முத்ஆ” திருமணம் எனும் தற்காலிக திருமண முறை இன்று வரை ஷீஆக்களிடத்தில் நடைமுறையிலுள்ளது.

ஒருவர் ஒரு பெண்ணை ‘நான் மூன்று தினங்களுக்கு உன்னை மணந்து கொள்கின்றேன்” எனக் கூறி, ஒரு தொகையைக் கூலியாகக் கொடுத்து அவளிடம் இன்பம் அனுபவித்துவிட்டு மூன்று தினம் கழிந்ததும் அவளை விட்டு விடுவதை முத்ஆவுக்கு உதாரணமாகக் கூறலாம். இது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாட்டையும் ஷீஆக்களின் கீழ்த்தர முடிவுகளையும் அவர்களின் நூல்களிலிருந்து முன்வைப்பதே இவ்வாய்வின் நோக்கமாகும்.

ஜாஹிலிய்யாக் கால திருமணங்கள் பலதரப்பட்ட முறையில் அமைந்திருந்தன. பலர் சேர்ந்து ஒரு பெண்ணை மணப்பது, தனது தாய் அல்லாத தந்தையின் ஏனைய மனைவிகளை மகன் மணப்பது போன்ற ஒழுங்கற்ற திருமண முறைகள் அன்று இருந்தது போல் வியாபாரத்தின் நிமித்தம் நீண்ட கால பிரயாணத்தை மேற்கொள்ளும் அறபிகளிடத்தில் தற்காலிக திருமண முறையும் நடைமுறையில் இருந்தது. இஸ்லாமிய போதனை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கூட இது நடைமுறையில் இருந்தது. இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே அனைத்தையும் தடுத்ததில்லை. இஸ்லாம் கொஞ்சம் கொஞ்சமாக 23 வருட கால வஹீ மூலம் பூரணப்படுத்தப்பட்ட மார்க்கமாகும். இந்த வகையில் ஜாஹிலிய்யாக் கல நடைமுறையான ‘முத்ஆ”வும் ஆரம்ப கால முஸ்லிம்களிடம் நடைமுறையில் இருந்தது. பின்னர் அது முற்றாகத் தடுக்கப்பட்டது. இதனைப் பின்வரும் அறிவிப்புக்கள் மூலம் அறிய முடிகின்றது.

‘முத்ஆ” ஆரம்ப காலத்தில் நடைமுறையில் இருந்தது. ஒருவர் ஓர் ஊருக்குப் போனால் அந்த ஊரில் அவர் எத்தனை தினங்கள் தங்க உத்தேசித்துள்ளாரோ அத்தனை தினங்களுக்காக ஒரு பெண்ணை மணமுடிப்பார். அவள் அவரது பொருட்களைப் பாதுகாத்து அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்வாள். அல்குர்ஆனின் பின்வரும் வசனம் அருளப்படும் வரை இது நீடித்திருந்தது.

‘மேலும், அவர்கள் தமது கற்புகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.”

‘தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, (இவர்களிடம் உறவு கொள்வதினால்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படுவோர் அல்லர்.”
(அல்குர்ஆன்: 23:5,6)

‘மனைவி, அடிமைப்பெண் தவிர்ந்த அனைத்து மர்மஸ்தானங்களும் ஹராமாகும்”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
நூல் : திர்மிதி

‘நிச்சயமாக நபி(ச) அவர்கள் முத்ஆவை யும் வீட்டுக் களுதையின் மாமிசத்தையும் கைபர் யுத்தத்தில் வைத்து தடுத்தார்கள்” என அலி(வ) அவர்கள் அப்பாஸ்(வ) அவர்களிடம் கூறினார்கள்.”
புஹாரி: 5115

மேற்படி அறிவிப்பு கைபர் யுத்த காலத்தில் முத்ஆ தடுக்கப்பட்டது என்பதைக் குறித்துக் குறிப்பிட்டாலும் முத்ஆ முற்று முழுதாகத் தடுக்கப்பட்ட சந்தர்ப்பம் எது என்பதில் கருத்து வேறுபாடுள்ளது. எது எப்படியிருப்பினும் முத்ஆ தடுக்கப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
‘நபி(ச) அவர்கள் பத்ஹு மக்காவின் போது முத்ஆவுக்கு அனுமதியளித்துவிட்டு பின்னர், ‘மக்களே! உங்களுக்கு முத்ஆவை நான் அனுமதியளித்திருந்தேன். அதை அல்லாஹ் கியாம நாள் வரைக்கும் தடுத்துவிட்டான். எனவே, முத்ஆவுக்குரிய பெண் எவரிடத்திலாவது இருந்தால் அவர்களை அவர்களின் வழியில் விட்டுவிடுங்கள். அவர்களுக்குக் கொடுத்தவற்றில் எதையும் எடுத்துவிடாதீர்கள்” என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம், அஹ்மத்)

இதிலிருந்து ‘முத்ஆ” கியாம நாள் வரை தடுக்கப்பட்ட ஒன்று என்பதை அறியலாம். முத்ஆ கூடாது என்பதை நிரூபிக்க நீண்ட விளக்கங்கள் தேவைப்படாது என நினைக்கின்றோம். ஏனெனில், பண்பாடும், நாகரிகமும், நல்லொழுக்கமும் உள்ள அந்நியன் கூட தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள அகப்பட்ட பெண்ணிடம் கூலி கொடுத்து ஒரு முறை உறவு கொண்டு விட்டு அவளைப் பிரிந்து விடுவதை சரி காண மாட்டான். இது ஒரு அப்பட்டமான விபச்சாரம் என்றே கூறுவான்.

எனவே, இது பற்றி அதிகம் விபரிக்காமல் முத்ஆ பற்றிய ஷீஆக்களின் நிலைப்பாடு என்ன என்பதை அவர்களால் ஏற்றிப் போற்றப்படும் நூற்களிலிருந்தே எடுத்துத் தருகின்றோம்.

ஷீஆக்களும் முத்ஆவும்:

ஷீஆக்கள் ‘முத்ஆ” அங்கீகரிக்கப்பட்ட திருமண முறைதான் என்றும் அதனை உமர்(வ)தான் தன் இஷ்டத்திற்குத் தடுத்தார் என்றும் கூறுகின்றனர். (நஊதுபில்லாஹி மின்ஹா) ஈரானியப் புரட்சிக்குப் பின் ‘கும்” நகரில் வெளியிடப்பட்ட ‘னப்அதும்மி நஸ்ஸலப்” என்ற நூலில் இது பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது.

‘இதுவரை இப்பாடத்தில் நாம் கூறியதை நீ அவதானித்தால் முத்ஆவை அல்லாஹ்வும் ரஸுலும் அனுமதித்திருந்தனர். உமர்தான் அதைத் தடுத்தார் என்பதை அறிவாய்! முத்ஆவைத் தடுத்ததன் மூலம் உமர் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கத் தவறிவிட்டார் என்பதையும் மார்க்கத்தில் தன் சுய அபிப்பிராயத்தை முன்வைத்துள்ளார் என்பதையும் நீ அறிவாய். இதற்கு முந்திய பாடத்தில் ‘எவர்கள் அல்லாஹ் இறக்கியதைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் காபிர்கள்” என்ற அல்லாஹ்வின் வசனத்தையும் ‘யார் எங்களது மார்க்கத்தில் சுய கருத்துப்படி பேசுகிறாரோ அவரைக் கொன்றுவிடுங்கள்” என்ற நபிமொழியையும் அறிந்தாய். இந்தப் பாடத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை பார்ப்பாயானால் உமர் காபிராகிவிட்டார். குர்ஆனினதும், ஸுன்னாவினதும் அப்படையில் அவரைக் கொலை செய்வது வாஜிப் என்பது முடிவாகும். நன்றாக சிந்தித்துப் பார்!”
(நூல்: ஸப்அதும் மினஸ் ஸலப்: பக்கம்- 78)

உமர்(வ) அவர்கள்தான் முத்ஆவைத் தடுத்தார்கள் என்ற ஷீஆக்களின் கூற்று முற்றிலும் தவறாகும். நபி(ச) அவர்கள் பத்ஹு மக்காவின் போது முத்ஆவை அனுமதித்து பின்னர் தடுத்தார்கள். அனுமதித்ததை மட்டும் அறிந்தோர் இது ஆகுமானது என்ற கருத்தை வெளியிட்டனர். இதை அறிந்த உமர்(வ) அவர்கள் முத்ஆ கியாம நாள் வரை தடுக்கப்பட்டது. எவரேனும் அதைச் செய்ததாக அறிந்தால் கல்லெறிந்து கொல்வேன் என்று அதில் கடுமை காட்டினார். அவ்வளவுதான்.

இவர்களது கூற்றுப்படி உமர்(வ) அவர்கள் சுய விருப்பப்படி தடுத்திருந்தால் ஏன் அலி(வ) அவர்கள் கூட அதனைக் கண்டிக்கவில்லை? குப்ர் நடக்கும் போது இவர் பார்த்துக் கொண்டிருந்தது சரியா? சரி, அதுதான் போகட்டும். உமர்(வ) அவர்கள் ஹலாலை ஹராமாக்கியிருந்தால் அலி(வ) அவர்கள் தனது கிலாபத்திலாவது ‘முத்ஆ” ஆகுமானது என்பதைப் பிரகடனம் செய்திருக்கலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை? இதுவே ஷீஆக்களின் கூற்று பொய்யானது என்பதற்கு போதுமான சான்றாகும். குர்ஆனின் சட்டத்தை மாற்றி குப்ரான சட்டத்தை அறிமுகப்படுத்தியவரின் சட்டத்தை தனது ஆட்சியின் போதும் கூட மாற்றியமைக்காத அலி(வ) அவர்களின் நிலை பற்றி இவர்கள் என்ன கூறப் போகின்றனரோ?

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் யுத்தம் போன்ற கஷ்ட நேரங்களில் அனுமதிக்கப்பட்டு (புஹாரி: 5116) பின்னர் தடுக்கப்பட்ட முத்ஆவுடன் இன்றைய ஷீஆக்களின் நூற்கள் கூறும் முத்ஆவை ஒப்பிட்டுப் பார்த்தால் கூட ஷீஆக்களின் சீர்கெட்ட சிந்தனைப் போக்கின் தன்மை வெட்ட வெளிச்சமாகிவிடும்.

இதோ சில ஒப்பீடுகள்:

1. ஆரம்ப காலத்தில் முத்ஆவை நடைமுறைப் படுத்தியோர் அதனை ஒரு நிர்ப்பந்த நிலையை நீக்கும் ஊடகமாக மட்டுமே கருதினர். ஆனால், ஷீஆக்கள் முத்ஆவை மார்க்கத்தின் அடிப்படையாகக் கருதுகின்றனர். ஒருஜினல் திருமணத்தை விட கூலிக்கு அமர்த்தப்பட்ட வாடகைப் பெண்ணை அனுபவிப்பதை புனிதமாகப் பேசுகின்றனர்.

ஷீஆக்களின் பரிசுத்த 12 இமாம்களில் ஒருவரான ஜஃபர் சாதிக்(அலை) இது பற்றி பின்வருமாறு கூறினாராம்.

”முத்ஆ” எனதும் எனது மூதாதையர்களினதும் மார்க்கமாகும். யார் அதைச் செய்கின்றாரோ அவர் எம்மார்க்கத்தின் படி செயற்பட்டவராவார். யார் அதனை மறுக்கின்றாரோ அவர் எமது மார்க்கத்தை மறுத்தவராவார். எமது மார்க்கம் அல்லாததைக் கொள்கையாகக் கொண்டவருமாவார்.”
மன்லா யஹ்ழுருஹுல் பகீஹ் : 3ஃ366
தப்ஸீர் மன்ஹஜிஸ் ஸாதிகீன் : 2ஃ45

இதே கருத்தை ஷீஆக்களின் அடிப்படை வேத நூல் போன்று கருதப்படும் காபியும் கூறுகின்றது.

‘யார் எமது முத்ஆவை ஆகுமானதாகக் கருதவில்லையோ அவர் எம்மைச் சார்ந்தவரல்ல.”
(காபி: பாகம்-3, பக்கம்- 201, பாடம்- முத்ஆ, பாட எண்- 143, அறிவிப்பு எண்- 1384)

(இலங்கையிலுள்ள ஷீஆக்கள் முத்ஆவை சரிகண்டுதான் இருப்பர் போலும். இல்லையென்றால் ஷீஆவாக முடியாதல்லவா?

02. அன்று முத்ஆ தர்மசங்கடமானதொரு அனுமதியாகவே இருந்தது. ஆனால், ஷீஆக்களிடத்தில் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து காக்கும் வழியாகவே கருதப்படுகின்றது.

‘யார் ஒரு முத்ஆ செய்கின்றாரோ அவர் ஜப்பாரின் கோபத்திலிருந்து பாகாப்புப் பெற்றுவிட்டார் என நபி(ச) அவர்கள் கூறியதாகக் கூறுகின்றனர்.”
(தப்ஸீர் மன்ஹஜுஸ் ஸாதிகீன் : 2ஃ493

3. ஷீஆக்கள் பெண்களை இந்த விபச்சாரத்திற்கு தூண்டுகின்றனர்.

நபி(ச) அவர்களின் விண்ணுலக யாத்திரையின் போது நபியிடம் ஜிப்ரீல்(ர) அவர்கள்,

முஹம்மது உம்மத்திலுள்ள முத்ஆ செய்யும் பெண்களை மன்னித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான் எனக் கூறினார்” என அபூ ஜஃர் கூறுகின்றார்.
மன்லா யஹ்ழுருஹுல்பகீஹ்
பாகம்:3, பக்கம்:255, பாடம்: பில் முத்ஆ, அறிவிப்ப எண்:15

முத்ஆவை இவ்வாறு ஆதரித்த இமாம்கள் தங்களது பெண்களை பிறர் முத்ஆ செய்ய அனுமதிக்கவில்லை என்ற வேடிக்கையான தகவல்களையும் ஷீஆ நூல்கள் மூலம் பெற முடிகின்றது.

அம்மார் என்பவர் கூறுகின்றார்: ‘அபூ அப்துல்லாஹ்(ரழி) அவர்கள் என்னையும் சுலைமானிப்னு ஹாலிதையும் பார்த்து ‘நான் நீங்கள் மதீனாவில் இருக்கும் போது உங்கள் இருவருக்கும் முத்ஆவை ஹராமாக்கியிருந்தேன். ஏனெனில், நீங்கள் அடிக்கடி என்னிடத்தில் வருவீர்கள். (முத்ஆ ஆகுமென்றால்) நீங்கள் இருவரும் அதனைச் செயற்படுத்திவிடுவீர்களோ என்று நான் பயந்தேன்” என்று கூறினார்.
துல்காபி: பாகம்- 5, பக்கம்- 467,
கிதாபுன்னிகாஹ், அறிவிப்பு எண்- 9

தன் வீட்டுக்கு வருபவர்கள் குடும்பப் பெண்களுடன் கூடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் ஒரு இமாம் அதனை ஹராம் என்று கூறியுள்ளாரே! முத்ஆவைக் கூடாது எனக் கூறியதால் உமர் காபிர் எனின், இவர்களது பரிசுத்த இமாம் அபூ அப்துல்லாஹ்வின் நிலை என்ன? அவரும் காபிர்தானே?

இவ்வாறே ஜஃபர் ஸாதிக் அவர்களிடம் உங்கள் பெண்களை முத்ஆவுக்கு அனுதிப்பீர்களா? என ஒருவர் கேட்ட போது அதைப் புறக்கணித்ததாக வருகின்றது. ஊரார் வீட்டுப் பெண்களைக் காவிக் கொள்ள உட்சாகமூட்டுவார்களாம். தம் வீட்டுப் பெண்களை மட்டும் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிப் பாதுகாப்பனராம்! பலே கில்லாடிகள்தான் போங்கள்.

4. ஆரம்ப காலத்தில் முத்ஆ செய்தோர் அதனை நன்மை தரும் காரியமாகக் கருதியதில்லை. இவர்கள் அதற்கு பெரிய தவாபெல்லாம் இருப்பதாகக் கூறி இந்த ஒழுக்கக்கேட்டை ஊக்குவிக்கின்றனர்.

அபூ ஜஃபர்(அலை) அவர்களிடம் ஒருவர் முத்ஆ செய்பவனுக்கு நன்மை உண்டா? எனக் கேட்ட போது அவர்,

‘ஆம், இதன் மூலம் அவர் முத்ஆவை மறுப்பவர்களுக்கு மாறு செய்வதையும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடுவாரெனில் அவளுடன் பேசும் ஒவ்வொரு பேச்சுக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதாமல் இருக்கமாட்டான். அவளைத் தீண்ட அவளை நோக்கிக் கையை நீட்டினாலும் அல்லாஹ் நன்மைi எழுதாமல் இருப்பதில்லை. அவர் அவளை நெருங்குவாரெனில் அதற்காக அவரை அல்லாஹ் மன்னிப்பான். அவர் (உறவு கொண்டு) குளித்தால் அவரது உடலில் எத்தனை உரோமங்களை தண்ணீர் கடந்து செல்கின்றதோ அந்தளவிற்கு அவரது பாவங்கள் மன்னிக்கப்படும். நான் உரோமங்களின் அளவிற்கா? எனக் கேட்டதற்கு ஆம், உரோமங்களின் அளவுக்குத்தான் எனப் பதிலளித்தார்கள்.”
மன்லா யஹ்ழுருஹுல்பகீஹ்
பாகம்:3, பக்கம்:255, பாடம்: பில் முத்ஆ, அறிவிப்ப எண்:18

5. சுவனத்தில் நுழையச் செய்யும் ஒரு முக்கிய அமலாக இதனைக் கருதுகின்றனர்.

‘யார் ஒருமுறை முத்ஆ செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் கோபத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றுவிட்டார். யார் இரு தடவை முத்ஆ செய்கின்றாரோ அவர் நல்லடியார்களுடன் எழுப்பப்படுவார் என நபி(ச) அவர்கள் கூறியதாகக் கூறுகின்றார்.”
மன்லா யஹ்ழுருஹுல்பகீஹ்: பாகம்:3,
6. முத்ஆ செய்யாமலிருப்பதைக் குறையாகக் காணுகின்றனர்.

‘யார் முத்ஆ செய்யாதவராக உலகை விட்டும் பிரிகின்றாரோ அவர் மறுமையில் உடல் ஊனமுற்றவராக வருவார்” எனக் கூறுகின்றனர்.
மின்ஹாஜுஸ் ஸாதிகீன்: 3ஃ366

7. ஒரே நேரத்தில் எத்தனை பெண்களுடன் வேண்டுமானாலும் கூடலம் என்கின்றனர்.

‘அபூ பஸீர் என்பவர் அபூ அப்துல்லாஹ்(அலை) அவர்களிடத்தில், ‘ஒருவர் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் முத்ஆ செய்ய முடியுமா?” எனக் கேட்டதற்கு அவர், ‘இல்லை, எழுபது பெண்களுடனும் செய்யலாம்” எனப் பதிலளித்தார்கள்.
மன்லா யஹ்ழுருஹுல்பகீஹ்: பாகம்:3ஃ294
அறிவிப்பு எண்: 1395, காபி: 5ஃ41

ஒருவர் ஆயிரம் பெண்களுடனோ அதற்கு அதிகமானவர்களுடனோ முத்ஆ செய்யலாம் என மின்ஹாஜுஸ் ஸாதிகீன் கூறுகின்றது.

8. குறைந்த கணக்கைக் கொடுத்தே பெண்களை அனுபவிக்க அனுமதிக்கின்றனர். ஒரு பிடிக் கோதுமை, ஒரு பிடி பேரீட்சம் பழம், கஞ்சி, மிஸ்வாக் போன்றவற்றைக் கூட கொடுத்து அனுபவிக்கலாம். (பார்க்க: காபி- கிதாபுன்னிகாஹ்)

இது விடயத்தில் எந்தளவு இவர்கள் இழிநிலைக்குச் சென்றுள்ளனர் என்பதை அவர்களது பின்வரும் அறிவிப்பு எடுத்துக் காட்டுகின்றது.

அபூ அப்துல்லாஹ்(அலை) அறிவிக்கின்றார்:’ஒரு பெண் உமரிடம் வந்து, ‘நான் விபச்சாரம் செய்துவிட்டேன் என்னைத் தூய்மைப்படுத்துங்கள்” என்றாள். உமர் அவளுக்குக் கல்லெறியுமாறு கட்டளையிட்டார். இச்செய்தி அமீருல் முஃமினீன் அலி(வ) அவர்களுக்கு எட்டியது. அவர் அப்பெண்ணிடம், ‘எப்படி விபச்சாரம் செய்தாய்?” என்று கேட்டார். அப்பெண், ‘நான் ஒரு பள்ளத்தாக்கில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு கடுமையாகத் தாகம் ஏற்பட்டது. ஒரு காட்டறபியிடம் நீர் கேட்டேன். நான் அவனுக்கு இணங்காவிட்டால் நீர் தரமாட்டேன் என்றான். தாகத்தால் என் உயிர் போய்விடும் எனப் பயந்தேன். எனவே, நான் அவனுக்கு இணங்கினேன். அவன் எனக்கு நீர் தந்தான்.” எனப் பதிலளித்தாள். இதைக் கேட்ட அமீருள் முஃமினீன் அலி(வ) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக இரு திருமணமாகும்” என்றார்கள்.”
(காபி: பாகம்- 5, பக்கம்- 467,
கிதாபுன்னிகாஹ்)

ஒரு மிடர் நீரை அப்பெண் மஹராகப் பெற்று அவனுடன் முத்ஆவுக்கு இணங்கியுள்ளாளாம். எவ்வளவு கேடு கெட்டுப் போயுள்ளனர் என்பது புரிகின்றதா?

9. இவர்கள் சிறுமிகளையும் அனுபவிக்கலாம் என்கின்றனர். பத்து வயதுச் சிறுமிகளைக் கூட முத்ஆவுக்குப் பயன்படுத்தலாம் என காபியும், மன்லா யஹ்ழுருஹுல் பகீஹும் கூறுகின்றன. பேரீட்சம் பழத்தைக் கொடுத்தே அனுபவிக்கலாம். ஷீஆக்களிடத்தில் சிறுமிகளை அண்ட விட்டுவிடாதீர்கள்.

10. ஒரு முறை உறவுக்காகக் கூட அமர்த்திக் கொள்ளலாம்.

‘அபுல் ஹஸன்(ரழி) அவர்களிடம் ‘முத்ஆ”வுக்குரிய குறைந்த காலம் எது? ஒரு முறை உறவு கொள்வதற்காகவும் முத்ஆ செய்யலாமா? எனக் கேட்கப்பட்டது. ‘ஆம்” என்றார்கள்.”
(காபி: 5ஃ460)

அதற்கடுத்த அறிவிப்பில் இப்படி ஒரு முறை உறவுக்காக முத்ஆ செய்தால் உறவு முடிந்ததும் முகத்தைத் திருப்பிக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது. (பெரிய பக்குவம் பாருங்கள்!)

11. கணவன் உள்ள பெண்ணுடனும் உறவு கொள்ளலாம் என்கின்றனர்.

அபான் இப்னு தஃலப் என்பவர் கூறுகின்றார்: ‘நான் அபூ அப்தில்லாஹ் (அலை) அவர்களிடம், ‘நான் பாதைகளில் இருப்பேன்! அழகான பெண்களைக் காண்பேன்! (அவர்களுடன் முத்ஆ) செய்ய ஆசை கொண்டாலும்) அவர்களுக்கு கணவர் உண்டா? இல்லையா? என்பது தெரியாது. என்ன செய்வது?” என்று கேட்டேன். அதற்கவர், ‘அது உனக்குத் தேவையில்லாத விடயம். உன் கடமையெல்லாம் கூலி கொடுப்பது மட்டும்தான். (அவர்களைப் பற்றி ஆராய்வதில்லை)” என்று கூறினார்.”

இதே போன்று, மைசர் என்பவர் அபூ அப்தில்லாவிடம் ‘நான் பாலைவனத்தில் ஒரு பெண்ணைக் கண்டு, ‘உனக்கு கணவன் உள்ளானா?” என்று கேட்டேன். அவள், ‘இல்லை” என்கிறாள். (இதை நம்பி) நான் அவளை (முத்ஆ) மணக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கவர், ‘அவளைப் பற்றி அவள் கூறுவதுதான் உண்மை” என்று கூறினார்.” என்றார்.

(இந்த இரு அறிவிப்புக்களும் காபி: பாகம்- 05, பக்கம்- 462, பாபு இன்னஹா முஸத்தகா அலா நம்ஸிஹா என்ற பாடத்தில் இடம்பெற்றுள்ளது)

இதுவரையில் நாம் கூறியவற்றிலிருந்து முத்ஆ பற்றி எவ்வளவு கீழ்த்தரமான முடிவுகள் ஷீஆக்கள் கொண்டுள்ளனர் என்பதை ஆதாரபூர்வமாக அறிந்திருப்பீர்கள்.

திருமணம் என்ற பெயரில் நடக்கும் இந்த ஒழுக்க சீர்கேட்டிற்கு ஈரானில் அரசு அங்கீகாரம் உள்ளது. இதனால் தந்தை பெயர் தெரியாது குழந்தைகளின் எண்ணிக்கை அங்கே அதிகரித்துச் செல்கின்றது.

இலங்கையில் உள்ள ஷீஆக்களும், ஷீஆ ஆதரவாளர்களும் பங்கிட்ட ஷீஆ சிந்தனைப் பிரிவு” என்ற நூலிலும் முத்ஆவை ஆதரித்து ஐந்து பக்கங்களில் எழுதப்பட்டுள்ளது. முத்ஆவை ஆதரிக்கும் நூலை ஏன் இவர்கள் இலங்கையில் விநியோகிக்க வேண்டும்? ஈரானுக்குப் போகும் வேலையை இங்கேயே முடித்துவிடலாம் என்பதற்காகவா?

இதுவரை முத்ஆ பற்றிய ஷீஆக்களின் நிலையை அறிந்தீர்கள்.

ஈரானின் இனிப்பான கவனிப்பு களுக்காகப் பல் இளிக்கும் அரசியல்வாதிகளே! பல்கலைக்கழக விரிவுரையாளர்களே! உங்கள் மகளை, உடன் பிறந்த சகோதரிகளை, உறவுக்காரப் பெண்ணை ஒரே ஒரு முறை முத்ஆ செய்ய அனுமதிக்க நீங்கள் தயார்தானா?

வெட்கம், ரோஷம், மானம், மரியாதை ஏதேனும் கொஞ்சமேனும் இருந்தால் இதற்குப் பதில் சொல்லிவிட்டு ஷீஆயிஷத்திற்கு வால் பிடியுங்கள்! ஆதரவு கொடுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.