நோன்பு நோற்றவர் மறதியாக உண்டால், பருகினால் அவரது நிலை என்ன என்ற சந்தேகம் பலருக்கும் எழுவதுண்டு.
மறதி என்பது மனித பலவீனங்களில் ஒன்றாகும். அல்லாஹ் மறதிக்கு மன்னிப்பளிக்கின்றான்.
‘ஒரு நோன்பாளி மறதியாக உண்டால் அல்லது பருகினால் அவர் தனது நோன்பைப் பூர்த்தியாக்கட்டும். அல்லாஹ்வே அவருக்கு உணவளித்தான், நீர் புகட்டினான்’ என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி: 6669, இப்னுமாஜா: 1673)