ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?

ஒரு மஸ்ஜிதில் பல ஜமாஅத்துத் தொழுகைகள் தொழப்படுவதின் சட்டம் என்ன?
பதில்:
ஒரு மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படுவது மூன்று வகைப்படும்.

முதலாவது வகை:
மஸ்ஜித் பாதை ஓரத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டதாக இருத்தல். இத்தகைய மஸ்ஜித்களில் இரண்டாம் ஜமாஅத் நடாத்துவது தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இங்கு நியமிக்கப்பட்ட எந்த இமாமும் இல்லை. வருபவர், போகின்றவர்கள் எல்லோரும் தொழுவார்கள்.
இரண்டாவது வகை:
ஒரே மஸ்ஜிதில் இரண்டு இமாம்களை நியமித்தல். ஒரு இமாம் ஆரம்பத்தில் தொழுவிப்பார். அடுத்தவர் இறுதி நேரத்தில் தொழுவிப்பார். இது பித்அத் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய நடைமுறை ஸலபுஸ்ஸாலிஹீன்களிடம் இருந்ததில்லை. அத்துடன் இது மக்களைப் பிரிப்பதாகவும் (நேரம் தவறிவிட்டால் குறித்த நேரத்தில் அடுத்த இமாமுடன் தொழுதுக் கொள்ளலாம் என்ற) சோம்பேறித் தனத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும்.
மூன்றாம் வகை:
ஒரு ஜமாஅத் முடிந்த பின்னர் இன்னொரு ஜமாஅத் வருகின்றது. இவர்கள் தனித்தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது சிறப்பாகும். ஒரு மனிதன் தனியாகத் தொழுவதை விட மற்றொருவருடன் சேர்ந்து தொழும் தொழுகை சிறந்ததாகும். இரண்டு மனிதர்களுடன் ஒருவர் தொழுவது ஒருவருடன் தொழுவதை விட சிறந்ததாகும். எவ்வளவு மக்கள் தொகை அதிகமாகின்றதோ அந்தளவுக்கு அல்லாஹ்வுக்கு அது விருப்பத்துக்குரியதாகும் என்ற நபிமொழியின் அடிப்படையில் (தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது) சிறந்ததாகும்.
‘நபி(ச) அவர்கள் தொழுது முடிந்த பின்னர் ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். இவருடன் சேர்ந்து தொழுது (இவருக்கு அதிக நன்மையை) ஸதகா செய்வது யார்? என நபி(ச) அவர்கள் கேட்டார்கள். சபையில் இருந்த ஒருவர் எழுந்து அவருடன் தொழுதார்.’
இங்கே ஏற்கனவே தொழப்பட்ட மஸ்ஜிதில் இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்பட்டுள்ளது. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதாக இல்லையென்றால் நபி(ச) அவர்கள் அதனைத் தூண்டியிருக்க மாட்டார்கள்.
ஏற்கனவே பர்ழைத் தொழுத ஒருவர்தான் அவருடன் தொழுதார். அவருக்கு அந்தத் தொழுகை நபிலாகத்தான் இருந்தது என்று கூறுவது பொருத்தமற்றதாகும். ஏனெனில், இரண்டாம் ஜமாஅத் கூடுமா? என்பதே இங்கு கேள்விக்குறியாகும். அது நடந்துள்ளது. அடுத்து, தொழுது முடிந்த பின்னர் தனியாக வந்த மனிதருடன் இன்னொரு மனிதரும் வந்து அவர்கள் இருவரும் இகாமத் சொல்லி ஜமாஅத் நடாத்தியிருந்தால் நபி(ச) அவர்கள் அதைத் தடுத்திருப்பார்களா? இல்லவே இல்லை. ஏற்கனவே தொழுதவரையே சேர்ந்து தொழத் தூண்டிய நபி(ச) அவர்கள் தொழாத இருவர் ஜமாஅத்தாகத் தொழுதால் தடுக்க வாய்ப்பே இல்லை.
இவற்றிலிருந்து இந்த வகையான இரண்டாம் ஜமாஅத்தைத் தடுப்பதற்கான வாய்ப்பு இல்லையென்பது தெளிவாகின்றது. இது குறித்த ஆதாரம் தெளிவாக இருப்பதால் எமது உலமாக்கள் இதையே சரிகாண்கின்றனர். -அல்லாஹு அஃலம்-
(அஷ்ஷய்க் முஸ்மத் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ், மஸ்மூஉ பதாவா வரஸாயில் – 15-ஆம் பக்கம், ஜமாஅத்துத் தொழுகை)
முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன் ரஹ்
http://ar.islamway.net/fatwa/30372
— — — — — — — — — — — — — — —
குறிப்பிட்ட மஸ்ஜிதில் கடமையாற்றும் இமாமுக்குப் பின்னால் தொழக் கூடாது என்ற அடிப்படையில் பிரிவினையையும் பித்னாவையும் வெளிப்படுத்த நாடி இரண்டாம் ஜமாஅத் நடாத்தப்படும் என்றால் இரண்டாம் ஜமாஅத் ஹராமாகும்; ஆகுமானதல்ல. ஜமாஅத்து நடாத்தும் இமாம் பித்அத்வாதியாக இருந்தாலும் இரண்டாவது ஜமாஅத்தை உருவாக்கக் கூடாது.
இதற்கு மாற்றமாக ஜமாஅத்துத் தொழுகையில் ஆர்வத்துடன் இருக்கின்றவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு சிறந்தது என அறிந்து தொழுகைக்குப் பள்ளிக்கு வருகின்றார். ஆனால், அவர் வரும் போது இமாம் தொழுகையைத் தொழுது முடித்துவிட்டார். அந்த வக்தின் ஜமாஅத்துத் தொழுகை தவறிவிட்டது. அதன் பின் ஒருவர் பின் ஒருவராக மஸ்ஜிதுக்குள் வருகின்றனர். அவர்கள் சேர்ந்து ஜமாஅத்துத் தொழுகின்றனர்.
இவ்வாறு வேண்டுமென அவர்கள் ஜமாஅத்தை விட்டும் பிந்தாமல் இருக்கும் போது, இரண்டாம் ஜமாஅத்தை உருவாக்கும் எண்ணம் இல்லாமல் ஜமாஅத்துத் தொழுகைக்காக வந்து ஜமாஅத் தவறியவர்கள் சேர்ந்து தொழுவதில் எந்தத் தடையும் இல்லை. (இது குறித்து அபூதாவூத் கிரந்தத்தின் விரிவுரையான துஹ்பதுல் அஹ்வதியைப் பார்வையிடுங்கள்.)
iஷக் அல்பானி(ரஹ்) அவர்கள் இமாம் ஷாபி(ரஹ்) அவர்களின் கூற்றுப் பிரகாரம் நகரங்கள், கிராமங்களை விட்டும் தூரமான பள்ளிகளில் பல ஜமாஅத்துக்கள் நடப்பதை சரிகாணவில்லை என்ற அடிப்படையில் தீர்ப்புக் கூறுகின்றார்கள். அவர்கள் சங்கடத்திற் குள்ளானவர்களாக இருந்தாலும் இல்லா விட்டாலும் மீண்டும் தொழக் கூடாது என்பதுதான் அவர்களது நிலைப்பாடாகும்.
இது குறித்து nஷய்க் அல்பானியுடன் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது.
ஜமாஅத்துத் தொழுகை தவறிய ஒரு ஸஹாபி குறித்து இவருடன் சேர்ந்து தொழுது இவருக்கு ஸதகா செய்வது யார்? என நபி(ச) அவர்கள் கூறிய ஹதீஸ் அவரிடம் சுட்டிக் காட்டப்பட்ட போது iஷக் அல்பானி(ரஹ்) அவர்கள் அது ஏற்கனவே தொழுதவருக்கு சொல்லப்பட்டதாகும். அதில் ஒருவர் ஏற்கனவே தொழுதவர், அவரைப் பொருத்தவரை அந்தத் தொழுகை நபீலாகும். அடுத்தவர் தொழுதது பர்ழாகும் என்றார்கள். எப்படி இருப்பினும் இது இமாமின் சொந்தக் கருத்தாகும்.
எனினும், ஒருவர் பித்னாவைக் கருதாமல், இரண்டாம் ஜமாஅத்தை உருவாக்கும் எண்ணம் இல்லாமல் முதலாம் ஜமாஅத்தை அடைந்து கொள்ளும் ஆர்வத்தில் வருகின்றார். அவருக்கு ஜமாஅத் தவறிவிடுகின்றது. அவர் இன்னொரு ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுவதில் எந்தத் தடையும் இல்லை என்பதே சரியான கூற்றாகும்.
ரபீஃ இப்னு ஹாதி அல் மந்ஹலி
http://www.sahab.net/forums/index.php?showtopic=105118
(உண்மை உதயம் மாதஇதழ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.