வரலாறு

July, 2018

  • 1 July

    குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன் | Article.

    வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக நோக்குவோம். குருநாகலையும் முஸ்லிம் குடியேற்றமும்: இலங்கை முஸ்லிம்கள் கடற்கரைப் பிரதேசங்கள் மட்டுமன்றி நாட்டின் மத்திய பகுதியிலும் பரவலாகக் குடியேறியுள்ளனர். குறிப்பாக குருநாகலையில் ...

May, 2018

  • 18 May

    முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்.

    இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் ஏற்பட்ட போரில் நாட்டின் வளங்களும் அபிவிருத்தியும் நற்பெயரும் பெறுமதிமிக்க உயிர்களும் பறிபோயின. போர் மற்றும் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளால் மிகப் பெரிய உயிர் உடைமை இழப்பை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. தமிழ் ...

April, 2018

  • 26 April

    தாலூதும் ஜாலூதும் | சிறுவர் பகுதி 19.

    எண்ணிக்கையில் குறைந்த நாம் எப்படி அதிக எண்ணிக்கையை உடைய ஜாலூத்தின் படையை வெற்றி கொள்வது என்று கலங்கியவர்கள் ஈற்றில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய களம் இறங்கினர். தாலூதின் படை தயாரான போது எதிரிகள் அதிகமாக இருப்பதைக் கண்டனர். எனினும் உறுதியுடன் போராடத் துணிந்தனர். அல்லாஹ்விடம், “இந்தப் பெரும் படையுடன் மோதத் தக்க அளவுக்கு எம்மீது பொறுமையைச் சொரிவாயாக. போரில் இயலாமையையோ, சடைவையோ நாம் சந்திக்கக் கூடாது. புறமுதுகு காட்டி ஓடிவிடவும் கூடாது. எனவே எமது பாதங்களைப் பலப்படுத்துவாயாக. இந்த இறை ...

  • 17 April

    இலங்கை முன்னேற்றத்திற்கு முஸ்லிம்களின் பங்கு | Sainthamaruthu | VEDIO.

    விஷேட இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு. காலம்: 06-04-2018 இடம்: கடற்கரை திறந்தவெளி சாய்ந்தமருது. 

  • 3 April

    இஸ்ராவும் மிஃராஜும்

    நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜும் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: ‘அஸ்ரா’ என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. ‘(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறச் சூழலைப் பாக்கியம் பொருந்தியதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை இரவில் ...

  • 3 April

    கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]

    முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் பகுதி ஏழை எளியவர்களுக்கு தருமம் செய்வதற்கு. அவ்வாறு வழங்குபவற்றை அவர் ஏழை ...

March, 2018

  • 19 March

    இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

    நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள். அல்லாஹ்வின் கட்டளை இந்த ...

  • 11 March

    அணுபவப் பகிர்வு… அப்துல் ஹமீல் பக்ரி (ரஹ்)

    சென்னையில் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் காரியாலயத்திற்கு அருகில் ‘அஹ்லே ஹிங்’ (தவ்ஹீத்) பள்ளி உள்ளது. நான் அங்கு குத்பாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். குத்பா உரை முடிந்ததும் ஒரு பெரியவர் வந்து ஸலாம் கூறி ‘நீங்கள் கொழும்பா?’ என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியதும் முன்பு கொழும்பில் இருந்து அப்துல் ஹமீத் பக்ரி என்பவர் இங்கு வருவார். உங்கள் குத்பாவைக் கேட்கும் போது அவரின் நினைவு வந்தது என்றார். அப்துல் ஹமீத் பக்ரியின் மாணவரின் மாணவன் நான் என என்னை அறிமுகம் ...

  • 11 March

    மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

    முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார். மூஸா நபியும் நமக்கு ...

February, 2018

  • 22 February

    குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]

    அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது! ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே வழிபடுவதா?” என சிந்தித்தனர். இதன் முடிவாக சிலை வணக்கம் கூடாது என்பதை உணர்ந்தனர். ...