தப்ஸீர்

September, 2015

  • 3 September

    சத்தியத்தை சாட்டாக்காதீர்கள் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘நீங்கள் நன்மை செய்வதற்கும், (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்கும், மக்கள் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் உங்களது சத்தியங்களின் மூலம் அல்லாஹ்வைத் தடையாக ஆக்காதீர்கள். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்; நன்கறிந்தவன்.’ (2:224) நல்ல விடயங்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு அதில் முரட்டுப் பிடிவாதத்துடன் இருப்பது கூடாது. உதாரணமாக, அல்லாஹ்வின் மீது சத்தியமாக இந்தப் பள்ளிக்கு எந்த உதவியும் நான் செய்ய மாட்டேன் எனச் சத்தியம் செய்துவிட்டு பின்னர் உதவி செய்ய வேண்டிய தேவை வரும் போது சத்தியம் செய்துவிட்டேன் அதனால் தர முடியாது என்று கூறி ...

  • 3 September

    மனைவியைத் தீண்டுவதில்லை என சத்தியம் செய்தல் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘தமது மனைவியருடன் உறவு கொள்வதில்லை என சத்தியம் செய்வோருக்கு நான்கு மாதங்கள் அவகாசமுண்டு. (அதற்குள்) அவர்கள் திரும்பிவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ ‘அவர்கள் விவாகரத்து செய்வதையே தீர்மானமாகக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன்ளூ நன்கறிந்தவன்.’ (2:226-227) மனைவி மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லது மனைவியைத் திருத்துவதற்காக உன்னைத் தீண்ட மாட்டேன் என சத்தியம் செய்வதுண்டு. இதற்கு ‘அல் ஈழா’ என்று கூறப்படும். இதை நல்லதற்குப் பயன்படுத்துவது போலவே சிலர் தவறான முறையிலும் பயன்படுத்தி வந்தனர். உன்னைத் தீண்ட மாட்டேன் ...

  • 3 September

    மாதவிடாயும் பெண் கொடுமையும் (அல்குர்ஆன் விளக்கம்)

    ‘மாதவிடாய் பற்றியும் உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர். ‘அது ஒரு அசௌகரியமாகும். எனவே, மாதவிடாயின் போது பெண்களை (உறவு கொள்வதை) விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். அவர்கள் தூய்மை யடையும் வரை அவர்களிடம் (உறவுக்காக) நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்கு ஏவியவாறு அவர்களிடம் செல்லுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்புத் தேடுபவர்களை நேசிக்கின்றான். மேலும் தூய்மையானவர்களையும் நேசிக்கின்றான்.’ (2:222) மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் இயற்கையான அம்சமாகும். மாதவிடாய் காலத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள், அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். அவர்களை ...

July, 2015

June, 2015

  • 9 June

    அல்குர்ஆன் விளக்கம் சூரா பகரா – அல்லாஹ்வின் வருகை

    அல்லாஹ்வின் வருகையை இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? என்ற தொனியில் இந்த வசனம் அமைந்துள்ளது. அல்லாஹ்வுக்கு வருதல் (அல்மகீஉ) என்ற ஒரு பண்பு உள்ளது என்பதற்கு இது போன்ற வசனங்கள் சான்றாக உள்ளன. ‘அவ்வாறன்று, பூமி துகள் துகளாக தகர்க்கப்படும் போது,’ ‘வானவர்கள் அணி அணியாக நிற்க, உமது இரட்சகன் வருவான்.’ ‘அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வு பெறுவான். அவ்வுணர்வு அவனுக்கு எப்படிப் பயனளிக்கும்?'(89:21-23) இந்த வசனம் அல்லாஹ்வின் வருகை பற்றிப் பேசுகின்றது. இது போன்று அல்லாஹ்வின் பண்புகள், செயல்கள் பற்றிப் பேசும் ...

May, 2015