தப்ஸீர்

October, 2014

  • 27 October

    பைபிளில் நபித்தோழர்கள் – அல்குர்ஆன் விளக்கவுரை

    அல்குர்ஆன் அற்புத இறை வேதமாகும். அதில் பல்வேறுபட்ட முன்னறிவிப்புகள் நிறைந்து காணப்படுகின்றன. அத்தகைய முன்னறிவிப்புகளில் விஞ்ஞான உண்மைகள், வரலாற்று உண்மைகள், தொல்பொருள் ஆய்வுகள் பற்றிய முன்னறிவிப்புகள் என்பன உள்ளடங்குகின்றன. அவ்வாறே முன்னைய வேதங்களில் இஸ்லாம் பற்றியும், நபி(ஸல்) அவர்கள் பற்றியும் அறிவித்தல்கள் உள்ளன என்ற அறிவிப்பையும் குர்ஆன் கூறுகின்றது. ஈஸா(அலை) அவர்கள் தனக்குப் பின்னர் “அஹ்மத்” என்ற புகழத் தக்க ஒரு தூதர் வருவார் எனக் கூறியதாக அல்குர்ஆன் கூறுகின்றது. (61:6) அதனை பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் தேற்றவாளர் என மொழியாக்கம் செய்து மறைக்க முயன்று ...

  • 25 October

    மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)

    கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (3:97) மகாமு இப்றாஹீம் என்பதற்கு, “இப்றாஹீம் நின்ற இடம்”, ...

  • 25 October

    ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)

    நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) கட்டாயமானதாகும். ஸஃபாவில் ஆரம்பித்து மர்வாவை அடைவது ஒரு ஒட்டமாகவும் பின்னர் மர்வாவில் இருந்து ...