தப்ஸீர்

November, 2016

  • 2 November

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் – சூறா ஆலு இம்றான் தொடர் – 02 | கட்டுரை.

    அல்லாஹ் மட்டும் அறிவான் முதஷாபிஹத்தான ஆயத்துக்களின் விளக்கத்தையும் இறுதி முடிவையும் அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று பொருள் செய்வதுதான் பொருத்தமானது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அதற்கு மாற்றமாக பொருள் செய்யும் போது அனைத்தும் எமது இறைவனிடம் இருந்தே வந்தன என அல்லாஹ்வும் அறிவுடையோரும் கூறுவார்கள் என அர்த்தம் செய்ய நேரிடும். இது குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும் என்பதைக் கண்டோம். முஹ்கம், முதஷாபிஹாத் இரண்டுமே ஒன்றுபோன்றது என்றால் அல்லாஹ் இரண்டையும் வேறுபடுத்திக் கூற வேண்டிய தேவை வந்திருக்காது! எனவே, இரண்டுக்கு மிடையில் புரிந்து கொள்வதில் வேறுபாடு ...

June, 2016

  • 22 June

    அல்குர்ஆன் விளக்கம்: கண்ணியமிக்க இரவு | கட்டுரை.

    ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் ‘அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97 ஆம் அத்தியாயமாக அல் குர்ஆனில் இடம் பெற்றுள்ள இவ்வசனங்கள் ‘லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ச) அவர்களுக்கு அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். இந்த இரவில் வானவர்களும் அவர்களின் தலைவர் ஜிப்ரீல்(அ) அவர்களும் பூமிக்கு இறங்குகின்றனர். இதுதான் ...

  • 8 June

    அல்-குர்ஆன் விளக்க வகுப்பு | சூரா: 2, வஸனம்:185 |வீடியோ.

    காலம்: 01.06.2016 (புதன்கிழமை)| இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜூம்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய. அல்-குர்ஆன் வஸனம்: 2:185 “ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே ...

April, 2016

March, 2016

  • 11 March

    அல்குர்ஆன் விளக்கம் | இப்றாஹீம் நபியின் விவாதம்.

    ‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்” என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்;.” (2:258) இப்றாஹீம் நபியவர்கள் தனது காலத்தில் வாழ்ந்த ...

  • 11 March

    அல்குர்ஆன் விளக்கம் | மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.

    ‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்”தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ” (2:256)

February, 2016

  • 19 February

    வலை பின்னும் சிலந்தி ஆணா? பெண்ணா?

    அல்குர்ஆனில் ‘அல் அன்கபூத்’ (சிலந்தி) என்ற பெயரில் தனி அத்தியாயம் உள்ளது. அரபு மொழியில் எல்லாவற்றிலும் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இது வேறு மொழிகளில் இருக்காது. உதாரணமாக சூரியன், சந்திரன், வீடு… போன்ற அனைத்திலும் இலக்கண அடிப்படையில் ஆண்பால், பெண்பால் பார்க்கப்படும். இந்த அடிப்படையில் சிலந்தி என்பது அரபு மொழியின் பிரகாரம் ஆண்பாலாகும். அல்குர்ஆனின் பின்வரும் வசனத்தில் சிலந்தி பற்றி பேசும் போது பெண்பால் வினைச் சொல்லை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். ‘அல்லாஹ்வையன்றி (வேறு) பாதுகாவலர்களை எடுத்துக் கொண்டோரின் உதாரணம், சிலந்தியின் உதாரணத்தைப் போன்றதாகும். அது ...

  • 19 February

    குர்ஆன் விளக்கம் – இறைத்தூதர்களுக்கு மத்தியில் பாரபட்சம்

    ‘இத்தூதர்களில் சிலரைவிட சிலரை நாம் சிறப்பாக்கி வைத்திருக்கின்றோம். அவர்களில் (நேரடியாக) அல்லாஹ் பேசியவர்களுமுள்ளனர். மேலும் அவர்களில் சிலரின் பதவிகளை அவன் உயர்த்தினான். மர்யமின் மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான சான்றுகளை வழங்கி, ‘ரூஹூல் குத்ஸ்’ (எனும் ஜிப்ரீல்) மூலம் அவரை வலுவூட்டினோம். (தூதர்களான) இவர்களுக்குப் பின் வந்த (சமூகத்த)வர்களுக்கு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் (அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என) அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் தமக்குள் சண்டை செய்திருக்க மாட்டார்கள். எனினும் அவர்கள் (தமக்குள்) முரண்பட்டுக் கொண்டனர். அதனால் அவர்களில் நம்பிக்கை கொண்டவர்களும் ...

January, 2016

  • 11 January

    தாலூத்தும் ஜாலூத்தும்

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் தாலூத்தும் ஜாலூத்தும் ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்” எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?” எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினர். ஆனால், அவர்கள் மீது போர் விதியாக்கப்பட்டபோது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்) ...

October, 2015

  • 12 October

    முத்தலாக் : அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்

    ‘(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக் கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர் களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண முடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேணமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரிந்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, ...