ஆய்வுகள்

April, 2017

March, 2017

January, 2017

  • 13 January

    பைபிளில் முஹம்மத். (05) |இஸ்மாயில் நபியின் சந்ததியில் இறைத்தூதர் முஹம்மத் நபி (ச) | Article.

    அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்) இஸ்மவேல் ஈஸாக் (இஸ்மாயீல்-இஸ்ஹாக்) ஆகிய இரு தூதர்களும் ஆசிர்வதிக்கப்பட்டனர். இஸ்ஹாக் நபியின் சந்ததியில்தான் ஏராளமான இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்மாயில் நபியின் சந்ததியில் ஒரேயொரு இறைத்தூதர்தான் வந்தார். அவர்தான் இறுதி இறைத்தூதர் முஹம்மத் நபியாவார்கள். முஹம்மது நபியை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இஸ்மவேல் – இஸ்மாயில் நபி ஆசிர்வதிக்கப்பட்டார் என்ற பைபிளின் செய்தி பொய்ப்பிக்கப்பட்டதாகிவிடும் என்பது குறித்து ஏற்கனவே நாம் விபரித்தோம். எதிர்பார்க்கப்பட்ட அந்த நபி முஹம்மத்(ச) அவர்களே!: ‘எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: ...

November, 2016

  • 2 November

    பைபிளில் முஹம்மத் (ஸல்) | கட்டுரை.

    பைபிளில் முஹம்மத் (ஸல்) மூஸாவைப் போன்ற தூதர்: மூஸாவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வருவார் என பைபிள் கூறுகின்றது. முன்னறிவிக்கப்பட்ட அந்தத் தூதர் இயேசுதான் என கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால், இஸ்ரவேல் சமூகத்தில் மோஸேவைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி வந்ததில்லை என பைபிளே கூறுகின்றது. அதே வேளை முஹம்மத் நபியை அல் குர்ஆன் மூஸா நபிக்கு ஒப்பிட்டுப் பேசுகின்றது. குறித்த முன்னறிவிப்புக்குப் பொருத்தமானவர் முஹம்மத் நபியா? அல்லது இயேசுவா? இருவரில் அந்த முன்னறிவிப்புக்குரியவர் யார் என்பதையே இத்தொடரில் விரிவாக ஆராயவுள்ளோம். 01. அவர்களுக்காக ஒரு ...

September, 2016

  • 16 September

    அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் | முஹ்கம் முதஷாபிஹாத் | கட்டுரை.

    ‘ஆல்” என்றால் குடும்பம் என்று அர்த்தமாகும். ஆலு இம்ரான் என்றால் இம்ரானின் குடும்பம் என்று அர்த்தமாகும். மர்யம்(அ) அவர்களது தந்தையே ‘இம்ரான்” என்பவராவார். ஈஸா(அ) அவர்களின் பாட்டனாரான இவரையும் இவர் குடும்பத்தையும் இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் புகழ்ந்து பேசுகின்றான். அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பமாக இத குறிப்பிடப் பட்டுள்ளது. ‘நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத் துள்ளான்.” (3:33) இந்த வகையில் இந்த அத்தியாயம் ஆலு இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்) அத்தியாயம் என்று அழைக்கப்படுகின்றது. இது ...

June, 2016

January, 2016

  • 7 January

    நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும்

    நபித்தோழர்களும் சமூக ஒற்றுமையும் பிரிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த சமூக அமைப்பில் இஸ்லாமிய அகீதா போதிக்கப்பட்ட பின்னர் அந்த சமூகம் சகோதரத்துவ சமூகமாக மாறியது. ‘நீங்கள் அனைவரும் (குர்ஆன் எனும்) அல்லாஹ்வின் கயிற்றைப் பலமாக பற்றிப் பிடியுங்கள். மேலும் பிரிந்து விடாதீர்கள். நீங்கள் பகைவர்களாக இருந்தபோது உங்களது உள்ளங்களுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தி, அவனது அருளினால் நீங்கள் சகோதரர்களாக மாறியதையும், நீங்கள் நரகக் குழியின் விளிம்பில் இருந்த போது, அதைவிட்டும் உங்களை அவன் காப்பாற்றி, உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். நீங்கள் நேர்வழி ...

  • 6 January

    முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம்

    முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் முஃதஸிலாக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு வழிகெட்ட கூட்டம் இஸ்லாமிய வரலாற்றில் தோன்றியது. குர்ஆனுக்கும், ஹதீஸிற்கும் மனம் போன போக்கில் விளக்கம் என்ற பெயரில் குதர்க்கமான அர்த்தங்களைக் கற்பித்தனர். தமது அறிவுக்கு முரண்பட்ட பல அம்சங்களை நிராகரித்தனர். ஏராளமான ஹதீஸ்களை நிராகரித்தனர் அல்லது மாற்று விளக்கமளித்தனர். அந்தக் காலத்தில் வாழ்ந்த சில கலீபாக்கள் இவர்களினால் கவரப்பட்ட போது ஆட்சி அதிகாரத்துடன் தமது கருத்தை நிலைநாட்டியதுடன் மாற்றுக் கருத்துடைய அறிஞர்கள் மீது வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டனர். இன்று தம்மை முஃதஸிலாக்கள் என்று அழைத்துக் ...

  • 4 January

    பிக்ஹுல் இஸ்லாம் 14- கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை

    பிக்ஹுல் இஸ்லாம்: 14 கியாமுல் லைல் கியாமுல் லைல் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. 11 ரக்அத்துக்கள்தான் நபி(ச) அவர்கள் தனக்காகத் தேர்ந்தெடுத்த எண்ணிக்கையாகும். அவர்கள் சில போது 11 அல்லது 13 ரக்அத்துக்கள் தொழுதுள்ளார்கள். இந்த எண்ணிக்கையுடன் நிறுத்திக் கொள்வதே சிறந்ததும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதுமாகும் என்பது குறித்து சென்ற இதழில் பார்த்தோம். இனி குறித்த எண்ணிக்கையை விட அதிகமாகவும் தொழலாம் என்ற கருத்துடைய அறிஞர்களின் கூற்றுக்கான ஆதாரங்களை நோக்குவோம். 01: ‘இப்னு உமர்(வ) அறிவித்தார்கள். ...

December, 2015

  • 14 December

    இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள் அழிக்கப்படலாம் என்ற ஆபத்தான நிலையில் இன்ஷூரன்ஸ் செய்யலாமா

    பிக்ஹுன் னவாஸில் பிரச்சினையா சந்தர்ப்பத்தில் மார்க்கச் சட்டம் மார்க்கச் சட்டங்களை இயற்றும் போது சில வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு சில முடிவுகள் செய்யப்படலாம். அந்த முடிவுகள் வேறு சூழல்களுக்குப் பொருந்தாமல் கூட இருக்கலாம். இது போன்ற சந்தர்ப்பங்களில் பத்வா கொடுத்தவர் பற்றி எப்படி நடுநிலையாகப் புரிந்து கொள்வது என்ற விளக்கம் அவசியமாகும். உதாரணமாக, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில் இனக் கலவர சூழல் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள். இனவாதிகளால் முஸ்லிம்களின் பொருளாதார மையங்கள் அழிக்கப்படலாம் என்ற ஆபத்தான நிலை ...