வழிகெட்ட எல்லாப் பிரிவுகளும் நபித் தோழர்களைக் குறை காண்பதை வழிமுறையாகக் கொண்டிருந்தனர். ஷீஆக்களைப் பொருத்தவரை அவர்கள் நபித்தோழர்களில் அதிகமானவர்களைக் காபிர்கள், முர்தத்துகள் என்றே கூறி வந்தனர். இது குறித்து இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்கள் பின்வருமறு கூறியதாக இமாம் இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
வரலாறு
March, 2016
January, 2016
-
12 January
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணிப்படுத்தும் குர்ஆனும்
இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணிப்படுத்தும் குர்ஆனும் ஒருவர் செய்த பாவத்திற்கு மற்றவர் தண்டிக்கப்படமாட்டார் என்பதே புதிய, பழைய ஏற்பாட்டின் போதனையாகும். இந்த போதனையின் அடிப்படையில் கிறிஸ்தவ உலகு நம்பும் பிறவிப் பாவம் என்பதே தப்பானது. மனித இனத்தின் பிறவிப் பாவத்தைப் போக்க இயேசு சிலுவையில் உயிரை அர்ப்பணித்தார் என்பது அதைவிடத் தப்பானதாகும். இயேசு உயிரை அர்ப்பணித்தாரா?: உலகில் பலரும் பலவற்றிற்கு உயிரை அர்ப்பணிக்கின்றனர். பிள்ளையைக் காப்பதற்காக தாய் உயிரை அர்ப்பணிக் கின்றாள். மக்களைக் காப்பதற்காக இராணுவம் உயிரை அர்ப்பணிக்கின்றது. சில தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் ...
-
11 January
தாலூத்தும் ஜாலூத்தும்
அல்குர்ஆன் விளக்கக்குறிப்புக்கள் தாலூத்தும் ஜாலூத்தும் ‘மூஸாவுக்குப் பின் தங்கள் நபியிடம், ‘அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிட எமக்கு ஒரு மன்னரை நியமியுங்கள்” எனக் கேட்ட பனூஇஸ்ராஈல்களின் பிரமுகர்களை (நபியே!) நீர் அறியவில்லையா? அ(தற்க)வர், ‘உங்கள் மீது போர் விதிக்கப்பட்டால் நீங்கள் போராடாது இருந்து விடுவீர்களோ?” எனக் கேட்க, ‘நாம் எமது இல்லங்களையும் எமது குழந்தைகளையும் விட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் போது, அல்லாஹ்வின் பாதையில் போராடாமல் இருக்க எமக்கு என்ன நேர்ந்தது?” எனக் கூறினர். ஆனால், அவர்கள் மீது போர் விதியாக்கப்பட்டபோது அவர்களில் சொற்பமானவர்களைத் தவிர (ஏனையோர்) ...
November, 2015
December, 2014
November, 2014
-
2 November
மூஸா(அலை) அவர்களது சமூகமும் அவர்களது மீறப்பட்ட வாக்குறுதிகளும்
இன்னும் “மூஸாவே! அல்லாஹ்வைக் கண்கூடாக நாங்கள் காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளமாட்டோம்” என்று நீங்கள் கூறியபோது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்களை இடியோசை பிடித்துக் கொண்டதை (எண்ணிப்பாருங்கள்.)” (2:55) அல்லாஹ்வை நேரடியாகக் காணும் வரை உம்மை நாம் நம்பமாட்டோம் என இஸ்ரவேல் சமூகம் கேட்ட போது அவர்கள் இடி முழக்கத்தால் தாக்கப்பட்டார்கள் என இந்த வசனம் கூறுகின்றது. இது இஸ்ரவேல் சமூகத்தின் ஆணவத்திற்கும், அவநம்பிக் கைக்கும் வழங்கப்பட்ட தண்டனையாகும். அவர்களது இந்த வேண்டுதல் மிக மோசமானது என்பதைப் பின்வரும் வசனம் எடுத்துக்காட்டுகின்றது. ...
-
2 November
புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம். 01. அருள் வளம் பொருந்திய பூமி: பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது. “அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71) இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி என பலஸ்தீன பூமி அழைக்கப்படுகின்றது. “எனது ...
-
2 November
பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை
09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர். மற்றும் சிலர் கொள்கை ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் சவுதி மீதுள்ள கோபத்தைக் கக்குவதற்கான ஊடகமாக இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளனர். மற்றும் சிலர் ரிஸானாவை மன்னிக்காத அந்த இறந்த பிள்ளையின் தாயின் கல்மனதைச் சாடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டி ...
Ismail Salafi அஷ்ஷெய்க் இஸ்மாஈல் ஸலபி அவர்களின் அதிகாரபூர்வ இணையதளம்