Author: admin
-
பிடிவாதத்திற்கும் சகிப்புத் தன்மைக்கும் இடையில் விட்டுக் கொடுப்பு
தமிழில் மொழிப்பெயர்க்கப்ட்ட அஷ்ஷைய்க் பின்பாஸ்(ரஹ்) அவர்களின் ஃபத்வா கேள்வி: நமக்குள் ஒன்றுபட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வோம். முரண்பட்ட விடயங்களில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வோம்! என்ற இமாம் ஹஸனுல்பன்னா (ரஹ்) அவர்களது கூற்று சரியானதுதானா? பதில்: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! அவனது தூதர் மீதும் அவரது தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக! மேலே குறிப்பிட்ட கூற்று (தப்ஸீர்) அல்மனாரின் ஆசிரியர் ஷைக் ரஸீத் ரிழா அவர்களுடைய கூற்றாகும். பின்னர் ஷைய்க்…
-
அன்ஸாரித் தோழர்கள் அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும் என பதவிக்காகக் காத்திருந்தவர்களா?
நபித்தோழர்கள் அன்ஸாரிகள், முஹாஜிர்கள் என இரண்டாக வகுக்கப்படுவர். முஹாஜிர் என்றால் மக்காவில் இருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றவர்களைக் குறிக்கும். அன்ஸார் என்றால் உதவியாளர்கள் என்பது அர்த்தமாகும். தம்மை நோக்கி ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்காக அர்ப்பணிப்புக்களைச் செய்த மதீனாவாசிகளே அன்ஸாரிகள் என அழைக்கப்படுகின்றனர். ஷியாக்களும், தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் சமூகத்திற்கு மத்தியில் நபித்தோழர்களைத் திட்டித் தீர்க்கும் வழிகெட்ட கொள்கையுடையவர்களும் இந்த அன்ஸாரி களைப் பதவி மோகம் கொண்டவர்களாக சித்தரித்து வருகின்றனர். நபி(ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரித்…
-
இயக்க வெறி தவிர்த்து இயக்கங்கள் கொள்கை தெளிவு பெற வேண்டும்
எமது நாட்டில் தீவிரவாத இனவாதக் குழுவொன்று சில வருடங்களாகவே இனவாத விஷ விதையை நாட்டில் வளர்த்து வருகின்றது. இக்குழுவினால் சிறுபான்மை சமுதாயங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான எண்ண அலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்களது மத, பொருளாதார, சமூக நிலவரங்கள் பேரினவாத சஞ்சிகைகளில் இலக்குகளாக மாறியுள்ளன. முஸ்லிம்களது பள்ளிவாசல்களையும் வர்த்தக நிலையங்களை யும் இதனால்தான் குறிவைக்கின்றனர். அண்மைக் காலமாக பேரினச் சூறாவளி அளுத்கம, பதுளைப் பகுதியில் மையம் கொண்டு பாரிய அளவில் உயிர், பொருள், சேதங்களை விளைவித்து…
-
ரமழானை வரவேற்போம்
அருள் வளம் பொருந்திய அற்புத மாதமாம் ரமழான் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! பாவ மன்னிப்பும் இரட்டிப்பு நன்மையும் வழங்கப்படுகின்ற இந்தப் புனித மாதத்தின் சிறப்புக்களை அறிந்து பக்குவத்துடனும் அழகிய முறையிலும் இம்மாதத்தினை அனுசரித்து நடக்க நாம் முற்பட வேண்டும். குர்ஆனின் மாதம்: இந்த ரமழானுக்கு அல்லாஹ் வழங்கிய எல்லாப் புனிதத்துவத்துக்கும் அடிப்படையாக அமைவது இம்மாத்தில் இறுதி வேதமாம் அல்குர்ஆன் அருளப்பட்டதேயாகும். “ரமழான் மாதம் எத்தகையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும், (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுமுள்ள…
-
ரமழான் மாத நோன்பு தொடர்பான மார்க்க தீர்ப்புகள்
ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்) நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன். இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் தமிழாக்கம் செய்துள்ளேன். (அபூ அப்னான்) கேள்வி:…
-
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு யார் பொறுப்பு?
2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டில் சுமார் இரண்டரை வருடங்களாக முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான இன, மத வாதப் பிரச்சாரத்தை BBS, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும், ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்களும் முன்னெடுத்து வருகின்றனர். இவர்களது இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட இளைஞர்கள் மூலம் பல பள்ளிவாயில்கள், முஸ்லிம்களது வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டு வந்தன. அனுராதபுர தர்கா உடைப்பு முதல் தர்கா நகர், பேருவலை, பாணந்துறை போன்ற பிரதேசங்களில் முஸ்லிம்களின் சொத்தழிப்பு வரை இந்த…
-
தராவீஹ் நீட்டிச் செய்வதா? கூட்டிச் செய்வதா? எது சிறந்தது?
“கியாமுல்லைல்” என்றால் இரவுத் தொழுகை என்பது அர்த்தமாகும். பொதுவாக, இஷாவின் சுன்னத்திலிருந்து பஜ்ர் வரை தொழப்படும் நபிலான வணக்கத்திற்கே இவ்வார்த்தை பயன்படுத்தப்படும். இது ரமழான் மற்றும் ரமழான் அல்லாத அனைத்துக் காலங்களிலும் ஆர்வமூட்டப்பட்ட ஆன்மீகப் பக்குவத்திற்கு அடிப்படையாக அமையக் கூடிய முக்கிய தொழுகையாகும். ரமழான் காலங்களில் இந்தத் தொழுகைக்கு அதிகூடிய முக்கியத்துவம் உள்ளது. பொதுவாக ரமழானில் தொழப்படும் கியாமுல்லைல் தொழுகைதான் “தராவீஹ்” என அழைக்கப் படுகின்றது. இந்தத் தொழுகையின் ரக்அத்துக்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில் அபிப்பிராயப் பேதம்…
-
யஃகூப் நபியின் வஸிய்யத்து (அல்குர்ஆன் விளக்கம்)
“யஃகூபுக்கு மரணம் வந்தபோது (யூதர்களே!) நீங்கள் (அங்கு) பிரசன்ன மாக இருந்தீர்களா? அவர் தனது பிள்ளைகளிடம், “எனக்குப் பின் நீங்கள் எதை வணங்குவீர்கள்?” எனக் கேட்ட போது அவர் கள், “உமது இரட்சகனும் உமது மூதாதையர்களாகிய இப்றாஹீம், இஸ்மாஈல், இஸ்ஹாக் ஆகியோரின் இரட்சகனுமாகிய ஒரே இரட்சகனையே வணங்கி அவனுக்கே நாங்கள் முற்றிலும் கட்டுப்பட்டவர்களாக நடப்போம்” எனக் கூறினர்.” (2:133) யஃகூப் நபி தனது மரண வேளையின் போது தனது புதல்வர்களை அழைத்துத் தனது மரணத்திற்குப் பின்னர் தடம்…
-
மகாமு இப்றாஹீம் (அல்குர்ஆன் விளக்கம்)
கஃபாவில் இருக்கின்ற மகாமு இப்றாஹீம் குறித்து இந்த வசனம் பேசுகின்றது. இதனை ஒரு அற்புதமாகவும், அத்தாட்சியாகவும் அல்குர்ஆன் எடுத்துக் காட்டுகின்றது. இது குறித்து மற்றுமொரு வசனம் இப்படிப் பேசுகின்றது “அதில் தெளிவான அத்தாட்சிகளும், மகாமு இப்றாஹீமும் உள்ளன. மேலும் அதில் யார் நுழைகிறாரோ அவர் அச்சமற்ற வராகி விடுவார். மனிதர்களில் அதற்குச் சென்றுவர சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும். எவர் நிராகரிக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.” (3:97) மகாமு இப்றாஹீம்…
-
அரசியல், சமயத் துறையில் நலிந்துவிட்ட சமூகம்
இலங்கை முஸ்லிம்களின் சமய, சமூக, அரசியல் நிலவரம் தொடர்ந்தும் சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழும் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றது. சென்ற நோன்புப் பெருநாள் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறு விட்டது! ஒரு தவறு நடந்தால் அதிலிருந்து பாடம் படித்து, திருந்தி அது போன்ற தவறு மீண்டும் வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும். ஆனால், பிரச்சினைக்கு மற்றுமொரு பிரச்சினையே தீர்வாக மாறி வருகின்றது. நோன்புப் பெருநாள் விவகாரத்தில் ஜம்இய்யதுல் உலமா விட்ட தவறால் இலங்கை முஸ்லிம்களில்…