Author: admin
-

இஸ்லாமிய குடும்பங்கள் எதிர்நோக்கும் நவீன சவால்கள்.
நிந்தவூர் ஜாமிஉத் தவ்ஹீத் வழங்கும்; மாதாந்த உள்ளூர் தர்பிய்யா நிகழ்ச்சி. காலம்: 02.04.2016 தலைப்பு: இஸ்லாமிய குடும்பங்கள் எதிர்நோக்கும் நவீன சவால்கள்.
-

இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும்.
இயேசுவுடன் பரபான் என்பவனும் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டான். இவன் ஒரு திருடன். பஸ்கா பண்டிகையின் போது ஒருவனை விடுதலை பண்ணுவது வழக்கம். அந்த வழக்கத்தின் படி ‘பிலாத்து’ இயேசுவை விடுதலை பண்ண விரும்பினாலும் யூதர்கள் பரபானை விடுதலை பண்ணும் படி கூறினர். அவன் ஒரு திருடனாக இருந்தான் என்று யோவான் கூறுகின்றார். ‘அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலை பண்ண வேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.’ (யோவான் 18:40) யோவானின் கருத்துப்படி அவன்…
-

முன்மாதிரி முஸ்லிம் மாணவ சமுதாயம்.
கம்பஹா மாவட்டத்திற்கான மாபெரும் மாணவர் மாநாடு. இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – திஹாரி. காலம்: 19.03.2016 சனிக்கிழமை, பி.ப: 2.00 மணி முதல் 9.00 மணி வரை. தலைப்பு: முன்மாதிரி முஸ்லிம் மாணவ சமுதாயம்.
-

இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள்.
தலைப்பு: இஸ்லாமிய அகீதாவுக்கு அச்சுறுத்தலாகும் சவால்கள். இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் – பறகஹதெனிய.
-

இஸ்லாமிய நட்பு | பறகஹதெனிய.
24/02/2016 தினத்தன்று பறகஹதெனிய ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப் பள்ளிவாயலில் மஃரிப் தொழுகையின் பின் நடைபெறும் வாராந்த (ஒவ்வொரு புதன்கிழமையில்) அல்குர்ஆன் தப்ஸீர் தொடர் வகுப்பில் அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி அவர்களால் “இஸ்லாமிய நட்பு” எனும் தலைப்பில் ஆற்றிய உரை.
-

அல்குர்ஆன் விளக்கம் | இப்றாஹீம் நபியின் விவாதம்.
‘தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக (கர்வம் கொண்டு) இப்றாஹீமிடம் அவரது இரட்சகன் விடயத்தில் தர்க்கம் செய்தவனை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? இப்றாஹீம், ‘எனது இரட்சகனே உயிர்ப்பிப்பவனும் மரணிக்கச் செய்பவனுமாவான்” என்று கூறியபோது ‘நானும் உயிர்ப்பிப்பேன், மரணிக்கச் செய்வேன்” என்றான். (அதற்கு) இப்றாஹீம் ‘அப்படியானால் நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கின்றான். ஆகவே, அதனை நீ மேற்கிலிருந்து உதிக்கச்செய் (பார்க்கலாம்) என்றார். உடனே நிராகரித்த அவன் வாயடைத்துப் போனான். அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்;.” (2:258)…
-

அல்குர்ஆன் விளக்கம் | மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.
‘இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்”தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ” (2:256)
-

முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (03)|முஃதஸிலாக்களின் அடிப்படைக் கொள்கைகள்.
முஃதஸிலாக்கள் ஐந்து உஸூல்கள் மீது தமது கொள்கைகளைக் கட்டியெழுப்பினர். இஸ்லாத்தின் பெயரில் தோன்றிய எல்லா வழிகெட்ட அமைப்புக்களும் நல்ல லேபல் ஒட்டித்தான் தமது கள்ளச் சரக்கை சந்தைப் படுத்தினர். முஃதஸிலாக்களும் நல்ல பெயரில் தான் தமது வழிகெட்ட கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களது ஐந்து அடிப்படைகள் இவையே!
-

பிக்ஹுல் இஸ்லாம் – (16) | ஸலாதுல் வித்ர்- (8).
வித்ர் தொழுகையின் ரக்அத்துக்கள்: வித்ர் தொழுபவர் 1, 3, 5, 7, 9, 11 என எந்த ஒற்றைப்படையான எண்ணிக்கையிலும் தொழுது கொள்ளலாம். ஒரு ரக்அத்து: வித்ர் ஒரு ரக்அத்தும் தொழலாம் என்பதுதான் பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாகும். அவர்களின் கருத்துக்களுக்குப் பின்வரும் ஆதாரங்களைச் சான்றாக முன் வைக்கின்றனர்.
-

அல்குர்ஆன் விளக்கம் | அல்குர்ஆனின் மகத்துவமிக்க ஆயத்து.
‘(உண்மையாக) வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. அவன் என்றும் உயிருடன் இருப்பவன், நிலைத்திருப்பவன். சிறு தூக்கமோ, பெரும் தூக்கமோ அவனை ஆட்கொள்ளாது. வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்யமுடியும்? (படைப் பினங்களான) அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவர்களுக்குப்பின் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் நாடியவற்றைத் தவிர, அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறியமுடியாது. அவனது ‘குர்ஸி” வானங்களையும் பூமியையும் வியாபித்திருக்கின்றது. அவையிரண்டையும் பாதுகாப்பது…