பருவ வயதை அடையாத 17 வயது அநாதைச் சிறுவன்

அபூஹுதைபா, ஸஹ்லா தம்பதிகள் ஸாலிம் என்ற ஒரு சிறுவரைத் தமது வளர்ப்புக் குழந்தையாக வளர்த்து வந்தார்கள். ஸாலிம் என்பவர் அபூஹுதைபாவின் மகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். அல்குர்ஆன் இந்த உறவு முறையைத் தடுத்த போது ஸாலிம் இளைஞராக இருந்தார்.

அவர்கள் ஸஹ்லா அதாவது, அவரது முன்னைய நாள் வளர்ப்புத் தாயார் சாதாரண ஆடையுடன் இருக்கும் போது உள்ளே வந்து செல்வதால் அபூஹுதைபாவின் முகத்தில் மாற்றம் தெரிந்தது. அது பற்றி ஸஹ்லா (ரழி) அவர்கள் நபி(ச) அவர்களிடம் வினவிய போது ஸாலிமுக்குப் பாலூட்டுமாறும், அதன் மூலம் தாய்-மகன் உறவு ஏற்பட்டுவிடும் என்றும் நபியவர்கள் கூறினார்கள். அவரும் அப்படிச் செய்தார் என புஹாரி, முஸ்லிம் உட்பட பல ஹதீஸ் நூற்களில் ஆதாரபூர்வமான ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1400 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய சில அமைப்புக்கள் இஸ்லாத்தின் எதிரிகளினதும் கிறிஸ்தவர்களினதும் பாணியில் கேள்விகளை எழுப்பி குறிப்பிட்ட ஹதீஸை மறுத்து வருகின்றனர். ஹதீஸில் சொல்லப்படாத கருத்தை ஆபாசமான முறையில் ஹதீஸில் சொருகி இந்த ஹதீஸை அசிங்கப்படுத்தி வருகின்றனர். ஸஹ்லா (ரழி) அவர்களது மார்பில் வாய் வைத்து ஸாலிம்(வ) அவர்கள் பால் குடித்ததாக இந்த ஹதீஸ் கூறுவதாக கிறிஸ்தவர்களும் ஷிஆக்களும் கூறிவந்த கூற்றை தவ்ஹீதின் பெயரில் தமிழ் பேசும் உலகில் நுழைத்து இந்த ஹதீஸை நிராகரிப்பவர்கள் எடுத்து வைத்த ஒரு வாதம்தான் அப்போது ஸஹ்லா(ரழி) அவர்களுக்கு குழந்தை இருக்கவில்லை. குழந்தை இல்லாத பெண்ணின் மார்பில் எப்படிபால் வரும் என்பதாகும். இது தொடர்பில் எம்மிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ‘உண்மை உதயம்’ இஸ்லாமிய மாத இதழ் ஜூன் 2013, இதழ் 184: பக்கம் 50-52 இல் அளித்த விளக்கத்திற்கு onlinepj இணையத் தளத்தில் பதில் கூறப்பட்டுள்ளது. அதற்கான விளக்கத்தை அளிப்பதற்கு முன்னர் மறுக்கப்படும் ஹதீஸ்கள் தொடர்பில் சில தகவல்களைத் தருவது நல்லது எனக் கருதுகின்றேன்.
மூஸா நபியும் மலக்குல் மவ்த்தும் சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்பவர்களுக்கான மறுப்பை பின்வரும் இணையப் பக்கங்களில் காணலாம்.

ஆயிஷh (ரழி) அவர்களது பால்குடி சம்பந்தப்பட்ட அறிவிப்பு தொடர்பான விமர்சனத்திற்கான விளக்கத்தைப் பின்வரும் இணையப் பக்கததில் காணலாம்.
நூறு பேரைக் கொலை செய்தவருக் கான மன்னிப்பு தொடர்பான ஹதீஸ் மறுப்புக்களுக்கான விளக்கத்தைப் பின்வரும் இணைப் பக்கத்தில் காணலாம்.
சுலைமான் நபி சம்பந்தப்பட்ட ஹதீஸை மறுப்போருக்கான விளக்கங்களை ‘உண்மைஉதயம்’ இஸ்லாமிய மாத இதழ்களில் காணலாம். (இதழ் 183, 184, 185 மற்றும் இவ்விதழ்)
இதுவரை இந்த மறுப்புக்களுக்கு பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
அடுத்து ஸாலிம்(வ) அவர்களது ஹதீஸ் தொடர்பில் ஹதீஸில் இல்லாத செய்திகளைச் செருகி சேர்த்து இந்த ஹதீஸை மறுப்பதற்கான விமர்சனங்களைப் பின்வரும் இணையப் பக்க உரைகளில் நீங்கள் காணலாம்.

எனவே, பதில் சொல்லும் பொறுப்பு நம் மீதில்லை. எதிர்த்தரப்பு மீதுதான் இருக்கின்றது என்பதை அறியலாம்.
தற்போது Onlinepj இணையத் தளத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்திற்கு வருவோம்.
நபி(ச) அவர்களது உத்தரவுப் பிரகாரம் ஸஹ்லா(ரழி) அவர்கள் ஸாலிம்(வ) அவர்களுக்குப் பால் புகட்டிய போது அவர்களுக்கு மார்பில் பால் வர வேறு குழந்தைகள் இருந்ததா? என்பதே கேள்வியாகும்.
இந்தக் கேள்விக்கு குறித்த ஹதீஸிலேயே பதில் உள்ளது. நபியவர்கள் பால் கொடுக்கச் சொல்கிறார்கள்; அவர்களும் பால் கொடுத்ததாகச் சொல்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு வேறு குழந்தை இருந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பால் வரும் நிலையில்தான் இருந்துள்ளார்கள் என்பதற்கு குறித்த ஹதீஸே சான்றாக உள்ளது என்பது எமது அடிப்படையான பதிலாகும். எமது விளக்கத்தை முழுமையாக வாசிக்க இந்த இணைப்புக்குச் சொல்லவும்.
குறிப்பு: (தகவல் நம்முடையது. கட்டுரைக்கான தலைப்பு இணையத்தை நடத்துபவர்கள் இட்டது என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.)
துணை சான்றாகத்தான் நாம் வரலாற்றுக் குறிப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டோம். நமது விளக்கத்திற்கு மறுப்புச் சொல்ல வந்தவர் வசதியாக நமது அடிப்படையான வாதத்தை மறந்துவிட்டு வரலாற்றுப் பகுதிக்குள் புகுந்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கதாகும்.
வரலாறு விடயத்தில் நமது விளக்கத்தை முன்வைப்பதற்கு முன்னர் சில முக்கிய செய்திகளைக் குறிப்பிடுவது சிறந்ததாகும் என நினைக்கின்றேன்.
வரலாற்றில் ஒருவரது பிறப்பு, இறப்பு பற்றி எழுதும் போது சில முரண்பாடுகள் எழுவது இயல்பு. பிரபலமான பலரது பிறப்பு விடயத்தில் கூட மாற்றுக் கருத்துக்கள் உள்ளன. இது கவனிக்கத்தக்கதாகும்.
அடுத்து நாம் ஹதீஸை சரி காணும் இலட்சியத்துடன் வரலாற்றை அணுக அவர்கள் ஹதீஸைப் பொய்ப்பிக்கும் இலட்சியத்துடன் வரலாற்றை அணுகுகிறார்கள். இவ்வாறு முரண்பாடான மனநிலையுடன் வரலாற்றை அணுகும் போது பிரச்சினை எழலாம். இங்கு அபூஹுதைபாவின் மகன் முஹம்மது விடயத்தில் சகோதரர் விட்ட அடிப்படையான சில வரலாற்றுத் தவறுகளைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
01) அபூஹுதைபா-ஸஹ்லா தம்பதியினர் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் செய்தபோதுதான் முஹம்மத் என்ற குழந்தையைப் பெற்றனர். அபூஹுதைபா ஹபஷாவிற்கு ஒரு முறைதான் ஹிஜ்ரத் சென்றார். அங்கு ஒரு சில மாதங்கள் தங்கிவிட்டு மக்காவுக்கு வந்துவிட்டனர். இது நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் நடந்தது.
தொடர்ந்து அவர் நபியவர்களின் ஹிஜ்ரத் வரை மக்காவிலேயே இருந்தார்கள். எனவே, முஹம்மத் என்ற குழந்தை நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு கிடைத்தது என்பதுதான் மறுதரப்பாரது வாதம்.
இவர் குறிப்பிடுவது போல் இப்னு அப்துல்பர் போன்ற அறிஞர்கள் குறிப்பிடுவதுஉண்மைதான். (ஆனால் அதே அப்துல்பர் இந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.)
ஆனால் அபூஹுதைபா (வ) அவர்கள் ஹிஜ்ரத் வரை மக்காவில் இருக்கவில்லை. மீண்டும் அவர் ஹபஷாவிற்கு ஹிஜ்ரத் சென்றார் என பல வரலாற்று நூல்கள் கூறுகின்றன. நமக்கு மறுப்புச் சொன்னவர்கள் அதை வசதியாக மறந்துவிட்டனர்É அல்லது மறைத்துவிட்டனர். முஹம்மத் என்கிற குழந்தை ஹபஷாவில் கிடைத்தது என்றுதான் தகவல்கள் கூறுகின்றன. அபூஹுதைபாவின் இரண்டாவது ஹபஷா ஹிஜ்ரத்தை அறியாதவர் முதல் ஹிஜ்ரத்தின் போதுதான் அதாவது, நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில் குழந்தை கிடைத்ததாக யூகித்துள்ளார். ஹதீஸுடன் ஒத்துப் போகும் விதத்தில் சிந்தித்தால் அந்தக் குழந்தை அபூஹுதைபாவின் இரண்டாவது ஹிஜ்ரத்தின் போது மதீனா ஹிஜ்ரத்துக்குச் சற்று முன்னதாகக் கிடைத்திருக்க வேண்டும்.
அபூஹுதைபா(வ) அவர்கள் ஹபஷாவுக்கு இருமுறை ஹிஜ்ரத் சென்றவர் என்பதை பின்வரும் வரலாற்று நூற்கள் உறுதி செய்கின்றன.
image002
மொழிப்பெயர்ப்பு:

‘அபூஹுதைபா ஹபஷாவுக்கான இரண்டு ஹிஜ்ரத்திலும் பங்குகொண்டவராவார். அவருடன் அவரது மனைவி ஸஹ்லா பின்து ஸுஹைலும் கலந்து கொண்டார். அப்போது ஹபஷாவில் அவருக்கு முஹம்மத் என்ற குழந்தை கிடைத்தது.’

(முக்தஸர் தாரீகு திமிஷ்க்: 1/2969)

இவ்வாறே ஸியரு அஃலாமுன் னுபலா 1/137 விலும், இமாம் தஹபீயுடைய ‘தாரீகுல் இஸ்லாம்’ 3/53 விலும், அஸ்ஹாபுல் அஷ;ராப் 1/185, 3/261 விலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, எமக்கு மறுப்பு எழுதியவர் இந்த வரலாற்றுக் குறிப்புக்களை மறைத்துவிட்டு அவர் ஹபஷாவிற்கு ஒரு முறை ஹிஜ்ரத் செய்து சில மாதங்களுக்குள் திரும்பிவிட்டார். இது நபித்துவத்தின் 5 ஆம் ஆண்டு நடந்தது. எனவே, முஹம்மத் என்கிற குழந்தை நபித்துவத்தின் 5 ஆம் ஆண்டு பிறந்தது என்று முடிவு செய்து விடுகின்றார். இது அவர் விட்ட முதலாவது வரலாற்றுத் தவறாகும்.
02. அபூஹுதைபா ஹபஷாவிற்கு  இரு முறை ஹிஜ்ரத் செய்தார் என்று கூறக்கூடிய சிலரும் முதலாவது ஹிஜ்ரத்தின் போது முஹம்மத் என்கிற குழந்தை கிடைத்தாகச் சொல்கின்றனர். இருப்பினும் அவர்கள் முஹம்மத் என்ற இந்தக் குழந்தை பற்றி முரண்பாடான தகவல்களைத் தருகின்றனர். எனவே, அதனை உறுதியாக நம்ப முடியாதுள்ளது. உதாரணமாக,
image004
மொழிப்பெயர்ப்பு:

‘நபி(ச) அவர்கள் மரணித்த போது (முஹம்மத் என்ற) இவர் பதினொரு வயதுடையவராக அல்லது அதை விட (சற்று) அதிக வயதுடையவராக இருந்தார்.’

(ஸியர் அஃலாமுன் நுபலா 5/478)

நபித்துவத்தின் 5 ஆம் ஆண்டில் பிறந்த குழந்தைக்கு நபித்துவத்தின் 23 ஆம் ஆண்டில் (23-5ஸ்ரீ18) சுமார் ஏறத்தாழ பதினெட்டு வயதாக இருந்திருக்க வேண்டும். அதெப்படி அவரது கூற்றுப்படி 11 வயதாக முடியும். நபியவர்கள் ஹிஜ்ரி 10 இல் மரணிக்கும் போது 11 வயதாக இருப்பதென்றால் அவருக்கு ஹிஜ்ரத்தின் போது ஒரு வயதாக இருந்திருக்க வேண்டும்.
03) அடுத்து ஸைனப் (ரழி) அவர்களின் திருமணத்தின் போதுதான் ஸாலிம் (வ) அவர்களுக்குப் பாலூட்டும் நிகழ்ச்சி நடந்தது. ஸைனப்(ரழி) அவர்களின் திருமணம் ஹிஜ்ரி 5 இல் நடந்தது என்று கூறுகின்றார். ஆனால், ஸைனப்(ரழி) அவர்களின் திருமணம் 5 இல் நடந்ததா? 3 இல் நடந்ததா? என்பதில் முரண்பாடு இருப்பதை வசதியாக மறந்துள்ளார்.
image006
மொழிப்பெயர்ப்பு:

‘நபி(ச) அவர்கள் ஸைனப்(ரழி) அவர்களை 3 ஆம் ஆண்டு மணமுடித்தார்கள். 5 ஆம் ஆண்டு என்றும் கூறப்படுகின்றது.’ (தஹ்தீபுத் தஹ்தீப்: 12/449)

இங்கே 05 ஆம் ஆண்டு என்பதை சந்தேகத்திற்குரியதாகக் கூறுவது கவனிக்கத் தக்கதாகும். இதே கருத்துத்தான் அல் இஸாபா பீ தம்யீஸிஸ் ஸஹாபா (7/667) என்ற நூலிலும் குறிப்பிடப்படுகின்றது.
04) அடுத்து ஸாலிம்(வ) அவர்கள் தொடர்பான நிகழ்வு ஹிஜ்ரி 05 இல் நடந்தது என்று குறிப்பிடுகின்றார். இது ஸைனப்(ரழி) அவர்களது திருமணத்திற்கு முன்னரே நடந்த நிகழ்வாகும். இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர் ஒரு மறுப்புக்காக இது பற்றிக் கூறும் போது பின்வருமாறு கூறுகிறார்.
image008
மொழிப்பெயர்ப்பு:

‘ஸாலிம்(வ) அவர்களுக்கு ஸஹ்லா(ரழி) அவர்கள் பால் கொடுத்த நிகழ்ச்சி ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் நடந்ததாகும். ஏனெனில், இந்த சம்பவம் ‘அவர்களை அவர்களது தந்தையர் பெயர் கூறி அழையுங்கள்’ (33:5) என்ற வசனம் அருளப்பட்ட போது நடந்ததாகும். இந்த வசனம் ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் அருளப்பட்டதாகும்.’ (ஸலாதுல் மஆத்: 5/513)

(இந்த நிகழ்வு ஹிஜ்ரி ஆரம்ப கட்டத்தில்தான் நடைபெற்றது என்பதை மறுக்காத இமாமவர்கள் இது தொடர்பான வாதங்களை மறுப்பது நோக்கத்தக்கது.)
ஏற்கனவே நாம் முன்னர் குறிப்பிட்ட ஆதாரங்களின் படி முஹம்மத் என்பவர் ஹிஜ்ரி ஒன்றில் கிடைத்திருந்தால், ஹிஜ்ரத்தின் ஆரம்பப் பகுதியில் நடந்த இந்த நிகழ்வின் போது அவர் இரண்டு வயது அல்லதுஅதைவிட சற்று கூடிய நிலையில் இருந்திருக்கலாம் என்பதை உறுதி செய்யலாம். எனவே, ஸஹ்லா அவர்கள் மார்பில் பால் ஊறும் நிலையில்தான் அப்போது இருந்துள்ளார்கள் என்பது உறுதியாகின்றது.
(05) எமக்கு மறுப்பு எழுதியவர் கூறியது போல் முஹம்மத் என்ற அந்த சிறுவர் நபித்துவத்தின் 05 ஆம் ஆண்டு பிறந்திருந்தால் நபியவர்கள் மரணிக்கும் போது ஏறத்தாள 18 வயது வாலிபனாக இருந்திருக்க வேண்டும். முஹம்மதின் தந்தை ஹிஜ்ரி 12 இல் ஷஹீதானார். அப்போது அந்தக் குழந்தைக்கு 20 வயதாக இருந்திருக்க வேண்டும்.
எமக்கு மறுப்பு எழுதியவரின் கணக்குப் படி ஹிஜ்ரி 05 இல் அந்தக் குழந்தைக்குப் 10 வயது என்றால் ஹிஜ்ரி 12 இல் அவரது தந்தை மரணிக்கும் போது அவரது வயது (10107ஸ்ரீ17) ஆகும். இதனை மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் தகவலைப் பாருங்கள்.
அபூஹுதைபா(வ) அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அந்தச் சிறுவனை உஸ்மான் பின் அப்பான் (வ) அவர்கள் பொறுப் பெடுத்தார்கள். அவர் வாலிபத்தை அடைந்த போது சில பொறுப்புக்களைக் கொடுத்தார்கள். முஹம்மத் கேட்ட பொறுப்பை உஸ்மான்(வ) அவர்கள் கொடுக்காததால் பிற்காலத்தில் இவர் உஸ்மான்(வ) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள்.
image010
மொழிப்பெயர்ப்பு:

(முஹம்மதின்) தந்தை அபூஹுதைபா கொல்லப்பட்ட பின்னர் உஸ்மான்(வ) அவர்கள் இவரைப் பொறுப்பெடுத்து அவர் பெரியவராகும் வரை வளர்த்தார். (உஸதுல் காபா: 1/982) அவர்களது கணிப்பின் படி அப்போது அவரது வயது 17. எமது கணிப்பின் படி ஏறத்தாள 13 வயதாகும் 17 வயது இளைஞரை சிறுவனாகக் கணிக்க முடியுமா?

image012
மொழிப்பெயர்ப்பு:

‘முஹம்மதை உஸ்மான்(வ) அவர்கள் வளர்த்து வந்தார்கள். அவர் வாலிபத்தை அடைந்த போது கடல் போரில் பங்குகொள்ள ஆசைப்பட்டார்….’

(அல் அஃலாம்: 6/79)

உஸ்மான்(வ) அவர்கள் இந்தச் சிறுவனைப் பொறுப்பெடுக்கும் போது அவர் வாலிபத்தை அடையவில்லை என இந்த வரலாறு கூறுகின்றது. இதே கருத்தைப் பல வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
எமக்கு மறுப்பெழுதியவர்கள் போட்ட கணக்குப்படி பார்த்தால் அப்போது அவருக்கு 17 வயதாகின்றது. இது வாலிப வயதாகும். ஆனால், நாம் சொல்லும் கணக்குப்படி பார்த்தால் அப்போது அவருக்கு ஏறத்தாள 13 வயதாகின்றது. இது பராமரிப்பு வயதாகும்.
எம்மை விமர்சித்தவர்கள் 10 வயதுச் சிறுவனைத்தான் பால்குடிக் குழந்தை என்று கூறுகின்றார். மூளை குழம்பிவிட்டது என்றெல்லாம் கூறியது போல் 17 வயதுடையவரை சிறுவன்; வாலிபம் அடையாதவன் என்று நிலைநாட்டும் அளவுக்கு மூளை குழம்பி விட்டது என்றெல்லாம் கூறிக் கேலி செய்யமாட்டோம். ஏனெனில் இஸ்லாம் விமர்சிப்பதிலும் நாகரீகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்துள்ளது.
இதுவரை நாம் குறிப்பிட்டதை சுருக்கமாகத் தருகின்றோம்.
1. ஹுதைபா(வ) அவர்கள் ஹபஷாக்கு இரு முறை ஹிஜ்ரத் சென்றுள்ளார்கள். இரண்டாவது ஹிஜ்ரதின் போது இந்தக் குழந்தை கிடைத்திருக்க வேண்டும்.
2. முதல் ஹிஜ்ரத்தின் போது இந்தக் குழந்தை கிடைத்தது என்று கூறுபவர்கள் நபியவர்கள் மரணிக்கும் போது இந்தக் குழந்தைக்கு 11 வயது என்று கூறி தமக்குள் முரண்படுகின்றனர்.
3. ஹிஜ்ரி 10 இல் இவரது வயது 11 என்றால் இவர் ஹிஜ்ரத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும்.
4. ஸாலிம்(வ) அவர்களது நிகழ்வு ஹிஜ்ரி 05 இல் நடந்தது அல்ல.
5. ஸைனப்(ரழி) அவர்களது திருமணம் ஹி. 05இல் நடந்தது என்பதற்கு மாற்றமாக ஹி. 03 இல் நடந்தது என்றும் வரலாறு கூறுகின்றது.
6. ஸாலிம்(வ) அவர்களது நிகழ்வு ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் நடந்தது என்றும் வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.
7. முஹம்மதின் தந்தை அபூஹுதைபா(வ) அவர்கள் ஹிஜ்ரி 12 இல் கொல்லப்பட்டார். அப்போது முஹம்மத் வாலிப வயதை அடையாத சிறுவனாக இருந்தார். அவரை உஸ்மான்(வ) அவர்கள் பொறுப்பெடுத்து வளர்த்தார்கள் என வரலாறு கூறுகின்றது.
இதன் மூலமாக ஹி. 05 இல் அந்தக் குழந்தையின் வயது 10 என்று கூறுபவர்கள் பொய் சொல்கின்றனர். ஒரு ஹதீஸை மறுப்பதற்காக வரலாற்றைத் திரித்துக் கூறத் துணிந்துள்ளனர் என்பதை அறியலாம். ஹிஜ்ரி 12 இல் அவர் வாலிபத்தை அடையாத சிறுவர் என்றால் அவர் ஹிஜ்ரத்திற்கு 05 வருடங்களுக்கு முன்னர் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஹிஜ்ரத்தின் ஆரம்பத்தில் அவர் குழந்தையாக இருந்திருக்கவே வாய்ப்புள்ளது என்பது சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகின்றது.
இறுதியாக, நபி(ச) அவர்கள் ஸஹ்லா(ரழி) அவர்களுக்குப் பால் கொடுக்குமாறு உத்தரவிட்ட போது அவர்களது மார்பில் பால் ஊற வாய்ப்பில்லையே என கிறிஸ்தவர்கள் எழுப்பிய கேள்வியையும் எடுத்துப் போட்டுள்ளனர்.
அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனின் மூளையில் இருந்து ஷிஆயிஷம் தோன்றியது போல் கிறிஸ்தவர்களினதும் இஸ்லாத்தின் எதிரிகளினதும் மூளையில் இருந்துதான் இந்த ஹதீஸ் மறுப்புச் சிந்தனை தோற்றம் பெறுகின்றது என்பதற்கு இது நல்ல சான்றாகும்.
எனவே, இஸ்லாத்தின் எதிரிகளின் மூளையால் சிந்தித்துப் பார்க்காமல் ஆரம்பகால அறிஞர்கள் இஸ்லாத்தை நோக்கிய விதத்தில் நோக்கி நேர்வழி பெற இந்த சகோதரரை அன்புடன் அழைக்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.