கொள்கை

November, 2014

  • 2 November

    குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவதில் ஸலபுகளின் வழிகாட்டல்

    சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்: ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. “நபி(ச) அவர்கள் ஒரு அன்ஸாரியிடம் உங்களது மகளை ஜுலைபீப்(வ) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின் றீர்களா? எனக் கேட்டார்கள். அவர் மனைவியிடம் கேட்டுச் சொல்வதாகக் ...

  • 2 November

    ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுமா?

    ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிதாபுகளில் ஏராளமான ஹதீஸ்கள் சிலரால் மறுக்கப்பட்டு வருகிறது. ஸஹீஹான ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுகிறதா அல்லது மனிதனின் அறிவு குர்ஆனுக்கு முரண்படுகிறதா என்பது குறித்த ஓர் பார்வையே இந்த சொற்பொழிவு.

  • 2 November

    தடம் புரண்டவர்கள் யார்?

    PJ என்றழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கடந்த கால, இன்றைய நிலைபாடு குறித்த ஓர் பார்வை. தடம் புரண்டவர்கள் யார் என்று நீண்ட பட்டியியலை வெளியிட்டு தாங்கள் மட்டுமே அன்று முதல் இன்று வரை ஒரே கொள்கையில் உறுதியாக இருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மவ்லவி பீ. ஜைனுல் ஆபீதீன் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் காலஓட்டத்திற்கேற்ப எவ்வாறு தங்களது கொள்கைகளை சட்டையை மாற்றுவது போன்று மாற்றியுள்ளார்கள் என்பதனை பீ.ஜைனுல் ஆபிதீன் கடந்த காலத்தில் ஏழுதியவைகளிலிருந்து அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் இலங்கை மவ்லவி அவர்கள் வெளியிடுகின்றார்கள் – விரிவான ...

  • 2 November

    ஷீஆக்களிடம் சில கேள்விகள் – 06

    நபி(ச) அவர்கள் மரணித்த பின்னர் அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க முற்பட்டனர். அபூபக்கர், உமர், அபூ உபைதா(வ) ஆகியோர் அவர்களிடம் சென்று பேசிய பின்னர்தான் அந்த இடத்தில் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்யப்பட்டது. அன்ஸாரிகள் தமக்குள் ஒருவரைத் தலைவராகத் தீர்மானித்த பின்னரும் தமது முடிவில் இருந்து பின்வாங்கி ஏன் அபூபக்கர்(வ) அவர்களுக்கு பைஅத் செய்தார்கள் என்று கேட்டால் பின்வரும் ஏதானும் ஒரு பதிலை ஷீஆக்கள் கூறலாம். 1. அபூபக்கர் ஆயுத பலம் மூலம் அவர்களை அடக்கி பைஅத் செய்வித்துக் கொண்டார்கள். இப்படிக் கூறினால் ...

  • 1 November

    அசத்தியவாதிகளை அடையாளம் காட்டும் சூனிய பத்வா

    சூனியம் என்றொரு கலை உள்ளது. அது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சூனியத்தைக் கற்பது, கற்பிப்பது, செய்வது, செய்விப்பது அனைத்துமே குப்ரை ஏற்படுத்தும் கொடிய குற்றங்களாகும். அல்லாஹ்வின் நாட்டமின்றி சூனியத்தினால் யாரும் யாருக்கும் எவ்விதத் தீங்கையும் ஏற்படுத்திவிட முடியாது என்பது அஹ்லுஸ் சுன்னாவின் அகீதாவாகும். நாங்கள்தான் சத்தியத்தின் ஏகபோக உரிமையாளர்கள் என கூறித் திரியும் ஒரு கும்பல், ‘சூனியத்தினால் அல்லாஹ் நாடினால் பாதிப்பு ஏற்படும்’ என நம்புபவர்கள் முஷ்ரிக்குகளாவர். அவர்களுக்குப் பின்னால் தொழக் கூடாது. நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யபட்டதை நம்புபவர்கள் முஷ்ரிக்குகள். சூனியத்தில் நுணுக்கமான ‘ஷிர்க்குகள் ...

  • 1 November

    அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-3)

    குர்ஆன், சுன்னா இரண்டுமே வஹி எனும் வேத வெளிப்பாடு. இரண்டும் அல்லாஹ்விடமிருந்து பெறப்பட்டவையே. எனவே இரண்டுக்குமிடையில் முரண்பாடு இருக்க முரண்பாடு இருப்பது போல் தோன்றினால் நமது அறிவில்தான் ஏதோ கோளாறு இருக்க வேண்டும். ஹதீஸில் ஒரு நாளும் கோளாறு இருக்காது. நாம் புரிந்து கொண்டதில் எங்கோ ஒரு இடத்தில் தவறு விட்டிருப்போம்.  எனவே, குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸும் முரண்படுவது போல் தோன்றினால் இரண்டுக்குமிடையில் இணக்கம் காண முயற்சிக்க வேண்டும். முடியாமல் போனால் இரண்டுமே அல்லாஹ்விடமிருந்து வந்தது. எனவே, இரண்டையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் என ...

  • 1 November

    அல்குர்ஆனும் – சுன்னாவும் முரண்படுமா? (தொடர்-2)

    அல் குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை. அப்படி முரண்பாடுகள் இருந்தால் அது இறை வேதமாகவும் இருக்க முடியாது என அல் குர்ஆனே கூறியுள்ளது. அல் குர்ஆனில் சில வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்போல் தோன்றுகின்றன. அவற்றை ஆழமாக அவதானித்துப் பார்த்தால் அவற்றுக்கிடையே முரண்பாடு இல்லையென்பதை உணர்ந்து கொள்ளலாம். அப்படி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் இரண்டும் என் இரட்சகனிடமிருந்து வந்தவை என்று ஈமான் கொள்ள வேண்டும். இவ்வாறே அல் குர்ஆனுக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸுக்கும் இடையில் முரண்பாடு இல்லை. சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போல் தென்பட்டாலும் ஆழமாக அவதானித்தால் முரண்பாடு ...