கேள்வி பதில்

April, 2016

January, 2016

 • 1 January

  உசூலுல் ஹதீஸ் சம்பந்தமாக வந்த கேள்வி 1

  நபி (ஸல்) அவர்களின் சொல் அனைத்தும் வஹி என்றால்,விவசாயத்தில் மகரந்த சேர்க்கை  செய்யாமல் இருக்கலாமே என்று கூறியதை ஸஹாபாக்கள் கடைப்பிடித்த பொழுது  விவசாயத்தில் விளைச்சல் குறைந்ததை அறிந்த நபி (ஸல்) அவர்கள் நான் மார்க்கம் சம்பந்தமாக கூறியதை எடுத்துக்கொள்ளுங்கள் உலக காரியங்களில் எனது கருத்தை கூறினால் அதை கடைபிடிக்க வேண்டியதில்லை என்று கூறினார்கள், இதை நாம் எப்படி புரிந்து கொள்வது?   Audio mp3 (Download)

September, 2015

 • 3 September

  பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?

  பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர். சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது பொதுவாக மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட அம்சமாகும். தபூக் போரில் பின்தங்கிய கஃப் இப்னு மாலிக்(வ) அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்கிய போது நபித்தோழர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளனர். ...

July, 2015

 • 5 July

  பெண்கள் பள்ளிக்குச் செல்லலாமா?

  ரமழான் காலங்களில் பெண்கள் மஸ்ஜிதுக்குச் செல்கின்றனர். பெண்கள் மஸ்ஜிதுக்குச் சென்று தொழுவது ஆகுமானதா? என்ற ஐயம் பலருக்கும் எழலாம். பொதுவாக ரமழான் காலத்திலும் சரி, ஏனைய காலங்களில் ஐவேளைத் தொழுகைக்கும் சரி பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி உள்ளது. ஆனால், பெண்கள் பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்ததாகும். நபி(ச) அவர்களது காலத்தில் பெண்கள் ஐவேளைத் தொழுகைக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். நபி(ச) அவர்கள் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கவும் இல்லை, ஆர்வமூட்டவும் இல்லை. அவர்கள் பள்ளிக்கு வருவதாயின் பேண வேண்டிய ஒழுங்குகளைப் போதித்தார்கள். ...

 • 5 July

  குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா?

  நீண்ட நேரம் குர்ஆன் ஓதித் தொழுவதற்காக குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உண்டு. அதிகம் மனப்பாடம் இல்லாதவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி(ச) அவர்கள் சிறு குழந்தையைச் சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள். ஆயிஷா(ரழி) அவர்களின் அடிமை ஒருவர் குர்ஆனைப் பார்த்து ஓதி அன்னையவர்களுக்கு இமாமத் செய்துள்ளார்கள். (புஹாரி) எனவே, குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவதற்குத் தடை இல்லை. இருப்பினும் முன்னால் பெரிய முஸ்ஹபை வைத்து அதைப் பார்த்துத் தொழ முடியுமாக இருந்தால் தக்பீரைப் ...