Category: முஸ்லிம் உலகு
-
உலகை ஆளும் ஊடகம்
ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர். “தெரிவிப்பது நாங்கள்; தீர்மானிப்பது நீங்கள்” என ஊடகங்கள் கூறினாலும் மக்கள் எப்படித் தீர்மானிக்க வேண்டும் என அவர்கள் நினைக்கின்றார்களோ அதற்கு ஏற்பவே செய்திகள்…
-
நெஞ்சை விட்டும் அகலாத மாறாத வடுக்கள்
1995 இல் அதாவது 18 வருடங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையொன்றை இங்கே மீள் பிரசுரம் செய்கின்றோம். ஒரு முறை முழுமையாக வாசித்துப் பாருங்கள். இலங்கை அரசிற்கும் புலிகளுக்கு மிடையிலான யுத்த நிறுத்த ஒப்பந்தம் 1995 ஏப்ரல் 19 இல் கடற்படையின் “ரனசுரு” “சூரியர்” ஆகிய பீரங்கிப் படைகளைப் புலிகள் வெடிக்கச் செய்ததுடன் முறியடிக்கப்பட்டது. மூன்றாம் ஈழப் போர் ஆரம்பமானது. இத்தோடு இலங்கையில் ஓர் அரசியல் அலை ஏற்பட்டது எனலாம். பொதுமக்களில் அநேகமானோர் அன்றாட அரசியல் நிலவரங்களை அறிவதில்…
-
இலங்கை முஸ்லிம்கள் அடுத்து என்ன செய்யலாம்
அனுராதபுர ஷியார உடைப்பு முதல் இன்றுவரை முஸ்லிம்கள் பல்வேறுபட்ட இனவாத செயற்பாடுகளையும் அது தொடர்பில் அரசின் அசமந்தப் போக்கையும் கண்டு மனம் நொந்து போயுள்ளனர். கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் எனக் களைத்துப் போயுள்ளனர். மன ரீதியாக முஸ்லிம்கள் பெரும் உளைச்சலுக்கும் சோர்வுக்கும் உள்ளாகியுள்ளனர். எனவே, முதலில், 1. முஸ்லிம்களுக்கு மன ஆறுதல் தரக்கூடிய விதத்தில் எமது பேச்சு, எழுத்து, செயற்திட்டங்களை அமைக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் உலமாக்களும் இயக்கங்களும் அச்சமூட்டும் உரைகளையும் உபதேசங்களையும் குறைத்து ஆறுதல் கூறி…
-
தலையங்கம் (இலங்கை முஸ்லிம்கள்)
முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்டங்கள், வன்முறைகள் என்பன இலங்கை நாட்டுக்கு ஒன்றும் புதியதல்ல. ஆனால் சுமார் ஒன்றரை வருடங்களாக தொடர்ந்தும் முஸ்லிம்கள் மன உழைச்சலுக்கும், மத நிந்தனைகளுக்கும் அவதூறுப் பிரச்சாரத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருவது இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும். 17.03.2013 கண்டியில் நடைபெற்ற பொதுபலசேனாவின் பொதுக் கூட்டத்தில் தமக்குப் பின்புலமாக இருப்பது யார் என்பதை மிகத் தெளிவாகவே அவர்கள் அறிவித்துவிட்டார்கள். சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டியவர்களும் அரசியல் யாப்பின் அடிப்படையில் மக்களை வழிநடத்த வேண்டியவர்களும் இனவாத,…
-
பொதுபலசேனா வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?
பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும்.முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நாநூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை பொலிஸார் பார்த்திருக்க உடைத்தனர். இது வஹாபிகளுக்குரியதா? வஹாபிகள் ஷியாரங்கள் உடைக்கப்பட வேண்டும் என்ற…
-
ஈரமுள்ள தமிழ் இதயங்கள் எங்கே!
தமிழ்-சிங்கள இனப் பிரச்சினையின் போது முடிந்தவரை நாம் இரு தரப்பு மக்களுக்கும் உயிர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம். தமிழ் இளைஞர் ஒருவருக்காக ஒரு முஸ்லிம் கிராமமே பாரிய சவாலைச் சந்தித்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். நடந்த ஆண்டு நினைவில் இல்லை. நான் சின்னப் பிள்ளை. அப்போது திருகோணமலை ஜமாலிய்யா நாம் வசித்து வந்தோம். எமது வீட்டு வேலியுடன் சிரிமாபுர என்ற சிங்களப் பகுதி ஆரம்பமாகியது. இனக் கலவரக் காலம் அது. ஒரு…
-
சம்பிக்க ரணவக்கவின் சரித்திரப் புரட்டு
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மை சமூகத்தினர் வெறுப்புக் கொள்ளும் விதத்தில் அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களில் அதிகமானனோர் நல்ல மக்களாவர். ஒரு சின்னஞ் சிறு குழுவினர் முஸ்லிம்கள் மீது வெறுப்பேற்றும் வண்ணம் அவதூறு பரப்பி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு தழுவிய இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முயற்சித்து வருகின்றனர். மஸ்ஜித்களுக்கு எதிராகச் செயற்படுதல், முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் சிக்கலை உண்டுபண்ணுதல் என இவர்களது தேசத் தூரோகச் செயல்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.…
-
புனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸாவும்
பலஸ்தீன் பூமியை இஸ்லாம் புனித பூமி என்று கூறுகின்றது. அங்குள்ள மஸ்ஜிதுல் அக்ஸா என்பது முஸ்லிம்களின் முதல் கிப்லாவாகும். இது குறித்த சில குறிப்புக்களை இந்த ஆக்கத்தில் முன்வைக்க விரும்புகின்றோம். 01. அருள் வளம் பொருந்திய பூமி: பலஸ்தீன் பூமி இஸ்ரவேல் சமூம் உருவாக முன்னரே பரகத் பொருந்திய பூமி என அழைக்கப்பட்டது. “அகிலத்தாருக்கு எப்பூமியில் நாம் பாக்கியம் அளித்தோமோ, அதன்பால் அவரையும் லூத்தையும் (அனுப்பிக்) காப்பாற்றினோம்.” (21:71) இந்த வசனத்தில் அகிலத்தாருக்காக அருள் பொழியப்பட்ட பூமி…
-
பலரின் கண்களைத் திறக்கச் செய்து கண்மூடிய மங்கை
09.01.2013 அன்று 11.40 மணியளவில் ரிஸானாவிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு பாரிய அதிர்வுகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாத்தின் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலர் இதைச் சாட்டாக வைத்து ஷரீஆ சட்டம் காட்டு மிராண்டித்தனமானது, கொடுமையானது எனக் கூப்பாடு போடுகின்றனர். மற்றும் சிலர் கொள்கை ரீதியாகவும் நடத்தை ரீதியாகவும் சவுதி மீதுள்ள கோபத்தைக் கக்குவதற்கான ஊடகமாக இந்த சம்பவத்தைக் கையில் எடுத்துள்ளனர். மற்றும் சிலர் ரிஸானாவை மன்னிக்காத அந்த இறந்த பிள்ளையின் தாயின்…
-
அமெரிக்காவின் இரட்டை வேடம்
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மத குருவும், சினிமா தயாரிப்பாளரும் இணைந்து வெளியிட்ட ”Innocence of Muslims” ‘ என்ற சினிமா இன்று உலக முஸ்லிம்களையே குமுறச் செய்துள்ளது. இந்த சினிமாவின் ஒரு காட்சியைக் கண்டால் கூட உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள முஸ்லிமும் எரிமலையாய் குமுறவே செய்வான். அமெரிக்காவினதும் கிறிஸ்தவ உலகினதும் விஸமத்தனத்தின் உச்சக் கட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது. நபியவர்களுக்கு உருவம் கொடுப்பதில்லை என்ற கொள்கையைக் கோடான கோடி முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளாக உறுதியுடன்…